sport

வெத்திலை கறை.. அழகான சிரிப்பு.. சுள்ளுன்னு ஒரு அடி.. உயிர் எங்கே போகிறது! | inkpena uyir enge pogirathu series part 2

Essays

oi-Arivalagan ST

|

வாழ்வில் எத்தனையோ மரணங்கள் நம்மை கடந்து போகலாம் . சில மரணங்கள் மனத்துக்குள் ஆழமாக ஊடுருவி ஒரு வலியைத் தரும் . சில மரணங்கள் பாவம் என்று உச்சு கொட்ட சொல்ழும். சில மரணங்கள் என்னடா கடவுள் இவர் என்று புலம்பச் சொல்லும் . சில மரணங்கள் மட்டும் இந்த உயிர் எங்கே போகிறது என்ற கேள்வியை எழுப்பிச் செல்லும்.

ஆனால் மேல சொன்ன எந்த உணர்வையும் தராத ஒரு மரணத்தைப் பற்றி தான் இன்று உங்களிடம் பேசப் போகிறேன். அந்த மரணம் அதில் எனக்கு வருத்தமில்லை . அந்த மரணத்தில் எனக்கு துக்கம் நெஞ்சை அடைக்கவில்லை.

ஏன் துக்கம் துளி அளவு கூட இல்லை . அப்படி ஒன்றும் மறைத்த உயிர் எனக்கு வேண்டாதவர் இல்லை. என்ன செய்ய. பாவம் அப்போ மரணம் என்று அறியா வயசு எனக்கு. சின்னதாய் உடுப்பு உடுத்தி விளையாடி கிடந்த பருவமாய் இருக்கலாம்.

நார்க் கட்டில் பாட்டி

நார்க் கட்டில் பாட்டி

ஓட்டை ஓட்டையாய் இருக்கும் அந்த நார் கட்டில் மட்டும் இன்னமும் நல்லா நினைவில் இருக்கு. எப்போதும் நானும் பாட்டியம்மாவும் சேர்ந்து படுக்கும் கட்டில் அது தான் . அன்னைக்கும் அப்படி தான் பாட்டியம்மா கிட்ட படுத்து கிடந்தேன் . பாவம் பேசாமல் கிடந்த பாட்டியம்மா தூங்கி கொண்டிருந்ததாக நினைக்கிற அளவுக்கு அறியா வயசு . அப்போது வீடெல்லாம் கூட்டமாக இருந்திருக்கலாம். அழுகை சத்தம் கேட்டு இருக்கலாம். எதற்கும் அழாத எங்க அப்பா கூட அவங்க அம்மாவின் மரணத்துக்கு கண்ணீர் சிந்தி இருக்கலாம். ஆனா எதையும் என்னால நிச்சயமா சொல்ல முடியல . எனக்கு ஞாபகம் இருப்பதெல்லாம் நான் அவங்க கிட்ட படுத்து கிடந்தது மட்டும் தான். அம்மா நான் வளர்ந்த பிறகு அடிக்கடி சொல்லுவா. பாட்டியை தூக்கிட்டு போறவரை பாட்டிகிட்டே தான் படுத்து கிடந்த நீ என்று.

ஐஸ் பெட்டி இல்லை

ஐஸ் பெட்டி இல்லை

நல்ல காலம் அப்போ இப்போ இருக்கிற மாதிரி ஐஸ் பெட்டி வாங்கிற வசதியும் எங்களுக்கு இல்ல. ஐஸ் பெட்டில வைக்குற அளவுக்கு பாட்டியோட பையன் எல்லாம் வெளிநாட்டிலோ தூரத்து ஊர்லயோ இல்ல. எல்லாரும் அருகருகேதான். அதுனால தான் பாட்டிக்கு அந்த நார் கட்டிலும் எனக்கும் அவங்க கூடவே படுத்து கிடக்கும் வாய்ப்பும் கிடைச்சது போல. அப்போ எனக்கு ரொம்ப சின்ன வயசு என்பதால், பாட்டி பத்தி எனக்கு பெரிய பெரிய நினைவு இல்ல. அவங்க வண்ண வண்ணமா சேலை உடுத்து பார்த்ததில்லை. பாட்டிக்கு எப்போதும் ஒரே மாதிரி நீல சேலை தான். அதுக்கு ஒரு வெள்ளை ரவிக்கை .அதுவும் ரொம்ப நீளமாக இருக்கும் அந்த ரவிக்கை. அந்த கால துணி தைப்பு அப்படி . அப்புறம் சேலைக்கு பின்லாம் குத்தி பார்த்தது இல்லை . சுருக்கியும் வச்சு பார்த்ததில்லை . அப்படி நீளமா ஒரு விதமா இருக்கும் பாட்டியோட சேலை கட்டு. பிரான்சிஸ்கம்மாள் கட்டு. அது தான் எங்க பாட்டியம்மா பேரு.

READ  டென்னிஸ் - மனச்சோர்வை எதிர்த்துப் போராடிய பிறகு இப்போது வலுவாக இருப்பதாக அமெரிக்காவின் டீன் காஃப் கூறுகிறார்

வெத்திலை கறை

வெத்திலை கறை

கலர்னு சொன்னா பாட்டியமா, எலுமிச்சை கலர் . அந்த வயசிலே நல்ல கலர் . பாட்டி பத்தி வேற என்ன சொல்ல. அவங்க என்னை பள்ளிக்கு கைபிடித்து அழைத்து போனாங்க.. அப்புறம் தேங்கா மிட்டாய் வாங்கி தருவாங்க. சாதம் ஊட்டி தருவாங்க. அப்படி எல்லாம் சொல்ல எனக்கு எந்த நினைவும் இல்ல. எனக்கு இருக்கிற நினைவு எல்லாம் அந்த நார் கட்டிலும் நானும் அவளும் தான். சாய்வு நாற்காலில் அவங்க மடில சாஞ்சி கிடந்தது . அப்புறம் பாட்டியம்மா கூட எங்க வீட்டு தென்னை மரத்தடியில் கொச்சங்காய் பெருக்குவது அம்புட்டு தான். அப்புறம் இன்னொன்னு முக்கியமா இருக்கு எப்போதும் அவங்க வாயில் இருக்கும் வெத்திலை கறை.

ஈக்கல் குச்சி

ஈக்கல் குச்சி

அப்புறம் எங்க வீட்டில தினம் சாயந்திரம் ஒரு மாலை ஜெபம் உண்டு. அந்த நேரத்தில் பேச கூடாது . நாங்க சின்ன வாண்டுகள் என்பதால் நமக்கு இருப்பு கொள்ளாது. ஒரு இடத்தில் இருக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டமாச்சே அப்போ. அப்புறம் பேசாம வேற எப்படி ? குடஞ்சிகிட்டு இருக்கிற நாங்க அதை பார்த்ததும் கப் சிப் ஆகிடுவோம். சாய்வு நாற்காலி ஒன்றில் அமர்ந்திருக்கும் பாட்டி கையில் இருக்கும் ஈக்கல் தான் அது (தென்னை இலை குச்சி தான் ). ஒரு அடி விழுந்தாலும் சும்மா சுள்ளுனு விழும். பேசினா குச்சி நம்ம பக்கம் திரும்பிடும் . அந்த குச்சியோட தான் பாட்டி முகம் நினைவிருக்கு.

மடி மீது கிடைத்த சூடு

மடி மீது கிடைத்த சூடு

பாட்டியம்மா பெருசா எங்களை செல்லம் கொஞ்சியதில்லை. உண்மையை சொல்லனும்னா அவங்க ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபிசர் னு இப்போ தோணுது. ஆனா அதுக்கும் காரணம் இருக்கும். அப்பா சின்ன வயசா இருக்கும்போதே அவங்க பப்பா அதான் எங்க தாத்தா இறந்துட்டாராம். அப்படி இருக்கையில் அந்த 8 பிள்ளைகளையும் பாட்டி கரை சேர்க்க என்ன பாடு பட்டிருக்க வேண்டும். என்ன கண்டிப்பு காட்டி வளர்த்திருக்கணும். அதனால தான் அவங்க ஒருவேளை எப்போதும் கண்டிப்போடு இருந்திருக்கலாம். அதுக்குன்னு கனிவு இல்லாம இல்ல. பாட்டியோட மடியில் இருக்கிற சூடு இருக்கே அது இப்பவும் நினச்சா சுகமா இருக்கு. பாட்டி மடியிலே படுத்து உறங்கினது, பாட்டி நார் கட்டிலில் அவங்க முந்தானைக்குள் தூங்கிய சுகம் இதுக்கெல்லாம் வேறு ஈடு அதுக்கு அப்புறம் எனக்கு கிடைக்கவே இல்ல.

READ  பேண்டெர்லிகா - கால்பந்துக்கு திரும்பிய பேயர்ன் முனிச் 2-0 என்ற கணக்கில் யூனியனை வீழ்த்தியது
-->

போட்டோ

போட்டோ

அம்மா கிட்ட பாட்டி எங்கனு நான் கேட்டிருக்கலாம் . பாட்டி ஒருவேளை ஊருக்கு போயிருக்காங்க னு சொல்லி இருக்கலாம். பாட்டி ஏன் வரவே இல்லனு நான் நினச்சிருக்கலாம். ம் உயிர் எங்கே போகிறது ? இந்த கேள்வியை மரணங்கள் எழுப்பாமல் போவதில்லை. ஆனா எந்த கேள்வியும் இல்லாம நான் கடந்து போன மரணம் இது தான். ஒரே ஒரு போட்டோ இருக்கு இன்னமும் என் ஆல்பத்தில். நீல சேலையோடு வெத்தலை கரை தெரிய சிரிக்கும் பிரான்சிஸ்கம்மாள் பாட்டி. அந்த பாட்டியமா கையில் வெளிர் பச்சை உடுப்பில் நான். போட்டோ ஆல்பத்தில் மட்டுமல்ல என் மனசிலும் இன்னமும் ஒட்டிகிட்டே தான் இருக்கு.

(தொடரும்)

– இங்க்பேனா

[பகுதி: 1]

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள்
– பதிவு இலவசம்!

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
Close
Close