அரசியல் இந்திய பொருளாதாரம் இந்தியா இந்துத்துவம் மருத்துவம் மோடி அரசு விவாதம்

உயிர்காக்கும் மருந்துகளின் விலையை உயர்த்துவதுதான் மேக் இன் இந்தியாவா?

கடந்து போன பிப்ரவரி 4-ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா, “இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புற்றுநோயாளிகள் உருவாகிறார்கள்” என்ற அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்துகொண்டார். வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் பெருகுவது நல்ல அறிகுறி அல்ல.  எது ‘வளர்ச்சி’ என்கிற அறியாமை இருப்பதே இந்த நோய் வேகமாகப் பரவிவரக் காரணம். புகையிலை, மது, வேண்டாத கொழுப்பு சத்துள்ள உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, உடல் பருமன், உடல் உழைப்பின்மை, மாசு கலந்த காற்று, சுத்தமின்மை போன்றவைகள்தான் புற்றுநோயை உண்டாக்குகின்றன என்கிறார் டாக்டர் சாந்தா.

இந்த அதிர்ச்சி எழுந்து அடங்குவதற்குள் மத்திய அரசு அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. புற்றுநோய், எய்ட்ஸ், இரத்த அழுத்தம் உள்ளிட்ட 74 வகையான  நோய்களிலிருந்து காக்கும் மருந்துகளின் இறக்குமதி வரி சலுகையை ரத்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது மத்திய அரசு. மத்திய அரசு இதற்கு சொல்லும் காரணம், ‘வெளிநாட்டு கம்பெனிகளின் மருந்துகளைத்தான் அதிகம் இறக்குமதி செய்கிறோம்.  அவர்களுக்குத்தான் எல்லா லாபமும் செல்கிறது. இதனை கட்டுப்படுத்தவும் உள்நாட்டு கம்பெனிகள் மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கவும் வெளிநாட்டு கம்பெனிகள் உள்நாட்டில் உற்பத்தி நிலையங்களை நிருவி, இங்கேயே உற்பத்தியை ஆரம்பிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேன் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கவே இந்த சீர்திருத்தம்’.

கடந்த வருட இறுதியில் அமெரிக்காவுக்குப் பயணமான பிரதமர் நரேந்திர மோடி, கிளம்பும் முன் மருந்து கம்பெனிகள் தங்களே விலை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று விதிகளை நீக்கிவிட்டுப் போனார்.  அமெரிக்க கம்பெனிகளிடமிருந்தே பெரும்பாலான உயிர்காக்கும் மருந்துகளை வாங்கிறது. ஆயுத விற்பனைக்கு அடுத்தபடியாக அமெரிக்க மருந்து விற்பனையைச் செய்வது குறிப்பிடத்தகுந்தது. அந்த வகையில் அமெரிக்க கன்பெனிகளை குஷிப்படுத்தும் வகையில் மருந்துவிலைகளை நிர்ணயித்துக் கொள்ளும் முழு சுதந்திரத்தையும் அவர்களுக்கு கொடுத்தார் மோடி.

இதனால் புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கான மருந்துகளின் விலை தாறுமாறாக உயர்ந்தது. அதை கண்டுகொள்ளாமல் மோடி, ஃபேஸ்புக் நிறுவனருடன் கைக்குலுக்கியதையும் அவரைத் தள்ளிவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்ததையும் முக்கியமாகப் பேசினர். மோடியும் அதைத்தான் விரும்புகிறார்.

வழக்கமாக தனியார் கம்பெனிகளின் நலனுக்காக பாடுபட்டு பயணங்கள் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மேக் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க என்கிற காரணத்தைக் கூறிக்கொண்டு, உயிர்காக்கும் மருந்துகளின் விலையை உயர்த்தியிருக்கிறார். லட்சக்கணக்கானவர்கள் நம்பியிருக்கும் மருந்துகளின் விலையை அதிகரித்து, அவர்களுக்கு சுமையை ஏற்றி இருக்கும் மோடி அரசு இந்தியாவை யாருக்கானதாக உருவாக்க நினைக்கிறது என்கிற கேள்வி எழாமல் இல்லை!

தினச்செய்தி(09-02-2016) நாளிதழில் வெளியானது. 

Advertisements

One comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.