இலக்கியம்

“இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” ஜி.யு. போப் இப்படியா தன் கல்லறையில் எழுதச் சொன்னார்?

இரா எட்வின்
 
போப் அவர்கள் கல்லறையில் “இங்கொரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று எழுதி வைக்கப் பட்டிருப்பதாக ஏறத்தாழ எனக்கு விவரம் தெரிந்த 45 ஆண்டுகளாக கேள்விபட்டு வருகிறேன். தமிழின் பெருமையை இதைக் கொண்டு நிறுவவே ஏராளமானோர் முயன்று வருகிறார்கள். நானும்கூட ஒன்றிரண்டு கூட்டங்களில் இதைப் பேசியிருக்கிறேன்தான்.

போப் அவர்கள் தமிழை வியந்து ஓதியவர்தான். அதில் தமிழின் எதிரிக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால், போப் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரது கல்லறையில் இப்படியாக எழுதப் பட்டிருக்கிறது என்பது தவறான தகவல் என்று 1961 ஆம் ஆண்டே மீ.ப. சோமசுந்தரம் அவர்கள் நிறுவியுள்ளார். அவரது கல்லறைக்கே சென்று பார்த்து கல்லறைக்கல்லில் எழுதியிருப்பதை எடுத்துப் போட்டு நிறுவியிருக்கிறார்.

“George Uglow Pope DD of south India, sometime lecturer in Tamil and Telungu, in the university and chaplain of Balliol college, Oxford. Born 24 th April 1820, Died 11th February1908. This stone has been placed here by his family and his Tamil friends in south India.In loving Admiration of his lifelong labours in the cause of Orient literature and philosophy”

என்றுதான் அந்த கல்லில் இருப்பதாக அங்கு போய் பார்த்து வந்த ஒருவர் சொன்ன பிறகு ஒன்று அப்படி சொல்வதை நாம் தவிர்த்திருக்க வேண்டும். அல்லது அதை சரி பார்த்து வந்திருக்க வேண்டும். தன்னை ஒரு தமிழ் மாணவனாகத்தான் போப் கருதினார். இன்னும் சொல்லப் போனால் இதைக்கூட அவர் சொல்லியிருப்பார்தான். ஆனால் சொல்லவில்லை. அதை ஏற்போம்.

இதுமாதிரியான தவறான வரலாறுகளை தவிர்ப்போம். தமிழ் மட்டுமல்ல வேறு எந்த மொழியும் இப்படிப் பட்ட காரியங்களால் வாழ்ந்துவிடப் போவதில்லை.

 தகவல் தோழர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களது “கிறிஸ்தவமும் தமிழ் சூழலும்” என்ற நூலில் இருந்து.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: