அரசியல் ஊடகம் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சமூக நீதி சமூகம் சாதி அரசியல் தமிழகம் தலித் ஆவணம் திராவிட அரசியல்

’எவ்ளோ முக்கியமான செய்திகள் சொல்லியிருக்கேன்..மொதல்ல இதப் போடுங்க; பிறகு அதபத்திப் பேசலாம்”தலித் இளைஞர் படுகொலைப் பற்றி ராமதாஸ் கருத்து

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதி சங்கர், கவுசல்யா ஆகியோரை நடு சாலையில்  பகல் நேரத்தில பல பேர் முன்னிலையில் மூன்று பேர் படுகொலை செய்தனர். சாதி மறுத்து தலித் இளைஞரை திருமணம் செய்துகொண்டதால் கவுசல்யாவின் தந்தை, இந்த படுகொலைகளை ஆள் வைத்து செய்ததாகச் சொல்லி நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸிடன் இந்த படுகொலை குறித்து நியூஸ் 7 நிருபர்  வேலூரில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கருத்து கேட்டிருக்கிறார்கள். அதற்கு ராமதாஸ், “எவ்ளோ முக்கியமான செய்திகள் சொல்லியிருக்கேன். மொதல்ல இதப் போடுங்க, அப்புறம் அதப் பத்தி பேசலாம்” என்று செய்தியாளர் சந்திப்பிலிருந்து எழுந்து கிளம்பினார் ராமதாஸ். அவர் இப்படிச் சொன்னதும் சுற்றியும் இருந்த பாமகவினர் வாய்விட்டுச் சிரித்தனர் என்பது இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டிய செய்தி.

வீடியோ கீழே…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.