ஊடகங்கள் பேசா பொருள் நீதிமன்றம்

#ஊடகங்கள்பேசாபொருள்: சசிகலா மீதான அன்னிய செலாவணி வழக்கிலிருந்து நீதிபதிகள் ஏன் விலகுகிறார்கள்?

கடந்த 1996-ம் ஆண்டு மத்திய அரசின் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சசிகலா, டி.டி.வி.தினகரன், பாஸ்கரன் ஆகியோர் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கை பதிவு செய்தனர். ஜெ.ஜெ.டி.விக்கு செயற்கைகோள் இணைப்பு பெற்றபோதும், மேலும் சில பண பரிவர்த்தனையின் போதும் அன்னிய செலாவணி மோசடி நடந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.  அந்த மனுவை ஏற்றுக்கொண்டமாஜிஸ்திரேட் , அவர்கள் இருவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்குகளில் இருந்து சசிகலா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி நாகப்பன் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தானாக இந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி நாகப்பன் தெரிவித்தார். தான் தமிழகத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் வழக்கிலிருந்து விலகி கொள்வதாக அவர் கூறியுள்ளார். நீதிபதி நாகப்பன் தமிழகத்திலுள்ள கரூரைச் சேர்ந்தவர்.

ஏற்கனவே நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் பானுமதி ஆகியோர் இந்த வழக்கு விசாரணையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: