ஊடகம் காதல் சமூகம் சாதி அரசியல் சினிமா தமிழகம் பொழுதுபோக்கு

#அவசியம்படிக்க: தலித்திய பார்வையில் ’காதலும் கடந்து போகும்’

ஜோஸ்வா ஐசக் ஆசாத்
joshua
ஜோஸ்வா ஐசக் ஆசாத்

நேத்திக்கு முந்தா நாள் சாய்ந்திரம் காதலும் கடந்து போகும் படத்துக்கு வழக்கம் போல தனியா போனேன். தியேட்டர்ல மொத்தமே 20 பேர் தான் இருந்திருப்பாங்க. அதுல அப்பாகூட வந்திருந்த ஒரு 5 வயசு பொண்ணு ஒண்ணு. தனியா ஜாலியா சிரிக்கிறது எவ்ளோ அழகு. நான் தான் சிரிச்சுன்னு இருந்தேன். சரி படத்த பத்தி எழுதணும்னு வரும் வழில யோசிச்சுன்னு வந்தேன். விஜய் சேதுபதி. விளிம்பு நிலைல இருக்கிற அப்பாவிகள், நல்லவர்கள் ஒருத்தன்கிட்ட அடியாளா இருந்தா எப்படியெல்லாம் சுரண்டப்படுறாங்க, எப்படி வாழ்க்கைய தொலைக்கிறத சொல்றாங்கனு இந்த பதிவுக்காக மட்டும் படத்த அப்படி interpret பண்ணிக்கிறேன். படத்துல பேசுறதுக்கு நிறைய மத்த விசயம் இருக்கு. அது மடோனா செபாஸ்டியன்.

மூணு வருசம் முன்னாடி வன்னி அண்ணன் கூட ஒரு ஊருக்கு போயிருந்தேன். அந்த ஊர் லோக்கல் பிரச்சனைக்கான போராட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து மதியம் சாப்பிட்டதும் தோழர்கள் அண்ணனோடு பேசிக் கொண்டிருந்தார்கள். கடைசியா ஒரு ஐந்து இளைஞர்கள அந்த ஊர் பொறுப்பாளர் சந்திக்க அழைத்து வந்தார். அவர்களுக்கு 20 – 25 வயசு தான் இருக்கும். எல்லாரும் தலித்துகள். அவங்க நண்பன சில மாசங்களுக்கு முன்ன சாதி பிரச்சனையில ஒரு சாதிவெறி கும்பல் சரமாரியா வெட்டி படுகொலை செய்திருக்கு. அந்த சாதிவெறி கும்பலோட தலைவன் அதுக்கு அப்புறம் பெரிய அளவுல ரவுடியா பார்ம் ஆகி, தலித்துகள அச்சுறுத்த ஆரம்பிச்சிருக்கான். ஒரு கட்டத்துல இந்த ஐந்து தலித் இளைஞர்களும் சேர்ந்து நண்பனுக்காக அவன போடுறதுக்கு முயற்சி பண்ண.. ‘எடுத்த உடனே அவன் கால்ல ஒரு வெட்டுனே.. அப்படியும் அவன் ரயில்வே காம்பவுண்ட குதிச்சு தப்பிச்சிட்டான்ணே’ என்றான் ஒருவன். ‘கண்டிப்பா அவன நாங்க முடிப்போம்னே’ என்றான் அப்பாவியா நின்றிருந்த இன்னொரு இளைஞன். ‘அப்ப தான்ணே நம்ம மக்களுக்கு பாதுகாப்பு’ என்றான் மற்றொருவன். அந்த பெயிலான அட்டெம்ட்னால எல்லாரும் அரஸ்ட் ஆகி லாகஅப்ல கடுமையா அடி வாங்கியிருக்காங்க. பெயில் எடுக்கவே யாரும் இல்லாம ஒரு வழியா வெளில வந்திருக்காங்க. எல்லாத்தையும் அமைதியா கேட்டுட்டு அவங்ககிட்ட சமூக அரசியல பத்தி விளக்கி பேசினார் வன்னி அண்ணன். கிளம்புறதுக்கு முன்னாடி அவங்கள ஒரு முற நல்லா பாத்தேன். எப்பவாச்சு அவங்க நினைப்பு வரும். இப்ப என்ன பண்ணுறாங்கன்னு யோசிப்பேன். ஒரு நாள் அவங்க ஊருக்கு போய் பாக்கணும்.

ரவுடிய அடியாள வெகுளியா, அப்பாவியா, நல்லவனா, கருத்துள்ளவனா, அன்பானவனா இருக்கிற templateல காட்டுறது வந்துடுச்சு. காதல், வீரம், பண்பாடு, குடும்ப உறவுகள், கெளரவம், சிரிப்பு, நையாண்டி எல்லாம் இடை நிலைச் சாதிகளுக்கானதா இருந்த கதைக்களம் விளிம்பு நிலை மக்கள் பக்கம் திரும்பியிருக்கு. நல்லா இருக்கு. விளிம்பு நிலை மக்கள அரசியல்ல எப்படி சுரண்டுறாங்கன்னு ‘மெட்றாஸ்’ படம் உண்மையிலேயே ‘அழகா’ சொல்லியிருக்கும். இப்ப வந்திருக்குற படத்துல வர்க்க அரசியல்ல மேலோட்டமா சொல்லியிருப்பாங்க. சிறப்பு.

மத்தவங்க கதைல சாதி அடையாளம் வெளிப்படையா சொன்னா கூட அது பொதுவான தமிழரின் வட்டார வாழ்வியல்னு பூ சுத்தும் போது. நகரங்களை, சேரிகளை மையப்படுத்தி குறிப்பிட்ட மக்களின் கதைகளில் அவர்களின் சாதியை மறைப்பது ஏன்? நீலம் சிவப்புனு கொடிய தலைகீழா காமிச்சா போதுமா? மதுரை தேவர் சிலை வட்டார அடையாளமா தவறாம பாக்குறோம், சென்னைக்கான, வடமாவட்டங்களில் நிறைந்த அடையாளம் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைய பொது அடையாளமா வராதா? முன்ன ஒரு முற மதுரை பக்கத்த சேர்ந்த நண்பர் ஒருவர் சொன்னார் ‘மெட்றாச பொறுத்த வரைக்கும் நீங்க தானே ஆதிக்க சாதின்னு’ நல்ல ஜோக்குன்னு சிரிச்சுட்டேன். முன்ன எல்லா சேரி சீன்லயும் காந்தி சிலையும் அதுக்கு கீழ சீட்டாடுவத காமிப்பாங்க. அந்த கொடுமைக்கு இப்ப எதுவுமே காட்டாதது பரவால. புதுசா வந்து முயற்சிக்கிறவங்க இன்னும் உடைக்க வேண்டியது நிறைய இருக்கு.

ஜோஸ்வா ஐசக் ஆசாத், சமூக களப்பணியாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.