இந்தியா இந்துத்துவம் கன்னய்யா குமார் கருத்துரிமை கல்வி மத அரசியல்

“கண்ணையா என்னுடைய நண்பர்; நான் புரபஸர் அல்ல; அந்தப் படத்தை நான்தான் என்னுடைய முகநூலில் பதிவிட்டேன்”: பக்தர்களின் அவதூறுக்கு பாதிக்கப்பட்ட பெண் பதில்

கடந்த மூன்று நாட்களாக ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் ஒரு பெண்ணுடன் அமர்ந்திருக்கும் படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கண்ணையா குமார் சோஃபாவில் அமர்ந்திருப்பது போலவும் சோஃபாவின் கைப்பிடி பகுதியில் அந்தப் பெண் அமர்ந்து, கண்ணையா தோளில் கைப் போட்டிருப்பது போலவும் அந்த படம் வெளியானது. இந்தப் படத்தை “ஜேஎன்யூவில் கல்வி, இந்த ஆசிரியர் கண்ணையா குமாரின் மடி மீது அமர்ந்து  பாடம் நடத்துகிறார்; செவ்வணம்” என்ற வாசகத்துடன் பலர் பகிர்ந்துகொண்டனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த கன்னய்ய குமார், தேசத்தாய் பற்றி ஓயாமல் பேசும் இவர்கள்தான் நண்பருடன் அமர்ந்திருப்பதை கொச்சைப் படுத்துகிறார்கள் என தெரிவித்திருந்தார். அதுபோல பேராசிரியார் என சுட்டப்பட்ட அந்தப் பெண் தன்னை வெளிப்படுத்தி விளக்கம் தந்திருக்கிறார். சவுமியா திரிபாதி என்பவர்தான் அவர்.

“என்னையும் நண்பரையும் கொச்சைப் படுத்தவே இந்த படத்தை பகிர்ந்திருக்கிறார்கள். முதலில் நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நான் விரிவுரையாளர் அல்ல; ஜேஎன்யூவில் ஆய்வாளர். நானேதான் இந்த புகைப்படங்களை என்னுடைய முகநூலில் மார்ச் 5-ஆம் தேதி பகிர்ந்துகொண்டேன்.  அதை எடுத்து யாரோ தவறாக பகிர்ந்திருக்கிறார்கள்” என்று சவுமியா திரிபாதி தன்னுடைய முகநூலில் கருத்து தெரிவித்திருந்தார்.

“களங்கம் கற்பிக்கும் நோக்கத்தில் செயல்படும் இவர்களை பார்த்து பரிதாபப்படுகிறேன். 3000 காண்டம்களை ஜேஎன்யூ கேம்பஸில் கண்டெடுத்ததாக சொல்லிக்கொள்ளும் மனநிலையில் உள்ளவர்கள், மற்றவர்கள் மீது இப்படியான தனிப்பட்ட தாக்குதல்களைத்தான் செய்வார்கள். நண்பருடன் அமர்ந்து படம் எடுத்துக் கொள்வதில் ஒரு தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்றவர்,

“இந்த நாட்டில் பெண்கள் படிக்க வருவதும் வாழ்வது போராட்டமாகிவிட்டநிலையில், எங்களைப் பற்றி அவதூறு பேசி எங்களுடைய பெற்றோரை பயமுறுத்துகிறீர்கள்.  இது போன்ற அவதூறுகள் பல பெண்களை இருட்டறைகளுக்குத்தான் தள்ளும்” என்று எழுதியிருந்தார்.

முன்னாள் ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் சுசிதா டே, “கன்னய்யா குமார் சிறையில் இருந்த வந்த நேரத்தில் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நண்பரை, பெண்கள் தினத்தின் போது கொச்சைப்படுத்த நடந்த முயற்சி வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

முகப்புப்படம்: ஜேஎன்யூ போராட்டத்தில் எடுக்கப்பட்டது. ஒளிப்படக்காரர்: தனுஸ்ரீ பாஸின்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: