சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சாதி அரசியல் தலித் அரசியல் தலித் ஆவணம் திராவிட அரசியல்

தேர்தல் அரசியல் நம் தலைவர்களின் படங்களும்!

பிரேம் 

ப்ரேம்
ப்ரேம்
 தேர்தல் என்றவுடன் நமக்கு பெரும் கட்சிகள், ஆட்சியமைக்கும் கட்சி ஆட்சியிழக்கும் கட்சிகள் என்பவைதான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் தேர்தலை முன்வைத்துதான் நாம் மாற்று அரசியலை பார்வைகளை இன்றுள்ள அமைப்பின் போதாமைகளை கொடுமைகளை பொது வௌியில் நினைவூட்ட இயலும்.இந்தியாவின் இடதுநிலைக் கட்சிகள் தொடர்ந்து தோல்வியுற்றாலும் அவைதான் ஜனநாயக இயக்கத்தை தொடர்ந்து காத்துவருபவை.

தலித் அரசியலில் தேர்தல் மிகத்தேவையான ஒரு செயல்பாடு. தனித்த அரசியல் கட்சிகளாக தலித் தலைமையில் அம்பேத்கரிய அடிப்படைகளை முன் வைத்த செயல்பாடு நாம் நினைப்பதைவிட கூடுதலான வரலாற்றுப் பங்கு கொண்டது. மாயாவதி அம்மையும் தலைவர் தொல்.திருமாவாளவனும் இன்று இந்திய அரசியலில் ஆற்றும் குறியீட்டு பங்களிப்பு பின்வரும் தலைமுறைகளுக்கான பெரும் அடையாளத்தை வலிமையை தரக்கூடியது. சமூக உளவியலில் இத்தலைமைகள், கட்சிகள் உருவாக்கும் மாற்றம் சற்று உற்று கவனிப்பவர்களுக்குப் பல தெளிவுகளை அளிக்கக்கூடியது.

யாருடன் கூட்டணி, எவ்வகை செயல்திட்டம், ஆட்சியில் இருந்து என்ன பெரும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும்? என்ற கேள்விகள் தலித் அரசியலில் கடைசி கட்ட பேச்சுகள்தான். பிறகட்சிகளில் உள்ள தலித் பிரதிநிதிகள் வெறும் எண்ணிக்கை என்ற அளவில்கூட பெரும் பங்கையே ஆற்றிவருகிறார்கள். ஒடுக்கப்பட்டோர் பாதிக்கப்படும்பொழுது வெறும் 10 பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல்தான் இன்று வரை கட்சிகடந்து தேசிய அரசியலில் அழுத்தத்தை உருவாக்குகிறது. ஒரு ஆதிக்கசாதி பிரதிநிதி சாதிகாக்கும் இந்திய வரலாற்றின் குறியீடு. ஒடுக்கப்பட்டோரில் இருந்து உருவாகும் ஒரே ஒரு தலைமையும் ஒரே ஒரு மக்கள் பிரதிநிதியும்கூட சாதிக்கெதிரான ஒரு இருப்பியக்கம்தான். இதனால்தான் இந்திய அரசியலில் இடம்பெறும் உரிமையும் (இடஒதுக்கீடு என சொல்வார்களே) சமூகநீதி அரசியலையும் அழித்துவிட ஆதிக்கசாதி- பிராமண சக்திகள் எல்லாவகையிலும் தொடர்ந்து முயன்றுகொண்டே உள்ளனர் எல்லா வகையிலும் எல்லா வடிவிலும். அதனை நாம் எதிர்த்து உடைத்துக்கொண்டே இருக்க வேண்டும் ஒவ்வொரு வடிவிலும். தேர்தல் அதில் ஒரு வடிவம், தலித் தலைமையிலான கட்சிகள் ஆற்றல் கொண்ட இன்னொரு வடிவம்.

தமிழகத்தில் சற்றே ஓய்ந்திருந்தால், சில ஆண்டுகள் ஏமாந்திருந்தால் உருவாகி இருக்கவே முடியாத சாதியற்ற சமூக அரசியல் (தலித் அரசியல் கட்சி) இன்று 25 ஆண்டுகளைக் கடந்து பெரும் மக்கள் திரட்சியுடன் நிலைபெற்றிருக்கிறது. அதை நிலைநிறுத்தலுக்கான தலைமையின் முயற்சிகள் உத்திகள் பெரும் அவமானங்கள் ஒதுக்குதல்கள் ஏமாற்றங்களை இழிவுபடுத்தல்களை தன்னில் வடுவாக ஏற்று முன்செல்கிறது.
நான் சொல்ல வருவது புரிய வேண்டுமெனில் அண்ணல் அம்பேத்கர் அமர்ந்த பாராளுமன்ற இருக்கையை ‘சுத்தி’ சடங்கு செய்து தீட்டு கழித்த ஜனநாய அரசியல்வாதிகளின் கொடுஞ்செயலை நினைவு கொள்ள வேண்டும். அதன் வழி உள்மனதில் வலியுடன்கூடிய ஒரு புரிதல் உருவாகும். ஆம் தேர்தல்வழி நாம் இந்திய மண்ணை ‘தீட்டுப்படுத்த’ வேண்டும். நம் தலைவர்களின் சிலைகளும் படங்களும் திசைகளை நிறைக்க வேண்டும்.

ப்ரேம், எழுத்தாளர்; பேராசிரியர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.