சிறப்பு கட்டுரை செய்திகள் தமிழகம் வாழ்வியல்

மலிவுவிலைவில் வீட்டுத்தோட்டம்: தமிழக அரசு விநியோகிக்கும் கிட்டில் மரபணு மாற்றப்பட்ட விதைகள்?

ஶ்ரீஜா வெங்கடேஷ்

நேற்றும் முந்தைய தினமும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையினர் சுமார் 50,000 மாடித்தோட்ட பொருட்களை சென்னை முழுவதும் சலுகை விலையில் அளித்திருக்கிறார்கள். நான் சென்று கேட்டபோது தீர்ந்து விட்டது. இனி சென்னையின் அனைத்து வீட்டு மொட்டை மாடிகளிலும் கத்திரி, வெண்டை என்று காய்கள் விளையப் போகின்றன என்று மகிழ்ந்தேன். என் சந்தோஷம் என் தம்பி வீட்டுப் போனதும் மறைந்து போனது. அவர் இந்தப் பொருட்களை வாங்கி வைத்திருந்தார். ஆர்வ மிகுதியால் விதைகளைப் பார்த்தேன். சரியான அதிர்ச்சி. அனைத்து விதைகளுமே உயிரியல் முறையில் உருவாக்கப்பட்டவை. அதோடு அதனைத் தயாரித்த கம்பெனியின் பெயர் இந்தோ அமெரிக்கா என்றிருந்தது. கீரை, கத்திரி வெண்டை விதைகளைக் கூடவா அமெரிக்கக் கம்பெனியின் தொழில் நுட்பத்தோடு உருவாக்க வேண்டும்? அத்தனையும் ஹைப்பிரிட் விதைகள். அதாவது அந்த விதையை உபயோகித்து நாம் வெண்டைக்காய் வளர்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து வரும் காய்கள் உண்ணத் தகுந்தவை தான் என்று சொல்கிறார்கள். ஆனால் மறு சுழற்சி முறையில் விளைந்த வெண்டையிலிருந்து நம்மால் விதைகளை எடுக்க முடியாது. இயற்கை விவசாயம், பாரம்பரிய விவசாயம் என்று நாம் அனைவரும் பேசி வரும் நேரத்தில் தோட்டக்கலைத்துறையினரே இப்படிப்பட்ட செயற்கை முறை விதைகளை மக்களுக்கு அளிக்கலாமா? அத்தனையும் சாயமூட்டப்பட்ட விதைகள் வேறு. அது மட்டுமல்ல இயற்கை உரத்தை அளிக்கும் அவர்கள் அடியுரமாக கெமிக்கல்களையும் விநியோகிக்கிறார்கள். இவற்றை கொள்முதல் செய்வது யார்? அந்த இந்தோ அமெரிக்கன் கம்பெனி எங்கிருக்கிறது? என்று யோசித்தால் தலை சுற்றுகிறது. விதை மற்றும் அடியுரங்கள் கொள்முதலில் என்னன்ன முறை கேடுகளோ? கடவுளே! காப்பாற்று!


இப்போது நமது சந்தேகங்கள்..

தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை மொட்டைமாடி தோட்டம் போடுவதற்காக சலுகை விலையில் தோட்டப் பொருட்களை தருகிறார்கள் என்ற விளம்பரம் தொடர்ந்து என் கண்ணில் பட்டபடியே இருந்தது.. ஓர் அரசுத்துறை இவ்வளவு தூரம் பொது மக்கள் மீது அக்கறையோடு செயல்படுவது என்னை ஆச்சரியப்படுத்தியது..

இந்தப் பதிவைப் படித்தபிறகுதான் இதில் இப்படியொரு கோணம் இருப்பதே எனக்குப் புரிந்தது. மொட்டைமாடிப் பயிரிடலுக்காக அரசு கொடுத்திருக்கும் விதைகள் எல்லாம் வெளிநாட்டு விதைகளாம்.. அனைத்தும் உயிரியல் மாற்று செய்யப்பட்டவை என்று அதிலிருக்கும் லேபிள்களே சொல்கின்றன.. அதாவது மரபணு மாற்றப் பயிர்களாக (Genetically Modified foods) அவை இருப்பதற்கான வாய்ப்புதான் அதிகம் என நினைக்கிறேன்..

நேரடியாக இந்தியாவுக்குள் இது போன்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இறக்குமதி செய்ய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.. அந்த கார்ப்பரேட் நிறுவனங்களுடன் அரசு அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து நம் மொட்டை மாடி வழியாக இந்தப் பயிர்களை இந்தியாவுக்குள், குறிப்பாக தமிழகத்துக்குள் ஊடுருவ வைக்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது.

அப்படி இருந்தால் இது இந்தியப் பயிரிடல் முறைக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்.. மொட்டை மாடியில் சிறு அளவில்தானே வளர்க்கிறார்கள் என்று நாம் இதை ஒதுக்கிவிட முடியவே முடியாது.. ஐம்பதாயிரம் வீடுகளின் மொட்டை மாடிகள் என்பது மிகப் பெரிய பரப்பளவு.. அங்கிருந்து தேனீக்களின் மூலம் இந்த கொலைகார பயிர்களின் மகரந்தங்கள் எப்படி எப்படி எல்லாம் பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்று நினைத்தாலே பகீர் என்கிறது…

அரசியல்வாதிகள் கார்ப்பரேட் கம்பெனிகளுடன் கூட்டுச் சேர்ந்து நாட்டைக் காட்டிக் கொடுப்பது ஒரு பக்கம் என்றால் இது போல அரசு அதிகாரிகள் தனி வியூகமாக நம் மண்ணையும் பயிர்களையும் மலடாக்கி சாகடிக்க கிளம்பியிருப்பது ஆற்ற முடியாத துயரையும் அச்சத்தையும் நமக்குள் ஏற்படுத்துகிறது.

12553096_1752551888313450_8905844130213606307_n

தோட்டக்கலைத் துறையினர் வினியோகித்த விதைப் பாக்கெட்டுகளின் படத்தைப் பதிவிட்டுள்ளேன். அதிலேயே விஷம் என்றும் அப்படியே பயன்படுத்த வேண்டாம் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. விதை தயாரிக்கப்படும் தொழிற்சாலை என்று பெங்களூர் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு என்று வேளாண்மைப் பல்கலைக் கழகம் இருக்கும் போது ஏன் விதைகளை அதிலும் விஷ விதைகளை ஏன் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும்? 2000 ஆண்டுகளுக்கு மேலாக விவாசயம் செய்து வரும் நம் விவசாயிகளுக்கு விதை உற்பத்தி தெரியாதா?

28-01-2016 அன்று மேம்படுத்தப்பட்டது.

 

 

Advertisements

One comment

 1. இந்திய காய்கறி விவசாயம் ஹைபிரிடு ரக விவசாயமாக மாறி பல ஆண்டுகள் ஆகிறது. பாரம்பரிய ரகங்களை சாகுபடி செய்வதை கிட்டதட்ட விவசாயிகள் மறந்து விட்டார்கள். பாரம்பரிய ரகங்க்ளை விட இவை 10 மடங்கு கூடுதல் மகசூல் தருவதே காரணம்.

  ஆனால் இதற்கான உரம், பூச்சி மருந்து செலவு அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மை. காய்கறி சாகுபடி குறு/சிறு விவசாயிகளால் செய்யபடுகிறது. 10 செண்ட் முதல் அதிகபட்சமாக 2 ஏக்கர் வரை காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளே அதிகம்.

  இவர்களை குறிவைத்து தான் பன்னாட்டு கம்பனிகள் இயங்குகின்றன. ஹைப்ரிடு விதைகளின் விலை மிக அதிகம். மேலும் வருடா வருடம் புதிய விதை வாங்கியே தீரவேண்டும். இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் சிறு விவசாயிகளுக்கு வேறு வழி இல்லை.

  தண்ணீர் பற்றாக்குறை அதிகம் ஆகி வரும் வேளையில், அவர்கள் இருக்கும் தண்ணிரீல் குறுகிய நிலத்தில் அதிக மகசூல் பெற இந்த ஹைபிரிடு ரகங்களையே நாட வேண்டிய சூழலில் உள்ளனர்.

  தமிழக அரசு கொடுப்பது gmo விதைகள் கிடையாது. வீரிய ஒட்டு ரகத்திற்க்கும் மரபணுமாற்ற பயிருக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. அதை பற்றி எழுதினால் இன்னொரு கட்டுரையே எழுத வேண்டி இருக்கும்.

  மாடி தோட்டம் பயிர் செய்பவர்கள் சின்ன இடத்தில் தான் செய்வார்க்ள். பாரம்பரிய ரகங்கள் குறைவாகவே விளைச்சல் தரும். ஆனால் ஹைபிரிடு ரகங்கள் குடும்பத்தினருக்கு போக வெளியில் விற்பனை செய்யும் அளவிற்க்கு விளைச்சல் கொடுக்கும்.

  நாம் உண்ணும் 90 % காய்கறிகள் வீரிய ஒட்டு ரகங்களே. பாரம்பரிய ரகங்கள் வழக்கொழிந்து வெகு நாட்கள் ஆகிறது

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.