அரசியல் இந்தியா நீதிமன்றம்

“பிரதமர் எஃப்டிஐ, மேக் இன் இந்தியா பற்றியெல்லாம் பேசுகிறார்”: மோடி முன்பு நா தழுதழுத்து விமர்சனம் செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!

புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வருடாந்திர முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மேடையில் இருக்கும் போதே, நீதித்துறை விவகாரத்தில் மத்திய அரசின் செயலற்ற தன்மையை தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் நா தழுதழுக்க விமர்சித்தார்.

“நாட்டின் வளர்ச்சிக்காக நான் இந்தத் தருணத்தில் கெஞ்சிக் கேட்கிறேன், நீதித்துறையை விமர்சிக்காதீர்கள். ஒட்டுமொத்த சுமையையும் நீதித்துறை மீது சுமத்தாதீர்கள். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு.

நீதிமன்ற வழக்கில் ஈடுபட்டுள்ளவர்கள் சிறையில் வாடும் ஏழை வழக்காளிகள், (உணர்ச்சிவசப்பட்டு குரல் உடைந்து) ஆகியோருக்கு மட்டுமல்லாது. நாட்டின் முன்னேற்றம் கருதி கூறுகிறேன், நீதித்துறையை விமர்சிப்பது மட்டும் போதுமானதல்ல என்பதை நீங்கள் உணருமாறு கேட்டுக் கொள்கிறேன். நீதித்துறை மீது ஒட்டுமொத்த சுமையையும் ஏற்ற முடியாது.

உயர் நீதிமன்றங்களில் 454 நீதிபதி பதவிகள் நிரப்பப் படமால் காலியாகவே உள்ளன. இதற்குக் காரணம் தேசிய நீதித்துறை ஆணைய (என்.ஜே.ஏ.சி) வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்ததே.

இந்த வழக்கு முடிந்தவுடன் 6 வாரங்களில் நீதிபதிகள் நியமனத்திற்கான கொலீஜியம் நிலுவையில் உள்ள நியமன பரிந்துரைகளுக்கு அனுமதி அளிக்க என்.ஜே.ஏ.சி. வழக்குக்கு முன்னதாகவே நாங்கள் 54 உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்தோம். 50 சதவீத பரிந்துரைகளை நாங்கள் நிராகரித்தோம், காரணம் நீதித்துறை மீது ஒரு சிறு களங்கம் கூட ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே. ஆனால் மத்திய அரசிடம் இன்னும் 169 பரிந்துரைகள் அனுமதிக்காக காத்திருக்கின்றன.

இதற்கு அனுமதி வழங்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளப்போகிறீர்கள்? எத்தனை நாட்கள்? நாட்டில் உள்ள சிறைகள் நிரம்பி வழிகின்றன. அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மட்டும் 10 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 1987-ஆம் ஆண்டு சட்ட கமிஷன், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. 10 லட்சத்திற்கு 10 நீதிபதிகள் என்ற எண்ணிக்கையை, 50 ஆக உயர்த்த வேண்டும் என கூறியுள்ளது. இது தொடர்பாக பேசப்படுகிறது. நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்படுகிறது. மக்கள் பேசுகிறார்கள். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

சரி எனக்கூறும், மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் தான் துவக்க வேண்டும் என கூறுகிறது. இதனால், ஏற்பட்ட சர்ச்சை நீண்டு கொண்டேதான் செல்கிறது. எப்டிஐ., மேக் இன் இந்தியா பற்றியெல்லாம் பிரதமர் பேசிகிறார். அது போல் நீதிபதிகள் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

2013-ஆம் ஆண்டு நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு உறுதி மொழி அளித்தது, ஆனால் இன்று வரை நடவடிக்கை இல்லை. மத்திய அரசு மாநில அரசுதான் முன்னெடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளோ மத்திய அரசுதான் முன்னெடுக்க வேண்டும் என்றும் மாறி மாறி கூறி வருகின்றனர். இப்படியான மோதல் போக்கு தொடர நீதிபதிகள் எண்ணிக்கை அப்படியே தொடர்கிறது, பலர் சிறையில் தத்தளித்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன, ஆனால் நீதிபதிகளால் 2 கோடி வழக்குகளையே முடித்து வைக்க முடிகிறது. வழக்குகளை முடித்து வைக்கும் எங்களது விகிதம் பற்றி ஒருவரும் பேசுவதில்லை. நீதிபதிகள் தங்கள் திறமையைச் செயலாக்கம் செய்வதற்கும் ஒரு வரம்பு உள்ளது.

ஐக்கிய உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆண்டொன்றுக்கு 81 வழக்குகளை முடித்துக் கொடுக்கிறது. அயல்நாடுகளிலிருந்து வரும் நீதிபதிகள் உண்மையில் இந்திய நீதிபதிகளைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், இத்தகைய அழுத்தன் நிரம்பிய சூழலில் இந்திய நீதிபதி எப்படி வேலை செய்கிறார் என்று அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர். நாங்கள் போராடுகிறோம் காரணம் மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. எங்களால் இயன்றவற்றை சிறப்பாகச் செய்கிறோம்.

இது குறித்து வாக்குறுதிகள் மேற்கொள்ளப்பட்டன, நாடாளுமன்றத்தில் விவாதித்தனர், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

நீதிமன்றங்களில் தேங்கியுள்ள லட்சக்கணக்கான வழக்குகளை தீர்க்க, தற்போதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை 21 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரமாக உயர்த்த வேண்டும். நீதிக்கு வேறு எதுவும் உதவாத நிலையில் நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே, நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். இந்த உணர்ச்சிகர முறையீடு உதவும் என உணர்கிறேன்.

இந்திய மக்கள் தொகைக்கு 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள் உள்ளனர். இவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகளில் ஒப்பிடுகையில் குறைவு. இந்திய நீதிபதி வருடத்துக்கு 2,600 வழக்குகளை கையாள்கிறார். ஆனால் அமெரிக்காவில் 81 வழக்குகளை மட்டுமே கையாள்கிறார் ” என்று பேசினார்.

தினமணி, என்டீடிவி செய்திகளின் உதவியுடன்.. 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: