தலித் அரசியல் தலித் ஆவணம் வரலாறு

#தலித்வரலாற்றுமாதம்: தமிழகத்தில் ’ஜெய்பீம்’ முழக்கமிட்ட முன்னோடி பி.வி.கரியமால்!

ஸ்டாலின் ராஜாங்கம் 
ஸ்டாலின் ராஜாங்கம்
ஸ்டாலின் ராஜாங்கம்

படத்திலிருப்பவர் பெயர் பி.வி.கரியமால். இப்போதுமிருக்கும் கடந்த தலைமுறை அம்பேத்கரிய அரசியல் தலைவர். எண்பது வயதை நெருங்கும் என்று நினைக்கிறேன். தருமபுரி மாவட்டம் அரூரில் வாழ்ந்துவருகிறார். பாரதீய குடியரசு கட்சி தலைவர்.

ரோகித் வெமூலா எழுப்பிய பின்னணியில் உணர்ச்சிபூர்வ நிலையை அடைந்திருக்கும் ஜெய்பீம் என்ற முழக்கத்தை இத்தகைய கவனஈர்ப்புக்கு வெளியே நீண்ட நாட்களாக தங்கள் வணக்கம் செலுத்தும் முறைகளிலும் மேடைகளிலும் பயன்படுத்தி வந்தவர்கள் குடியரசுக் கட்யினர் தாம்.இப்போதும் நீலத்துண்டு,ஜெய்பீம் வணக்கத்தோடும் வாழ்கிறார் பி.வி.கே.

தலித் அரசியல் என்பது 90களில் ஆரம்பித்தது என்று கூறுவது முழு உண்மையல்ல.அது வேறு வடிவம் பெற்றது என்று வேண்டுமானால் கூறமுடியும். அதற்கு முந்தைய இயக்கங்கள் இந்தளவிற்கு கவனம் பெற்றிருக்க வில்லை என்று கூறலாம். ஆனால் முந்தைய இயக்கங்கள் மாநில அளவில் மட்டுமல்லாது பகுதி அளவிலும் செயல்பட்டே வந்தன.அவைகள் செயல்பட்டு வந்த தொடர்ச்சியில் தான் இன்றைய இயக்கங்கள் வேர்கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு போன்ற திரட்சி இல்லாத காலத்தில் அவை செயல்பட்டன என்பதுதான் முக்கிய விசயம்.

அம்பேத்கரிய தாக்கத்தோடு செயல்பட வந்த முதல் தலைமுறையினருக்கு லட்சிய உந்துதல் இருந்தது. அவர்களின புரிதல் எவையோ அதற்கு உண்மையாய் போராடினார்கள். இழிதொழில் மறுப்பு,கல்வி,சட்டரீதியான சிவில் உரிமைகள் போன்றவை அவர்களின் முன்னுரிமையாய் இருந்தன.அம்பேத்கர் என்னும் பிம்பம் அவர்களின் மாபெரும் முன்னுதாரணம்.

இந்த பிடிவாதமும் அழுத்தமும் தான் அடுத்த தலைமுறை தலைவர்களை ஏற்பதில் இவர்களிடையே தயக்கத்தை ஏற்படுத்தின. இந்த தலைமுறை அரசியலாளர்களும் தலித் முன்னோடிகளிடமிருந்த சாதகமான அனுபவங்களை திரட்டிக்கொள்வதில் எந்த ஆர்வத்தையும் செலுத்துவதில்லை. கடந்த கால தலித் அரசியல் வரலாறு பற்றிய விமர்சன பூர்வமான பார்வை இங்கு உருவாகவே வில்லை.

பி.வி.கரியமால் போன்ற முன்னோடிகளை முதலில் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். பிறகு புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். என் சிறுவயதில் அம்பேத்கர் அமைப்பு பிரசுரங்களில் அவர் பெயரை நிறைய பார்த்ததுண்டு. அந்த காலத்தில் நிறைய பணிகள் செய்தவர். ஏக்கர் கணக்கிலான நிலங்களை விற்று பணியாற்றியவர் என்று பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேன். இப்போதும் தனியே இருந்தாலும் எதாவது ஒரு காரணம் பற்றி அரசு அலுவலங்களில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார். எதையும் எதிர்பார்த்து இப்பணிகளை செய்யாதவர் என்பது மட்டுமல்ல, அதற்கான உரிமைகோரல் பற்றியும் கூட யோசித்திராதவர். எல்லாம் இழந்தாலும் பாபாசாகேப் அம்பேத்கர் என்ற பெயருக்காகவே வாழமுடியும் என்று நம்பும் தலைமுறையைச்சேர்ந்தவர்.

இவரைச்சந்தித்து ஒரு நேர்காணல் செய்துவிடவேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. இந்த மே மாதத்தில் அதற்கு வழியிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஸ்டாலின் ராஜாங்கம், மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில்  விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.

இவருடைய நூல்கள் :

1. சாதீயம்: கைகூடாத நீதி

2. ஆரிய உதடும் உனது திராவிட உதடும் உனது 

3.  தீண்டப்படாத நூல்கள்

4. சனநாயகமற்ற சனநாயகம்

முதல் பதிப்பு: ஜனவரி 2007
பக். 124. ரூ. 50

வெளியீடு:
கவின் நண்பர்கள்
ஆர்.சி. நடுத்தெரு
வ. புதுப்பட்டி – 626 116,
விருதுநகர்.

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: