சமூகம் தமிழகம் தலித் ஆவணம் வரலாறு

#தலித்வரலாற்றுமாதம்: பாபர் மசூதி இடிப்புக்குப் பின் 1000பேருடன் இஸ்லாம் தழுவிய மேலக்கால் முகம்மது பிலால்!

அன்பு செல்வம்

மேலக்கால் முகம்மது பிலால் – நூற்றாண்டு (1916 – 2016)
—————————————–—————————————–
மேலக்கால் முகம்மது பிலால். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள மேலக்கால் கிராமத்தச் சேர்ந்தவர். டாக்டர் அம்பேத்கர் தொடங்கி வைத்த “ஷெட்யூல்டு இனப் பேரவையின் (Scheduled Caste Federation – SCF)” தென் மண்டலப் பொறுப்பாளர். இரண்டாம் உலகப்போரின்போது இந்திய இராணுவத்தில் பணியாற்ற அழைக்கப்பட்டவர். அம்பேத்கரை மதுரைக்கு அழைத்த வரவேற்புக்குழுவில் இடம் பெற்றவர். 1952 -ல் நடந்த பொதுத்தேர்தலில் நிலக்கோட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அய்யானாரை எதிர்த்து போட்டியிட்டவர். வை. பாலசுந்தரம் தொடங்கிய அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில இணை பொதுச்செயலாளர். 1992 -ல் பாபர் மசூதி இடிப்புக்குப் பின் சென்னை அசோக் நகர் பள்ளி வாசலில் 1000 (300 பேர் தலித்துகள்) பேருடன் இஸ்லாம் தழுவியவர்.

டாக்டர் அம்பேத்கர், தந்தை சிவராஜ், எம்.சி.ராஜா அவர்களோடு இணைந்து தலித் அரசியலுக்கான தேவையை முன்னெடுத்தவர். அம்பேத்கருக்கு முன்னரும், பின்னரும், நூற்றாண்டின்போதும் மூன்று தலைமுறைகளின் முன்னோடியாக வாழ்ந்தவர். அம்பேத்கரின் 125 -ஆவது நூற்றாண்டு நினைவு நாளில் மாபெரும் ஓர் அம்பேத்கரின் போராளியை நினைவு கூறுவதும், அவரது நூற்றாண்டின் வரலாற்றுச் சுவடுகளை மக்களுக்கு எடுத்துச் செல்வ‌தும் மிக அவசியமானது.

(2002 -ல் அய்யா மேலக்கால் முகம்மது பிலால் மற்றும் அவரது துணைவியார் பீவி ஆகியோருடன் அன்பு செல்வம். புகைப்படங்கள் : ஒளிஓவியர் ஜெய்சிங்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: