ஊடக அரசியல்

“மனசாட்சி அறியும், வீடியோவில் தெரியும்”: சீமானின் வரம்பு மீறிய பேச்சை கட்டுப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பாண்டே விளக்கம்

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன்(பாஜக), சரவணன்(திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் கலந்துகொண்டனர். ரங்கராஜ் பாண்டே இந்த நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார். நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் சீமான் “ஏய், சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதய்யா” என அநாகரிகமான முறையில் பேரா.அருணனை ஏசினார்.

இதைப் படியுங்கள்: தந்தி டிவி விவாதத்தில் நடந்தது என்ன?

இதற்கு கண்டனம் தெரிவிக்காத நிகழ்ச்சி நெறியாளர் பாண்டே, சீமானின் செயலை நியாயப்படுத்திப் பேசினார். இது குறித்து சமூக ஊடகங்களில் பாண்டே மீது விமர்சனம் கிளம்பியுள்ளது. இந்நிலையில் தன் பக்கத்தைச் சொல்லும் வகையில், தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியர், ரங்கராஜ் பாண்டே தனது முகநூலில் இப்படி எழுதியிருக்கிறார்,

“ஆயுத எழுத்து விவாதம் தனிப்பட்ட முறையில் திசை திரும்பியது பெரும் வேதனையே. வினாடி நேரத்தில் இரு விருந்தினர்களும் உணர்ச்சி வயப்பட்டுவிட்ட பிறகு, சமாதானங்கள் சடங்குகளாகின்றன. ஆனாலும் முயன்றேன். மனசாட்சி அறியும், வீடியோவில் தெரியும். இன்னும் கவனமாக இரு(ந்திரு)க்க வேண்டும்”.

 

 

Advertisements

1 reply »

  1. இது அந்த கேமராமேனுக்கு சொல்லிருக்கரு.. சிரிக்கும் போது எதுக்கு இந்த பக்கம் கேமரா எடுத்திட்டு இருந்தே… கவனமா இருக்கணும் கேமராமேன்

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s