சட்டப் பேரவைத் தேர்தல் 2016 செய்திகள் திராவிட அரசியல்

எதிர்க்கட்சிகளே இல்லாத தமிழ்நாடு!

தேமுதிக திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த் அதிமுக அரசை கடுமையாக தாக்கிப் பேசினார். தேமுதிகவின் மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்தும் அதிமுகவையும் ஜெயலலிதாவையும் கடுமையாகப் பேசினார். இந்த மாநாடு முடிந்த அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்றும்கூட கருதாமல் தேமுதிக அதிப்ருதி எம் எல் ஏக்கள் உள்பட அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த 10 பேர் பதவி விலகினர்.

தேமுதிகவை சேர்ந்த விருதுநகர் எம்எல்ஏ மாஃபா பாண்டியராஜன், திட்டக்குடி தொகுதி உறுப்பினர் தமிழழகன், திருத்தணி எம்எல்ஏ அருண் சுப்பிரமணியன், பேராவூரணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அருண் பாண்டியன், ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன், சேந்தமங்கலம் தொகுதியின் சாந்தி, மதுரை மத்தி‌ய தொகுதி எம்எல்ஏ சுந்தரராஜன், செங்கம் தொகுதி எம்எல்ஏ சுரேஷ்குமார் , புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டை தொகுதி உறுப்பினர் ராமசாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் அணைக்கட்டு தொகுதி உறுப்பினர் கலையரசு ஆகியோரும் பதவி விலகியுள்ளனர். பதவி விலகிய 10 உறுப்பினர்களும் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர்.

இதனிடையே தேமுதிக எம்எல்ஏக்கள் 8 பேர் பதவி விலகிவிட்டதால், சட்டப்பேரவை விதிப்படி, அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை செயலர் ஜமாலுதீன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், பேரவையில் தேமுதிக உறுப்பினர்களின் எண்ணிக்கை 20ஆக குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரவையில் குறைந்தபட்சம் 24 உறுப்பினர்கள் எந்தக் கட்சிக்கும் இல்லாததால், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை யாருக்கும் அளிக்க இயலாது என சபாநாயகர் அறிவித்துள்ளதாக ஜமாலுதீன் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்ததால், அதற்கான சலுகைகளையும் விஜயகாந்த் இழக்கிறார் என்று சபாநாயகர் தெரிவித்திருப்பதாக ஜமாலுதீன் கூறியு‌ள்ளார்.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக 23 இடங்களில் வென்றது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.