அரசியல் இந்தியா சமூகம் தலித் அரசியல் தலித் ஆவணம்

பூலே முதல் அம்பேத்கரை வரை – கற்கவேண்டிய பாடங்கள்:டாக்டர் பி.டி. சத்யபால் பேசுகிறார்; ஒரு நாளை ஒதுக்கிவைத்துக்கொள்ளுங்கள்

குட்டி ரேவதி

குட்டி ரேவதி
குட்டி ரேவதி

மானுடவியல் பேராசிரியரான சத்யபால் அவர்கள், இந்தியச் சமூகத்தின் சாதியக் கொடுமைகளையும் அதன் வரலாற்றையும் மக்களை, மண்ணுரிமைப் போராளிகளைப் பிரித்து வைத்திருப்பதில் கெட்டிக்காரத்தனமாக இயங்கும் பார்ப்பனீய இயந்திரத்தின் தந்திரங்களையும் மெய்யான தகவல்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆற்றல் மிக்கவர். முழுநாள் சொற்பொழிவை எந்தத் சோர்வும் தடையும் இன்றி அம்பேத்கரின் முழு எழுச்சியுடன் பகிரக்கூடியவர். அம்பேத்கரின் கொள்கைகளை, எந்த ஆர்ப்பாட்டமுமின்றி இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்ப்பதில் முனைப்பானவர். சமூகப் பணியாற்ற, சமூகத்தைப் புரிந்துகொள்ள விரும்புவோர் தவறவிடாதீர்!

ஃபேஸ்புக் போராளிகள் முதல் மேடையில் பேசும் அரசியல் தலைவர்கள் வரை சமூகத்தின் சாதிய வன்மங்களை எப்படி புரிந்துகொள்வது, எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியாத நெருக்கடிகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன.
சாதி மறுப்பு குறித்துத் தொடர்ந்து பணியாற்றுபவர்கள் கூட, சாதியச் சிந்தனையின் நெருக்கடிகளைக் கருத்தியல் ரீதியாகக் கையாளும் ஆற்றலை இழந்து, ஒருவர் மீது ஒருவர் வெறுப்பென்னும் சேற்றை வாரி இறைத்துக் கொள்கின்றனர்.
சாதி ஆணவக் கொலைகள் தொடர்வது குறித்த எந்தக் கவலையுமின்றி தினமும் ஃபேஸ்புக் உருள்கிறது.
பொதுச்சமூகம் தேர்தல் அரசியலின் சினிமாத்தனமான அன்றாட சுவாரசியங்களை அசைபோடுவதில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில், எல்லோருக்கும் அவசியமானது, டாக்டர் பி.டி.சத்யபால் அவர்களின் “பூலே முதல் அம்பேத்கரை வரை – கற்கவேண்டிய பாடங்கள்” உரை.

பெரும்பான்மை மக்கள் மீது திணிக்கப்பட்ட ஜாதிய இழிவுகள், பாகுபாடுகள், தீண்டாமைக் கொடுமைகள் என பன்னூற்றாண்டுகளாகத் தொடரும் அநீதிகளை முடிவுக்கு கொண்டுவரத் துடிப்பவர்களுக்கு தீர்வுகளை முன்வைக்கும் ஒரு நாள் சொற்பொழிவு.

பூலே முதல் அம்பேத்கர் வரை – கற்க வேண்டிய பாடங்கள், காணவேண்டிய களங்கள், ஒன்றிணைய வேண்டிய புள்ளிகள் :
டாக்டர் பி. டி. சத்யபால், துறை தலைவர், மானுடவியல் துறை, ஆந்திரா பல்கலைக் கழகம்
நாள்: 30.04.2016, காலை சரியாக 9.30 முதல் 6 மணி வரை
இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7
நன்கொடை: ரூ.100/- (மதிய உணவு உள்பட)

குட்டி ரேவதி, எழுத்தாளர்; திரைப்பாடலாசிரியர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.