தலித் ஆவணம்

#உரிமைமீட்பு: தலித் முதியவரின் சடலத்தை கொண்டுசெல்ல இடையூறாக இருந்த சுவர் இடிப்பு!

நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோயில் பேருந்துநிலையம் அருகே உள்ள கள்ளுக்கடை தெருவைச் சேர்ந்தவர் முருகையன் மகன் கன்னையன் (45).இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். வியாழனன்று மாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மயானத்தில் அடக்கம் செய்ய அவரது உடல்எடுத்துச் செல்லப்பட்டது. செல்லும்வழியில் கேட்டுகளுடன் அரசால் கட்டப்பட்ட சுவர் இருந்தது.

இதனால் பாடையைத் தூக்கிக்கொண்டு செல்லமுடியாத நிலையில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளுடன் பேசியபோது மறுத்து விட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்.சி.வி.ஆர். ஜீவானந்தம், வட்டக்குழு உறுப்பினர்கள் கே. நாகையா, ஆர். ஜோதிலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்லப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வி.டி.எஸ். ரவிச்சந்திரன், தாமுஇனியவன், தேவேந்திரன் உள்ளிட்ட மக்கள் நல கூட்டணி பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல்துறை ஆய்வாளர் அழகுதுறை, வைதீஸ்வரன்கோயில் காவல்துறை அதிகாரிகள், சீர்காழி வட்டாட்சியர் உள்ளிட்டோர் மக்கள் நல கூட்டணி பொறுப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இடையூறாக இருந்த சுவற்றை அகற்றினர். அதன் பின்னர் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

தீக்கதிர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: