காதல் சமூகம் சாதி அரசியல் தலித் ஆவணம் திராவிட அரசியல்

#வீடியோ: சாதிமறுப்புத் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை: நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் மனைவியின் உறவினர்கள் வெறியாட்டம்!!!

திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (22). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த கவுசல்யா (19) என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் பெண்ணின் வீட்டுத்தரப்பில் கடும் எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக அந்தப்பெண் தேவர் ஜாதி என்றும் அந்த இளைஞர் தேவேந்திர குல வேளாளர் என்றும்  உடுமலையை சேர்ந்த  தி.க. வழக்கறிஞர் பிரபாகரன் பதிவு செய்துள்ளார். 

இதையடுத்து, தங்களது பெண்ணை சங்கர் கடத்தி சென்று விட்டதாக கவுசல்யாவின் பெற்றோர்  காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் நாங்கள் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக  கவுசல்யா கூறியதாலும், கவுசல்யா மேஜர் என்பதாலும் சங்கரோடு செல்ல போலீசார் அனுமதித்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர்கள் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இருவரும் பொருட்களை வாங்குவதற்காக உடுமலைக்கு வந்தனர். உடுமலை பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மூவர்  திடீரென அரிவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டினர்.

mur.jpg
படுகாயமடைந்த சங்கர், கவுசல்யா ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டனர். வரும் வழியில் சங்கர் இறந்தார். கவுசல்யா படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெண்ணுடைய தாய்மாமனே இதை செய்திருப்பதாக கூறப்படுகிறது. தப்பியோடிய மூவரையும் தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோ இங்கே…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.