அரசியல் இந்தியா சமூகம் சர்ச்சை சிறப்பு கட்டுரை பத்தி

அம்பேத்கர் ஆர் எஸ் எஸ்ஸை ஆதரித்தாரா? ஆர்கனைசரின் விஷப் பிரச்சாரத்துக்கு தமிழக அறிவுஜீவிகளின் எதிர்வினை என்ன?

அ. மார்க்ஸ்

நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் ஒரு செய்தி. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நூற்றி இருபத்தைந்தாவது பிறந்த நாளை ஒட்டி ஆர்.எஸ்.எஸ் சின் அதிகாரபூர்வ இதழான ‘ஆர்கனைசர்’ இதழில் அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ்சைப் பாராட்டினார் எனவும் ஆர்.எஸ்.எஸ்ஸில் சாதி வேறுபாடுகள் முதலியன இல்லை எனவும் இம்மாதிரியான பல விஷயங்களை எழுதியிருந்தனர்.

ஹைதராபாத் பல்லைக் கழகப் பேராசிரியர்கள் கே. லக்‌ஷ்மணையா மற்றும் கே.ஒய்.இரத்தினம் உட்பட நான்கு தலித் அறிவுஜீவிகள் இந்த அபத்தங்களை மறுத்தும், அம்பேத்கர் எப்படி இந்துத்துவக் கருத்தியல்களுக்கு எதிராக இருந்தார் எனவும் இறுதியில் எவ்வாறு அவர் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது என்பதை நடைமுறைப்படுத்தினார் எனவும் விரிவாக எழுதியுள்ளனர் என்கிற செய்திதான் இந்துவில் வெளிவந்திருந்தது.

“இந்துத்துவவாதிகளால் அம்பேத்கரை சுவீகரிக்கவும் முடியாது, கையகப்படுத்தவும் முடியாது” – என்பது நூல் தலைப்பு.

எனக்கு இதைப் படித்தவுடன் உடனடியாக இன்னொரு நினைவு எழுந்தது. அம்பேத்கர் 125 ல் இந்துத்துவவாதிகள் ஆங்கிலத்தில் மட்டும் இதைச் செய்யவில்லை. மாநிலமொழி இதழ்களிலும் இதைச் செய்தார்கள்.

தமிழில் அவர்களின் ‘விஜயபாரதம்’ இதழ் வெளியிட்ட சிறப்புமலரில் சுமார் 20 கட்டுரைகள் அம்பேத்கரை இந்துத்துவ ஆதரவாளர் போலவும் ஆர்.எஸ்.எஸ் முதலான சங்கப் பரிவாரங்களுடனும் நெருக்கமாக இருந்தார் என்பது போலவும் ஏராளமான “ஆதாரங்களுடன்”, அதாவது அடிக்குறிப்புகள் முதலியவற்றுடன் அந்த இதழ் வெளிவந்திருந்தது.

ஆத்திரம் கொண்ட சில நண்பர்கள் உடன் அந்த இதழை ஸ்கான் செய்து எனக்கு அனுப்பி இருந்தார்கள். நேற்றைய இந்து இதழைப் படித்தவுடன் எனக்கு எழுந்த கேள்வி இதுதான். ஆந்திர மாநிலத்தில் இந்த அபத்தத்தை மறுத்து உடன் நான்கு சிந்தனையாளட்கள் களத்தில் இறங்கி சுமார் 90 பக்க அளவில் நூல் ஒன்றை எழுதினர்.

ஏன் தமிழில் ஒன்று கூட வரவில்லை?

என்னையும் சேர்த்துத்தான் இங்கு குற்றம் சாட்டிக் கொள்கிறேன்.

ஏன் எழுதவில்லை?

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அந்த தலித் அறிவுஜீவிகளுக்கு எழுந்த கோபமும் வேகமும் ஏன் நமக்கு எழவில்லை?

இது நாம் யோசிக்க வேண்டிய ஒரு முக்கியமான கேள்வி.

அம்பேத்கருக்குச் சிலை வைத்துவிட்டால் மட்டும் போதும் என நாம் நினைக்கிறோமா?

அம்பேத்கரை நாம் சுய லாபத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டால் மட்டும் போதும் என நினைக்கிறோமா?

நண்பர்கள் யோசிக்க வேண்டுகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: