சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம்

விஜயகாந்தை எதிர்த்து களமிறக்கப்படும் பாமக வழக்கறிஞர் பாலு: சிறு குறிப்பு

விஜயகாந்துக்கும் பாலுவுக்கும் ஏழாம் பொருத்தம். விஜயகாந்த் ‘மக்களுக்காக மக்கள் பணி’ என தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் தமிழகம் எங்கும் பயணம் செய்தார். அப்போதைய கூட்டங்களில் கடுமையாக பாமக வழக்கறிஞர் பாலு  குறித்து பேசுவார். பாலுவும் தொலைக்காட்சி விவாதங்களில் விஜயகாந்தை காய்ச்சி எடுப்பார்.  பாமகவின் கோட்டையை கைப்பற்றி விட்டோம் என விஜயகாந்த் பேசியதையும், மக்களவைத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் இருந்த பாமக, தங்களுக்காக தேர்தல் பணியாற்றவில்லை என்பதையும் பரஸ்பரம் காரணங்களாக கூறிகொள்கின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது. உளுந்தூர்பேட்டை தொகுதியில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை எதிர்த்து, அதிமுக சார்பில் குமரகுருவும், திமுக சார்பில், வசந்தவேலும் போட்டியிடுகின்றனர். பாமக வெளியிட்டிருந்த வேட்பாளர் பட்டியலில் ராமமூர்த்தி அந்தத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேமுதிக அறிவிப்புக்குப் பின்,  அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்குப் பதிலாக வழக்கறிஞர் பாலு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டையில் வெற்றி பெற்றேன் என்று சொல்லிவந்த விஜயகாந்தை தோற்கடிக்க எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார் வழக்கறிஞர் பாலு.

வழக்கறிஞர் பாலுவுக்கும் தருமபுரி இளவரசனின் மரணத்தும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. வழக்கறிஞராக இளவரசனிடம் இருந்து அவருடைய மனைவி திவ்யாவை பிரித்த பெருமை இவரைச் சேரும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.