தலித் ஆவணம் திராவிட அரசியல் வரலாறு

#தலித்வரலாற்றுமாதம்: அயோத்திதாசரும் பர்மா புத்தரும்

ஸ்டாலின் ராஜாங்கம்
ஸ்டாலின் ராஜாங்கம்

படத்திலிருக்கும் புத்தர் சிலை நூறுவருட தலித் அரசியலின் எழுச்சியையும் தேக்கத்தையும் மாற்றங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்றுச் சொன்னால் யாரேனும் வியப்படையக்கூடும். உண்மை அதுதான்.

அயோத்திதாசர் தொடங்கியிருந்த தென்னிந்திய சாக்கைய பௌத்த சங்கத்திற்கு அவர் உயிரோடு இருந்த காலத்திலேயே பர்மாவிலிருந்து மூன்று பஞ்சரத்தின புத்தர் சிலைகள் நன்கொடையாக அனுப்பப்பட்டன. முதலிரண்டு சிலைகள் சென்னை,கோலார் தங்கவயல் சங்கங்களில் வைக்கப்பட்டன. மூன்றாவது சிலை திருப்பத்தூர்(வேலூர்)சங்கத்தில் வைக்கப்பட்டது. அச்சிலை தான் இது.

பண்டிதர் காலத்திலேயே அவரின் சகபயணியான பெரியசாமி புலவரின் சொந்த ஊரான திருப்பத்தூரில் அடர்த்தியான பௌத்த செயல்பாடுகள் இருந்தன. பௌத்த ஆலயம், பள்ளி, நூலகம் செயல்பட்டன.பெரியசாமி புலவருக்கு சற்று பின்னால் வந்து இச்செயல்பாடுகளில் இணைந்தவர் இவ்வூரைச்சேர்ந்த அனுமந்த உபாசகர்.

அயோத்திதாசர் காலத்தில் பௌத்த நம்பிக்கையாளர்களாய் விளங்கிய இவர்கள் பின்னாளில் திராவிடர் கழகத்தில் சேர்ந்தனர். நாத்திக இயக்கத்திற்கும் பௌத்த இயக்கத்திற்குமான ஊடாட்டத்தில் பௌத்தத்தை மதமாக வரித்துகொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. (இது விரிவாகவும் தனியாகவும் எழுதவேண்டியது) எனினும் அனுந்த உபாசகர் காலம் வரையிலும் முந்தைய தொடர்ச்சி என்ற முறையில் பௌத்த ஆலயம் இருந்தது. அவருக்குப் பின் சின்னச்சாமி ஆசிரியர், எச்.எம். தம்மையதாஸ் போன்ற ஓரிருவர் இருந்திருப்பினும் மெல்ல மெல்ல இத்தொடர்ச்சி மறைந்தது. அதாவது ஆலயம் இடிந்தது. அதை மறுகட்டுமானம் செய்வதற்கான அரசியல் ஓர்மை கூட அடுத்த தலைமுறையினருக்கு இல்லாமல் போயின. கருத்தியல் ஒர்மைக்கும் செயல்பாடுகளுக்கும் தொடர்புண்டு இல்லையா?

ஆலயம் இடிந்த பின்னால் அதிலிருந்த இச்சிலை திருடப்பட்டது. சிலையின் உள்ளே இருந்த ரத்தினங்கள் சுரண்டப்பட்டு புதரில் கிடந்தது. பிறகு தனியார் பராமரிப்பில் இருந்தது. இப்போது எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. சேரிகளில் தமிழ்த் தேசிய திருவுருக்களை விமர்சனமின்றி உணர்ச்சி அடிப்படையில் மட்டுமே கொணர்ந்து சேர்த்த இத்தலைமுறை தலித் அரசியலாளர்களும் கடந்த காலத்தின் இத்தகு அனுபவங்களை எந்தவகையிலும் பொருட்படுத்தவில்லை.

இப்போது இச்சிலையை நூறுவருட தலித் அரசியலின் குறியீடாக கருதிப்பாருங்கள்.

குறிப்புகள்:

1) படத்தில் சிலையின் அருகிலிருப்பவர் அனுமந்த உபாசகருக்குப் பின் திருப்பத்தூரில் சிறிய அளவில் பௌத்த சங்கம் நடத்தி வந்த டி.பி.சின்னச்சாமி ஆசிரியரின் மகன் டி.பி.சி.சத்தியசீலன்.

2) பௌத்த செயல்பாடுகளை செரித்தே திராவிட இயக்கம் வளர்ந்தது என்று கி.வீரமணிக்கு மறுப்பு நூலெழுதிய தி.பெ.கமலநாதனின் சொந்த ஊர் திருப்பத்தூர் தான்.பெரியசாமி புலவரின் மகன் அவர். பௌத்த இயக்கத்திற்கும் திராவிட இயக்கத்திற்குமான ஊடாட்டத்தின் இத்தகு அனுபவங்களும் தான் அவரை இந்நூலை எழுதும் பின்புலத்திற்கு இட்டுச்சென்றிருக்க வேண்டும்.

ஸ்டாலின் ராஜாங்கம், பேராசிரியர்; எழுத்தாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: