இந்தியா இந்துத்துவம் கன்னய்யா குமார் சர்ச்சை மத அரசியல்

“துரோகி கன்னய்யா குமாரை சுட்டுக் கொன்றால் ரூ.11 லட்சம் பரிசு”

“துரோகி கன்னய்யா குமாரை சுட்டுக் கொன்றால் ரூ.11 லட்சம் பரிசு” டெல்லியில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் வாசகங்கள் இப்படித் தெரிவிக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன் வெளியான கன்னைய்யா குமார் குறித்த செய்திகளை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பூர்வாஞ்சல் சேனா என்று சொல்லிக் கொள்ளும் ஒரு அமைப்பு, “யார் இந்த துரோகி கன்னய்யாவை சுடுகிறார்களோ அவர்களுக்கு ரூ. 11 லட்சம் பரிசாக வழங்கப்படும்” என தெரிவித்து போஸ்டர்களை ஓட்டியுள்ளது.

shoot dead

இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு இந்த அமைப்பின் தலைவர் ஆதர்ஷ் சர்மா என்பவர், “இந்த துரோகியின் மரணத்தை நாங்கள் விரும்புகிறோம். அவர் இந்த தேசத்தின் தாயை அவமதித்துவிட்டார்.  நாங்கள் நீதித்துறையை நம்புகிறோம், ஆனால் அதன் மூலம் நீதி கிடைக்க, காலம் ஆகும். அதனால் எங்களுக்கு உடனடி நீதி தேவை.” என்று சொன்ன சர்மா,

“நாங்கள் உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மக்களுக்காக உழைக்கிறோம். என் வீட்டிலிருந்து கன்னையாவின் வீடு 10 கி. மீ. தூரத்தில்தான் இருக்கிறது. எங்களுடைய மண், இதுபோன்ற தேச விரோதிகளை எப்போதும் உற்பத்தி செய்யாது. அதனால்தான் அவனை களையெடுக்கும் பொருட்டு இந்த அறிவிப்பை செய்திருக்கிறேன்” என்றார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: