ஆன்மிகம் இந்தியா செய்திகள்

’சபரிமலைக்கு ஏன் பெண்கள் போகக்கூடாது?’

சபரிமலை கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் செல்லக்கூடாது என கோவில் நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பக்திபசாரிஜா, லட்சுமி சாஸ்திரி உள்ளிட்டோர் சார்பில் 2006 ஆம் ஆண்டு பொது நல வழக்கு தொடரப்பட்டது.

கோவில் நிர்வாகத்தின் உத்தரவை மாநில அரசும் பின்பற்றுவதால், பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது, இந்திய அரசியல் சாசனப்பிரிவு 14-ன் படி ஆண், பெண் சரிநிகர் என்ற பிரிவை சிதைப்பதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, பெண்களை சபரிமலை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

மேலும் சபரிமலை கோவில் நிர்வாகத்திற்கு ஆதரவாக, கேரள அரசு இந்து அறநிலையத்துறை சட்டத்தில் கொண்டு வந்த திருத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இம்மனு மீது இன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாக, அரசியலமைப்புக்கு மாறாக பெண்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்க முடியாது என தெரிவித்துள்ளனர். மேலும்,  சபரிமலைக்கு ஏன் பெண்கள் போகக்கூடாது? என ஒரு வாரத்திற்குள் திருவிதாங்கூர் தேவஸம்போர்டு, கேரள அரசு மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.  வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை உச்சநீதிமன்றம் அடுத்த மாதம் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததும் உத்தரவிட்டனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.