ஊடக அரசியல் ஊடகம் சர்ச்சை சினிமா தமிழகம் பொழுதுபோக்கு

நியூஸ் 7 தமிழ்: ஜேர்னலிஸ்டிக் எதிக்ஸ்னு எதாச்சு இருக்கா உங்களுக்கு?

ஜோஷ்வா ஐசக் ஆசாத்
joshua
ஜோஷ்வா ஐசக் ஆசாத்

‘தாரை தப்பட்டை’ படத்திற்காக இசைஞானிக்கு இன்று தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 7 தமிழ் செய்தி தொலைக்காட்சியில் இன்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் தொடர்பான செய்தி வருகிறது. இன்று தமிழ் திரைப்பட துறையில் யாரெல்லாம் தேசிய விருது வாங்கியிருக்கிறார்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கு அடுத்த செய்தி தேசிய விருதுகள் தேர்வுக் குழுவில் நடுவராக இருந்த கங்கை அமரனிடம் டெல்லியில் எடுத்த பேட்டியை போடுகிறார்கள். என்ன செய்தினா ‘தேசிய விருதுக்கு இளையராஜாவின் பெயரை நான் பரிந்துரைக்கவில்லை..’ என்று இவர்களின் கேள்விக்கு அந்தாளு பதில் சொல்கிறார். கங்கை அமரனின் பேட்டியில் குறிப்பிட்ட இந்த பகுதியை செய்தியாக போடுவதற்கு காரணம் என்னனு யோசிச்சேன். சமீபத்தில் பிஜேபியில் சேர்ந்தவருக்கு தேசிய விருதுகள் தேர்வு குழுவில் இடம் – தேர்வு குழுவும் அரசியல் சார்புள்ளதா? என்று கேள்வியை மக்களிடத்தில் சேர்ப்பதற்காகவா என்றால் அப்படி எதுவும் தெரியவில்லை. மாறாக கங்கை அமரன் நடுவராக இருக்கும் தேர்வு குழுவின் அறிவிப்பில் அவர் அண்ணன் இசைஞானிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் அந்த விருதுக்கு பின்னால் அவர் தம்பியின் வேலை இருக்குமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கேள்வியை எழுப்பியுள்ளதாகவே தெரிகிறது.

மக்களை எல்லாவிதத்திலும் இன்பார்ம்டாக வைத்திருக்க வேண்டும் என்பது ஊடகத்தின் அடிப்படை வேலை ஆனால் இந்தியா போன்ற நாட்டில் அத்தகைய நிலை இருக்கிறதா? பல்வேறு சமூகங்களின் பிரதிநிதித்துவம் இந்த ஊடக அறைகளில் நிரம்பியுள்ளதா? அரசியல், சமூக, பொருளாதார காரணிகளின் ஆதிக்கம் இல்லாத சுதந்திரதன்மையோடு ஊடகங்கள் இங்கு செயல்படுகிறதா? இது ரொம்ப அடிப்படையா எனக்கு எழும் கேள்விகள். அப்படிபட்ட சூழலில் இவர்களின் செய்தியை சந்தேகத்தோடு அணுகுவதற்கு எல்லா நியாயமான காரணங்களும் நமக்கு இருக்கவே செய்கிறது. அதிலும் நியூஸ் 7 தமிழ் செய்தி தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் போன்றதொரு பொறுப்பில் இருக்கும் நபர் இந்த செய்தியை ஒட்டி தன்னுடைய பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதையும் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டியுள்ளது. இளையராஜாவின் விருது பற்றி மக்களுக்கு தகவல் தெரிவிப்பது ஒன்று. அந்த தகவலுக்கு பின்னாக ஒரு சந்தேகத்தை செய்தி/ பேட்டி வடிவத்தில் கொடுப்பது மற்றொன்று. This act is planting questions instead of raising questions. விருது தொடர்பான சந்தேகத்தை நேரடியாக எழுப்புவது ஒரு ஊடகத்தின் பணியாக செய்வதென்பது வேறு ஆனால் அதை செய்வதற்கு துணியாமல் அந்த சந்தேகத்தை மக்கள் மனதில் விதைப்பது என்பது வேறு. கொஞ்சமாவது எதிக்ஸ்சை கற்று/வளர்த்துக் கொள்ள முயலுங்கள்.

அப்புறம். இசைஞானிக்கு அறிவிக்கப்பட்டுள்ள விருது பத்தியெல்லாம் நான் பேசவே கூடாது. என்னை கேட்டால் அவருக்கு விருதுகளே தேவையில்லை என்பேன். வேண்டுமானால் விருதை தந்து அவர்கள் தங்களுக்கு பெருமை தேடிக் கொள்ளட்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.