அரசியல் இந்தியா இந்துத்துவம் செய்திகள் மத அரசியல்

என் பெயர் உமர் காலித்;நான் தீவிரவாதி இல்லை:ஊடகத்தால் துரத்தப்படும் ஜேஎன்யூ மாணவனின் அற்புதமான பேச்சு!!!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், தேசத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக, பல்கலை மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தேச துரோக கோஷங்களை எழுப்பியது உமர் காலித் என்கிற மாணவன் என்றும்,  அவரின் தந்தை சிமி அமைப்பில் பொறுப்பு வகித்து பின் ராஜினாமா செய்தததாகவும் தகவல்களை அள்ளி விட்டு கொண்டிருக்கின்றன பிஜேபி ஊதுகுழல் பத்திரிக்கைகள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளராகவே மாறி விட்ட அர்னாப் கோஸ்வாமியோ ஒரு படிமேல போய் “காலித் ஒரு தேச துரோகி” என்றே டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் அறைகூவல் விடுத்தார்.  இதையடுத்து, காலித் தலைமறைவானார்.

இது போன்ற சூழலில், “உமர் காலித் ஒரு கடவுள் மறுப்பாளன் என்றும் கம்யூனிச பைத்தியக்காரன்” என்றும் காலித்தின்  சகோதரி பத்திரிக்கைகளுக்குப் பேட்டி அளித்திருந்தார்.

இதனிடையே, ஜோடிக்கப்பட்ட போலியான வீடியோவை உலவிட்டு, கன்னய்யா குமாரை கைது செய்ய வைத்தவர்கள், தற்போது “ஐ.எஸ். இயக்கத்துடன் காலித்திற்கு தொடர்பு இருப்பதாக” புது கதை கிளப்பத் தொடங்கி இருக்கிறார்கள். பாகிஸ்தானிற்கு இரண்டு முறை சென்றதாகவும், நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் செய்திருப்பதாகவும் செய்திகளை எழுதத் தொடங்கின.

இந்நிலையில் நேற்றிரவு ஜேஎன்யூ பல்கலைக்கு வந்த உமர் காலித், அங்கிருந்த மாணவர்களிடையே உரையாற்றினார். பல்கலைக்கு வந்த உமர் காலித்திற்கு  பெரும் வரவேற்பு அளித்த மாணவர்கள் “ரெட் சல்யூட் காம்ரேட் ” என்று உற்சாகக் குரலில் கோஷமிட்டனர்.

அட்டகாசமான அந்த பேச்சின் தமிழாக்கம் இங்கே.

என் பெயர் உமர் காலித். ஆனால் நான் தீவிரவாதி இல்லை!

“கடந்த சில நாட்களாக ஜெஎன்யூ பல்கலை, பல்கலைக்கு வெளியே என்று அனைத்து இடங்களிலும், எங்களுக்காக போராடி வரும் மாணவர்கள், ஆசிரியர்கள்…. (அவர்களை காம்ரேட் என்றே அழைக்க விரும்புகிறேன் ) காம்ரேட்களுக்கு நன்றி.

இந்தப் போராட்டம் என்பது, ஐந்தாறு நபர்களுக்கானது மட்டுமல்ல. எதிர்காலத்தின் சிறந்த சமுதாயத்திற்காகவே இந்தப் போராட்டம்..

கடந்த பத்து நாட்காளாக நான், என்னை பற்றி பல புதிய விஷயங்களை கேள்விப் பட்டு வருகிறேன். நான் அறியாத புதிய விஷயங்களை. அதில் முக்கியமானது,  பாஸ்போர்ட் கூட இல்லாத நான், இரண்டு முறை பாகிஸ்தான் சென்று வந்திருக்கிறேன் என்பது.

நான் ஒரு Master Mind என்ற புதிய விஷயத்தையும் தெரிந்து கொண்டேன். ஜே.என்.யூ மாணவர்கள் அனைவருமே சிறந்த புத்திசாலிகள் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் நான் இவ்வளவு சிறந்தவன் என்பது எனக்கே தெரியவில்லை.

இந்தியாவில் உள்ள நூறு பல்கலைக்கழகங்களில், இந்தியாவிற்கு எதிரானப் போராட்டங்களை நடத்த நான் திட்டமிட்டிருந்ததாக, செய்திகளைப் படித்து தெரிந்துகொண்டேன். அத்தனை செல்வாக்கு உள்ள மனிதனா நான்? என்றும் ஆச்சர்யப்பட்டுப் போனேன்.

கூறப்படுகிறது / தெரிவிக்கப்படுகிறது / கேள்விபடுகிறோம் / என்பது போன்ற சந்தேக வார்த்தைகள் எதையும் சேர்க்காமலயே, எவ்வித ஆதாரமும் இல்லாமல், நான் தேச விரோத செயல்களில் ஈடுபடுகிறேன் என்று உறுதியாக,  வெளிப்படையாகக் கூறுகின்றன ஊடகங்கள். இது ஒரு ஊடக விசாரணை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?

லஷ்கரே தொய்பாவுடனோ, ஜெய்ஷே முஹமத் அமைப்புடனே எனக்கு தொடர்பில்லை என்று புலனாய்வு துறையினரே கூறிவிட்ட பின்பும், தங்களுடைய தவறான செய்திகளுக்காக எந்தவொரு ஊடகமும், மன்னிப்போ, அல்லது ஒரு சிறு குறிப்பையோ கூட வெளியிடவில்லை.

ஆதிவாசிகள் என்றால் மாவோயிஸ்ட்கள், இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி குற்றவாளிகளாக்குவது ஊடகங்களில் வேலையாக இருக்கிறது.

என் பனிரெண்டு வயது தங்கைக்கு வரும் பாலியல் பலாத்கார மிரட்டல்கள் குறித்த என் தந்தை, தமக்கையின் பேச்சுக்களை, எழுத்துக்களை கடந்த சில தினங்களாக, கேட்டும் பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்.

காந்தமாலாவில் கிறிஸ்துவ பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த பஜ்ரங் தள் உறுப்பினர்கள், பலாத்காரம் முடிந்ததும் “பாரத் மாத்தா கீ ஜெய்” என்று கோஷமிட்டது தற்போது நினைவுக்கு வருகிறது. இதுதான் உங்கள் பாரத மாதா என்றால்,  அந்த பாரத மாதா எங்களுக்கு சொந்தமானவர் அல்ல.

ஆறேழு வருடங்களாக ஜே.என்.யூவில் படித்து வருகிறேன். ஒரு போதும் நான் இஸ்லாமியன் என்று உணர்ந்ததில்லை. ஆனால் கடந்த பத்து நாட்களாக, நான் ஒரு இஸ்லாமியன் என்பதை எனக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள். உணர வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.  நான் உமர் காலித்தான். ஆனால் நான் தீவிரவாதி இல்லை.

நான் ஒரு பாகிஸ்தான் ஏஜென்ட் என்று குற்றம்சாட்டுகிறார்கள். அவர்களுக்கு  “பாகிஸ்தானும் எனது. ஹிந்துஸ்தானும் எனதே. இந்த இரண்டு நாடுகளும் அமெரிக்கர்களுக்கு  தாய் வீடே” என்ற பாகிஸ்தான் கவிஞன் ஒருவரின் கவிதையை பரிசாக அளிக்கிறேன்.

நாம் யோசிப்பதால்தான், அவர்கள் நம்மைப் பார்த்து அச்சப்படுகிறார்கள். மிக எளிதாக “தேச துரோகியாக பட்டம்சூட்டப்படும் இந்த நாட்டில், நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். யோசிப்பது. யோசிப்பது மட்டுமே!

Advertisements

2 கருத்துக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.