செய்திகள்

வருமானத்தை மறைத்த ரிலையன்ஸ், டாடா, ஏர்டெல், வோடபோன், ஐடியா, ஏர்செல் : மக்களின் வரிப்பணம் வீனாகவில்லையா ?…

 

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கணக்குகள் மற்றும் அவற்றின் வருமானம் குறித்து ஆய்வு நடத்திய, சிஏஜி அதன் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டாடா, ஏர்டெல், வோடபோன், ஐடியா, ஏர்செல் ஆகிய முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2006-07 மற்றும் 2009-10 ஆகிய ஆண்டுகளில் 46 ஆயிரம்  கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது.

ஆனாலும்  தங்களின் வருமானத்தை குறைத்துக் காட்டி, அரசுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இந்த நிறுவனங்கள் இழப்பை ஏற்படுத்தி உள்ளன என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரம் குறித்து இந்த 6 தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம்  பத்திரிக்கைகள் கேள்வி எழுப்பியபோது, அது பற்றி கருத்து கூற அவைகள் மறுத்து விட்டன.

*2009ம் ஆண்டு சிஏஜி, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கணக்குகளை சரிபார்க்க துவங்கிய போது, அதனை எதிர்த்து பல்வேறு கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது.

*இறுதியாக 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சிஏஜி.,யின் ஆய்வுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் கணக்கு விபரங்களை அளித்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

*இதன்படி, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வரவு-செலவு கணக்கில் குறிப்பிட்டுள்ள தொகையும், அரசிடம் செலுத்தும் வருவாய் கணக்கு விபரமும் ஒன்றாக உள்ளதா? என்று  சிஏஜி நடத்திய ஆய்வில்,  அந்நிறுவனங்கள் வருமானத்தை குறைத்து காட்டி, அரசை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s