அரசியல் இந்தியா மோடி அரசு

இந்திய ராணுவ படைத் தளங்களில் அமெரிக்க ராணுவம்; அமெரிக்காவிடம் சரணடையும் மோடி அரசு!

இந்திய கப்பல் படை மற்றும் விமானப்படைத் தளங்களை அமெரிக்க ராணுவமும் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்திட மோடி அரசாங்கம் ஒப்புக் கொண்டிருக்கிறது. இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரும், இந்திய பாதுகாப்பு அமைச்சரும் நீர்வழி மற்றும்வான்வழிப் பரிவர்த்தனைப் புரிந்துணர்வு ஒப்பந்தம்(LEMOA-Logistics Exchange Memorandum of Agreement) ஒன்று ஏற்படுத்திக்கொள்ளப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இது, அமெரிக்கா தன்னுடைய ராணுவக்கூட்டாளி நாடுகளான பிலிப்பைன்ஸ், தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் செய்து கொண்டுள்ள நீர்வழி மற்றும் வான்வழி ஒத்துழைப்பு ஒப்பந்தம் (LSA-Logistic Support Agreement)என்ற பெயரில் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் மறு பெயரேயாகும். இது, நம் பாதுகாப்பு அமைச்சர் சொல்லியது போன்றல்லாமல், அமெரிக்க ராணுவக் கப்பல்களும், ராணுவ விமானங்களும் நம் நாட்டின் தளங்களில் எரிபொருள்களை நிரப்பிக்கொள்வதற்கும், செப்பனிட்டுக் கொள்வதற்கும், தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வதற்குமான ஏற்பாடுகளேயாகும்.

US army

இந்த ஒப்பந்தத்துடனேயே, மேலும் இருஒப்பந்தங்களும் செய்து கொள்ள இருப்பதாக ராணுவ அமைச்சர் சூசகமாக தெரிவித்திருக்கிறார். அதாவது, தகவல் தொடர்பு பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்(CISMOA-Communication and Information Security Memorandum of Agreement) மற்றும் அடிப்படைப் பரிவர்த்தனை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் என இரு ஒப்பந்தங்களும் உருவாகிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இவை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுவிட்டால் பின்னர் இந்திய ராணுவம் முழுமையாக அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். நம் நாடு சுதந்திரம் பெற்ற பின் எந்தவொரு அரசாங்கமும் செய்யத்துணியாத அளவிற்கு இவ்வாறு செய்வதன் மூலம், பாஜக அரசாங்கம் வரம்பு மீறிச் சென்றிருக்கிறது, இந்தியாவை அமெரிக்காவின் கீழ் இயங்கும் ஒரு முழுமையான ராணுவக் கூட்டாளியாக மாற்றி இருக்கிறது. இதன்மூலம், மோடி அரசாங்கம், நாட்டின் இறையாண்மைக்கும், நாட்டின் ராணுவரீதியான கேந்திரத் துறைகளில் சுயாட்சிக்கும் முட்டாள்தனமான முறையில் ஊறு விளைவித்திருக்கிறது. அமெரிக்காவிடம் சரணடையும் இப்போக்கினை அனைத்து அரசியல்கட்சிகளும், நாட்டுப்பற்று கொண்டுள்ள அனைத்துக் குடிமக்களும் எதிர்த்திட வேண்டும். இத்தகைய தேச விரோத நடவடிக்கைகளுக்கு மக்களின் ஆதரவு கிடையாது என்பதை மோடி அரசாங்கத்திற்கு எடுத்துக் காட்டவேண்டும். இவ்வாறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதை உடனடியாகக் கைவிட வேண்டும்.’’ இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நன்றி: தீக்கதிர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.