கன்னையா குமாரின் Morphed விடியோவை,ஒளிபரப்பி,செய்தியாளர்களின் நம்பகத்தன்மையைக் குலைத்ததுடன்  மட்டுமல்லாமல், கன்னையா என்ற இளைஞனை, வெறி பிடித்த நாய்களின் முன் தேச விரோதியாக சித்தரித்ததாக டைம்ஸ் நவ் உள்ளிட்ட ஆங்கில தொலைக்காட்சிகள் மீது குற்றம்சாட்டி “தி வயரில்” கட்டுரை எழுதி இருந்தார் மூத்த பத்திரிக்கையாளர் சித்தார்த் வரதராஜன். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த டைம்ஸ் நவ், சித்தார்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் செய்தி வெளியிட்டது. இதற்க்கு சித்தார்த் எழுதியுள்ள காட்டமான பதிலின் தமிழாக்கம் கீழே:

 

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஜே.என்.யூ விடியோ ஒளிபரப்பை “தி வயர்” உண்மையற்ற வகையில் செய்தியாக்கி விட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறது. அவர்களின் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது. என்னால் பிப்ரவரி 19 2016ல் எழுதப்பட்ட கன்னையா பற்றிய செய்தியையே குறித்தே (On Kanhaiya: It is Time to Stand Up and Be Counted.)அவர்கள் இவ்வாறு குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

அவர்களின் குற்றச்சாட்டை கீழ்க்கண்ட படத்தில் காணலாம்.

unnamed

யாரென்று தெரியாத நபர்களால் உருவாக்கப்பட்ட, ஜோடிக்கப்பட்ட விடியோ ஒன்று, ஜேஎன்யூ மாணவர் அமைப்பின் (JNUSU) தலைவர் கன்னையா குமாரை தேசத்துரோகியாக நிருபிப்பதற்கு உருவாக்கப்பட்ட ஒன்று. இந்தியாவிடமிருந்து, காஷ்மீர் விடுதலை பெற வேண்டுமென்று, அவர் கோஷமிடுவதாக காட்டப்பட்டு,   தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கன்னையாவை  சிறையில் அடைக்கவும் அந்த விடியோ உதவியிருக்கிறது. இதே ஜோடிக்கப்பட்ட விடியோ பலமுறை பல தொலைக்காட்சி சானல்களால் ஒளிப்பரப்பாகியிருக்கிறது அதில் டைம்ஸ் நவ் சானலும் ஒன்று என்ற உண்மைதான் ,  19 தேதி “தி வயரில்” வெளியான என்னுடய கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கட்டுரை வெளியான பிப் 19 தேதி, மாலையில், அர்னாப் கோஸ்வாமி தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டார் .” டைம்ஸ் நவ் சானல் அந்த விடியோவை ஒளிப்பரப்ப முயற்சிக்கவேயில்லை என்றும், பிஜேபியின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பாத்ரா தான்  அந்த குறிப்பிட்ட விடியோவை ஒளிப்பரப்ப முயற்சி செய்ததாகவும் , ஆனால் தான், அதை தடுத்ததாகவும் “ அர்னாப் என்னிடம் கூறினார்.

அர்னாப்பை எனக்குப்பல வருடங்களாக தெரியும் என்பதாலும், அவருடைய வார்த்தையில் நம்பிக்கை கொண்டதாலும்,  நான் எழுதிய கட்டுரையில் டைம்ஸ் நவ் இணைப்பை நீக்கிவிட்டு, கீழ்க்கண்ட குறிப்பை எழுதியிருந்தேன்.

“இந்தக்கட்டுரையின் முந்தைய வடிவத்தில்,ஜோடிக்கப்பட்ட  கன்னையா குமார் விடியோவை ஒளிப்பரப்பிய சானலகளுடன் டைம்ஸ் நவ் சானலையும் சேர்த்திருந்தேன்.  ஆனால் , பிஜேபியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ராதான் விவாதத்தின் நடுவில் தன்னுடைய ஐ-பேட்லிருந்து அந்த குறிப்பிட்ட விடியோவை ஒளிப்பரப்ப வேண்டியதாகவும் , அது உண்மையான விடியோவா என்று சோதிக்கப்பட்டிருக்காததால் ,தான் அவரை தடுத்து ஒளிப்பரப்பவில்லை என்றும், அது டைம்ஸ்நவ் சானலில் ஒரு போதும் ஒளிப்பரப்பபட்டிருக்க வில்லை என்றும் அர்னாப் கோஸ்வாமி விளக்கமளித்துள்ளார்.

இந்த குறிப்பை  நான் எழுதியதற்குப்பின்னால், டைம்ஸ் நவ் தன்னுடைய ஒளிப்பரப்பில் “தங்கள் சானல் ஜோடிக்கப்பட்ட விடியோவை காட்டியதாக சித்தார்த் வரதராஜன் குறிப்பிட்டது தவறென்று ம், அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும்” குறிப்பிட்டது.

இது போன்ற சூழலில் “தி வயரின்”  வாசகர் ஒருவர், குறிப்பிட்ட விவாதத்தின்,  யூட்யூப் இணைப்பை அனுப்பியிருந்தார். அதில்  டைம்ஸ் நவ்,  அந்த ஜோடிக்கப்பட்ட விடியோவை ஒளிப்பரப்பியது மிகத்தெளிவாக இருக்கிறது. அர்னாப் கோஸ்வாமி   திறமையாக ,தவறான தகவலின் மூலம் என்னை வழிநடத்தியிருப்பது அப்போது புரிந்தது.

 

அதற்குப்பின்னால், “தி வயர்”  அர்னாப் கோஸ்சாமியை ,ஜோடிக்கப்பட்ட விடியோ ஒளிப்பரப்பு பற்றி கேட்டப்போது, “நாங்கள் ஒரு போதும் ஒளிப்பரப்பவில்லை” என்ற முந்தைய தொலைபேசி உரையாடலில் தெரிந்த உறுதி குறைந்து,  “அந்த விடியோவின் உண்மைத்தன்மை சோதிக்கப்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டு ,  விடியோவை ஒளிப்பரப்பியதாக” கூறினார்.  அதற்க்கு ஆதாரமாக, நன்கு  எடிட் செய்யப்பட்ட 46 நொடி விடியோவை முன்வைத்தார்.   பாத்ராவுக்கு வேண்டி சான்றாக எடுத்துக்கொள்ளப்படாது என்று நேரடி ஒளிபரப்பின்போது தான் கூறியதாகவும்   கோஸ்வாமி சமாளித்தார் .

போலியான ஜோடிக்கப்பட்ட இந்த விடியோவை ஒளிப்பரப்பியதன் மூலம் ஏற்படும் சட்டப்பூர்வ,மனசாட்சிபூர்வமான குற்றச்சாட்டில் இருந்தும்,  பொறுப்புகளிலிருந்து தப்பிக்கவும் , அந்த விடியோவை உண்மையானதாய் வைத்து நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் மாணவர் அமைப்பின்  சார்பில் கலந்து கொண்டவர்களை குற்றவாளிகளாய்  காட்டி கேள்வி கேட்டதையும் மேற்கண்ட 46 நொடி விடியோவின் மூலம் சமாளித்து , அர்னாப் மறுக்க முயல்வது வெட்கக்கேடான பொய்.

டைம்ஸ் நவ் எப்படி அந்த ஜோடிக்கப்பட்ட போலி விடியோவை உபயோகித்தார்கள் என்பதை பார்க்கலாம் ;

டைம்ஸ் நவ் சானலின் நியூஸ் ஹவர் நிகழ்ச்சியின் பதிவின் போது, பாத்ராவிடம் (22:50 லிருந்து ) அந்த போலியான ஜோடிக்கப்பட்ட விடியோவை காட்டுமாறு அர்னாப் , தொடர்ச்சியாய் கேட்பது தெளிவாகக்கேட்கிறது. பாத்ரா அதை காட்டும் போது , அர்னாப்  ” டைம்ஸ் நவ் கேமிராமேனிடம்” விடியோவை தெளிவாக படமெடுத்து காட்ட கேட்கிறார்.

அந்த ஜோடிக்கப்பட்ட விடியோ ஒளிப்பரப்பான பின் கேமராவை பார்த்து பேசும் அர்னாப் , அந்த விடியோவில் கன்னையா குமார் “விடுதலை வேண்டுமென்று” பேசுவதை தான் தெளிவாக கேட்டதாக கூறுகிறார்.

பின் , அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆனந்த குமாரை  ( ஜேஎன்யூ மாணவர் அமைப்பு) நோக்கி “நீங்கள் கன்னையாகுமார்க்கு ஆதரவாய் இந்த நிகழ்ச்சியில் இருக்கிறீர்கள், இந்த விடியோ உண்மையென்றால் , கன்னையா குமார்க்காக என்ன பேசுவீர்கள்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

சித்தார்த் வரதராஜன்
சித்தார்த் வரதராஜன்

அந்த ஜோடிக்கப்பட்ட போலி விடியோவை கொடுத்து ,ஒளிப்பரப்ப செய்த பாத்ராவோ, நிகழ்ச்சியை தொகுத்த அர்னாப்போ,  நிகழ்ச்சியை காண்கிறவர்களுக்கு அது உண்மைத்தன்மை சோதிக்கப்படாத விடியோ என்று எந்த எச்சரிக்கையையும் தரவில்லை.

சில நிமிடங்களுக்குப்பின்னால் , அர்னாப் , மாணவர் அமைப்பின் ஆனந்த குமாரிடம் அந்த விடியோ போலியானது என்று சில இந்தி சானல்கள் காண்பிப்பதாகவும், டைம்ஸ் நவ் அதை சோதிக்கும் என்றும் கூறியவாறே, அந்த விடியோ உண்மையானதே என்கிற தொனியில் கேள்விகளை கேட்கத்தொடங்குகிறார்.

அர்னாப் ; ஆனந்த குமார் உங்களுக்கான கேள்வி இதுதான், உமர் காலித் – தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தின் உறுப்பினர். அவர்க்கு அடுத்து இந்த விடியோவில் இருக்கும் கன்னையா குமார்,  விடுதலையை நாங்கள் பெற்றுத்தருவோம் என்கிறார். உமர் காலித் சொல்லும் விடுதலை என்பது இந்தியாவிடமிருந்து காஷ்மீரின் விடுதலை. அதை  நீங்கள் மறுத்து “பிஜேபியிடமிருந்தும், சங்க பரிவார கூட்டங்களிலிருந்தும் விடுதலையை பெறுவோம் என்று பேசியதாக கூறுவதை ஏற்க முடியாது.

அதன் தொடர்ச்சியாய் ஆனந்த குமார் – அர்னாப்பின் குற்றசாட்டுகளை தொடர்ச்சியாய் மறுக்கவும், அர்னாப் அந்த விடியோ சோதிக்கப்படாததின் சந்தேகத்தின் பலனை தருவதாய் ஓப்புக்கொண்டார். விடுதலையை பெற்றுத்தருவோம் என்பது காஷ்மீர்  விடுதலையை அல்ல என்பதாகவும் ஒப்புக்கொள்ளலாம் என்கிறார். ஆனால் அந்த நிகழ்ச்சியின் ஒரு மணி நேரத்திலும் அர்னாப் , சம்பித் பாத்ராவால் ஒளிப்பரப்ப வைக்கப்பட்ட அந்த ஜோடிக்கப்பட்ட விடியோவை , உண்மையானதாய் முன் வைத்தே ஆனந்த குமாரிடம் கேள்விகல் எழுப்பினார், குற்றம் சாட்டினார்.

தி வயரின்  வாசகர்களையும் , டைம்ஸ் நவ்ன் பார்வையாளர்களையும் அந்த ஒருமணி நேர நிகழ்ச்சியின் விடியோவை பார்த்து உண்மையை கண்டறிய முன்வைக்கிறேன்.

நன்றி:  தி வயர்

த வயரில் சித்தார்த் வரதராஜன் எழுதியதன் தமிழாக்கம்