பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டப் பேரவைக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுக்தேவோ பகத் வெற்றி பெற்றுள்ளார்.  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்.

பீகார் தேர்தலுக்குப் பிறகு மத்திய பிரதேசத்தில் நடந்த எம்பி தொகுதிக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றது. அதுபோல தற்போது ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் வென்றுள்ளது. இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆள்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.