அரசியல் ஊடகம் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சமூக நீதி சமூகம் சாதி அரசியல் தமிழகம் தலித் ஆவணம் திராவிட அரசியல்

தலித் படுகொலை: “அறிக்கை விடாத மத்தவங்களையும் கேளுங்க; எங்களை மட்டும் ஏன் கேட்கறீங்க?”: அன்புமணி ராமதாஸ்

தேவர் சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக தலித் இளைஞர் சங்கர், உடுமலைப் பேட்டையில் பகல் நேரத்தில் நடுசாலையில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார். அவர் மணந்த கவுசல்யாவுக்கு அரிவாள் வெட்டுகள் விழுந்தன.

இந்த சம்பவம் குறித்து உங்களுடைய கருத்தென்ன என்று பாமக நிறுவனர் ராமாதாஸிடம் தொலைக்காட்சி நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு, “இதைவிட எவ்வளவு செய்தி இருக்கு அதைப் போடுங்க” என்று சொல்லி கிளம்பினார்.

அதைச் சொல்லிவிட்டு அவரும் சிரித்தார், அவரைச் சுற்றிலும் இருந்த பாமக பிரதிநிதிகளும் சிரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அன்புமணி அளித்த பேட்டியில்,

“உடுமலைப் பேட்டை கொலை உட்பட எல்லா கொலைகளையும் நாங்கள் கண்டிக்கிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை சரியில்லை என்பதையே இது காட்டுகிறது. பாமகவை நோக்கி மட்டும் இந்தக் கேள்வி வருகிறது. இன்னும் சில கட்சிகள் இதுபற்றி மவுனம் சாதிக்கிறார்களே அவர்களிடம் கேட்பார்களா?” என தெரிவித்திருக்கிறார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.