மருத்துவம் முறைகேடு

உஷார்!:கிட்னி திருட்டுக்கு புகழ்பெற்ற பாரதிராஜா மருத்துமனை இப்போது, உடல் எடை குறைப்பு சிகிச்சையில் இறங்கியிருக்கிறது!

 

2007-ஆம் ஆண்டு சென்னை தி. நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனை மருத்துவர் பழனி ரவிச்சந்திரன் அப்பாவிகளை ஏமாற்றி சிறுநீரக திருட்டில் ஈடுபட்டு பிடிபட்டார். அவுட் லுக் இந்தியா வெளியிட்ட கட்டுரையில் 471 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளையும் ரூ. 100 கோடிக்கு மேல் இதன் மூலம் பணம் ஈட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் பாரதிராஜா மருத்துவமனை மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.  சென்னை கோடம்பாக்கம் கக்கன் காலனியைச் சேர்ந்தவர் கவுரி சங்கர். இவரது மனைவி அமுதா (35). தி.நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனையில் அமுதாவுக்கு உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால், பலவீனமாகிக் கொண்டே சென்றார். பின்னர் வேறொரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற அமுதாவின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், தவறான சிகிச்சையால் கல்லீரல் உட்பட உடலின் பல பாகங்கள் கெட்டுவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல் எடை குறைப்பு சிகிச்சையில் பலியான அமுதா
உடல் எடை குறைப்பு சிகிச்சையில் பலியான அமுதா

பாரதிராஜா மருத்துவமனை மருத்துவரின் தவறான சிகிச்சையால்தான் அமுதா இறந்தார் என்று தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் அவரது கணவர் கவுரி சங்கர் புகார் கொடுத்தார். ஆனால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை. பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் மருத்துவர் மாறன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அகில இந்திய மருத்துவ கவுன்சில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஆகியவற்றுக்கும் கவுரி சங்கர் புகார் அனுப்பினார். இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர், மருத்துவர் மாறன் மீதான புகார்களை விசாரித்து, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதை உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து மருத்துவர் மாறன் பணி செய்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டனர். மருத்துவ பதிவேட்டில் இருந்தும் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தீக்கதிர் செய்தி வெளியிட்டுள்ளது.

சிவில் காண்ட்ராக்டரான கவுரி சங்கர், தன் மனைவியின் உடல் எடை குறைப்புக்காக ரூ. 40 லட்சம் செலவழித்ததாக குறிப்பிட்டிருக்கிறார். பாரதிராஜா மருத்துமனையின் நிர்வாகி டாக்டர். நடேசனும் டாக்டர். மாறன் தன் மனைவியை உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்ள கட்டாயப்படுத்தியதாக டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியில் கவுரி சங்கர் தெரிவித்திருக்கிறார்.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.