இலக்கியம் ஊடக அரசியல் ஊடகங்கள் பேசா பொருள் ஊடகம் பெண் குரல் பெண்கள் விவாதம்

சமூக நீதியை பெண்கள் எழுதினால் தமிழக பத்திரிகைகள் பயந்து அலறுவது ஏன்?

பெண்களாகிய நாங்கள் (மீனா சோமு, கீதா இளங்கோவன், தயா மலர்) சமூக நீதிக்கு குரல் கொடுக்கிறோம் என்பதை செய்தியாகவும் தன் ப்ளாகிலும் பகிர்ந்த தோழர் இரா. எட்வின் அவர்களது செய்கை ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்கும்.

கட்டுண்டு கிடக்கும் பெண்களுக்கும் ஆணாதிக்க சாதிய சிந்தனைகளால் கட்டப்பட்டு இருக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வை தரும். தோழர். இரா எட்வின் அவர்களுக்கு நன்றியும் அன்பும்.

பெண்களுக்கான தளம் என்பது எழுத்திலும் சிந்தனையிலும் செயலிலும் கூட வரையறை செய்யும் சமூகம் இது. இன்னும் பத்திரிக்கைகள் தங்களது பழைய பார்வையை மறுபரிசீலனை செய்வதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. கலைமகள், சினேகிதி… என பத்திரிக்கைகள், சமூக சிந்தனைகளை எழுதுகின்றனவா என்பதும் வெகுஜன பத்திரிக்கைகள் அப்படியே எழுதினாலும் அதை ஆண்கள் எழுத்தாகவே காட்டுகின்றன.

என் தோழமைகள் பலர் என்னை எழுத ஊக்குவிக்கிறார்கள். இரா. எட்வின் தோழர் மட்டுமல்ல, என்னை “உண்மை” இதழில் எழுத வைத்த தோழர் பிரின்ஸ் எனாராஸ் பெரியார், மாற்று தளத்தில் எழுத கேட்டுக்கொண்டிருக்கும் முத்தழகன் மா ஆகியோர் இருக்கவே இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் திராவிட, பெரியாரிய, கம்யுனிச தோழர்கள்!

வெகுஜன பத்திரிக்கைகள் மீதான விமர்சனமாகவே இதை வைக்கிறேன். சமூக நீதியை பெண்கள் பேசுவதையோ எழுதுவதையோ இப்பத்திரிக்கைகள் வெளியிடுவதில்லை ! அப்படி எழுதினால் சமூகத்தின் நிறுவனங்களான சாதி, குடும்ப அமைப்பின் சீர்கேடுகள், சுரண்டல்கள் ஆகியவற்றை பெண்கள் பேசினால், உணர்ந்தால் இந்த பாகுபாடுகளால் சுரண்டி, பெண்களை அடக்கும் இந்நிறுவனங்கள் மீதான மாற்றுப்பார்வை ஒவ்வொரு குடும்பத்திலும் நுழையும். அதை இந்த பழம்பெருச்சாளிகள் விரும்பவில்லை.

கோலம், சுயதொழில், இலக்கியம் இதை தாண்டி கொஞ்சம் அங்கொன்றும் இங்கொன்றும் “சாதனை பெண்கள்” என பேட்டிகளை போட்டு பெண் சிந்தனைக்கு வரம்பு விதிக்கிறது இவ்வூடகங்கள் !

என் தோழமை லிஸ்ட்டில் 4 ஆண்டுகளாக இருக்கும் ஒரு புகழ்பெற்ற வார இதழின் ஆசிரியர், ஒரு முறை கூட என் பதிவுகளை லைக்கிட்டதில்லை, இங்கு முகநூலில் எழுதும் பெண்களையெல்லாம் தங்கள் பத்திரிகையில் தொடர் எழுத்தாக எழுத வைத்தவருக்கு, என் போன்றோரின் எழுத்து கண்களில் படுவதே இல்லை. இந்த விமர்சனம் என்னை எழுத வைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் அல்ல. வெகுஜன ஊடகங்களின் ” பெண்களின் பிம்பங்கள்” எப்படி கட்டமைக்கப்படுகின்றன என்பதை உணர்த்த தான் இதை எழுதுகிறேன்.

இதைத்தாண்டி அகில இந்திய அளவில் ஆங்கில பத்திரிக்கைகள், (இந்து, டைம்ஸ்,…) நாளிதழ்களில் பெண்கள் என்ற பாலின வேறுபாடு சமூகநீதி கட்டுரைகள் வெளியிடுவதில் இல்லை.

ஆனால், தமிழ் நாளிதழ்கள், மாத இதழ்கள் இன்னும் பெண்களின் பிம்பங்களை பிற்போக்குத்தனத்துடன் காட்டுவதோடு சமூக நீதி பேசும் பெண் சிந்தனையை விரும்புவதில்லை என்பதே கசப்பான உண்மை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: