சர்ச்சை நீதிமன்றம் பெண் குரல் பெண்கள் வாழ்வியல்

“நீ என்ன லாயர் மயிரு”; “வெளிநாட்டுலயா இருக்குறா”: பேண்ட் சட்டைப் போட்ட முகநூல் தமிழ் கலாச்சார காவலர்கள் இந்த உடைக்கு சொல்லும் கமெண்ட்!

கிருபா முனுசாமி உச்சநீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இவர் தன்னுடைய முகநூலில் ஒரு புதிய படத்தைப் பகிர்கிறார். அந்தப் படத்தை முகப்பில் தந்திருக்கிறோம். இந்த படத்தில் தமிழ் கலாச்சாரத்துக்கு விரோதமாக உடை (தமிழ் கலாச்சார உடை எது? ரவிக்கை அணியாமல் நீளமான புடவையை உடலில் சுற்றிக் கொள்வது இப்படித்தான் பண்டைய தமிழர்கள் உடையணிந்தனர். இதுதான் இவர்கள் குறிப்பிடும் தமிழ் கலாச்சார உடையா?) அணிந்தார் என்பதற்காக கிருபாவுக்கு அறிவுரை வழங்குகிறார் ஒருவர். அவர் அறிவுரை குறித்து கேள்வி எழுப்பும் கிருபாவை அத்துமீறி எழுதுக்கிறார் இன்னொருவர்.

கிருபா முனுசாமி

இன்று நான் மாற்றிய சுயவிவர படம் குறித்து என் உள்பெட்டிக்கு ஒரு தமிழ் கலாச்சார  பாதுகாவலர் அனுப்பிய செய்தி.
அட்வைஸ் கொடு:
சகோதரி என்ற போர்வையில் கிருபாவின் உடை பற்றி அட்வைஸ்…
advice

எது தமிழ் கலாச்சாரம்? ஆண் கால்சட்டை அணிவதை கண்டுக்கொள்ளாத கலாச்சாரம், ஒரு பெண் தனக்கு வசதியான உடையை அணியும்போது மட்டும் கேள்வி கேட்குமானால் அப்பேற்பட்ட கலாசாரத்தை நீங்களே காவல்காத்து மெச்சிக் கொள்ளுங்கள், எனக்கு அது தேவையில்லை. அதுமட்டுமல்லாது, கொஞ்சம் கூட அடிப்படை நாகரிகம் இல்லாமல் அடுத்தவரின் தனிமனித உரிமையை மீறி ஒருவர் எப்படி உடை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதிகாரம் எங்கிருந்து இவர்களுக்கு வருகிறது?

கடைசியாக, நான் நீதிபதி ஆகப் போவதாக எப்போதாவது கூறியிருக்கிறேனா? என் தொழிலின் அடுத்த கட்டத்தை நிர்ணயிக்கும் உரிமையை அடுத்தவருக்கு யார் கொடுத்தது? உங்களுக்கெல்லாம் தனிமனித உரிமை என்னும் வார்த்தையாவது தெரியுமா? இல்லையெனில், தயவுசெய்து இப்போதாவது தெரிந்துக் கொள்ளுங்கள்.

என் உடை, என் உரிமை!

(இப்படியான அறிவுரைகளை வழங்குவது என்பதில் இது முதல் முறை அல்ல. சட்டையே இல்லாமல் இருக்கும் ஆண்களிடம் யாராவது தமிழ் கலாசாரம் குறித்து பேசுகிறார்களா? ஆனால் எங்கள் உடைகளை பற்றி மட்டும் ஏன் இவ்வளவு கவலைப்பட வேண்டும். எங்கள் வலி எங்களுக்கு மட்டும் தான் தெரியும். இந்த செய்தியை எனக்கு அனுப்பியவரை பொதுவெளியில் அம்பலபடுத்தியது தவறில்லை என்றே தோன்றுகிறது.)

அத்துமீறு: “போடி நீ என்ன லாயர் மயிரு”

மேலே உள்ள பதிவுக்கு வந்த பின்னூட்டம்…

advice 2

கிருபாவின் பதிவு: “போடி” நீ என்ன லாயர் மயிரு” “இவளுக்கு” “இவ என்ன வெளிநாட்டுலயா இருக்குறா” “துணியே இல்லாம இரேன் யாரு கேக்க போறா”

கேள்வி 1: என் சுயவிவர படத்தில் நான் அணிதிருக்கும் உடையில் என்ன ஆபாசம் இருக்கிறது?

கேள்வி 2: அப்படியே இருந்தாலும், அது அந்த உடையை அணியும் பெண்ணின் தனிப்பட்ட உரிமை இல்லையா, எந்த அதிகாரத்தின் அடிப்படையில் நீங்கள் அதை கேள்விக்குள்ளாக்க முடியும்?

கேள்வி 3: ஆண்கள் அணியும் கால் சட்டையும், கை சட்டையும், செருப்பும் கூட தமிழ் கலாச்சாரமா? உங்கள் முப்பாட்டங்களில் எத்தனை பேருக்கு செருப்பு என்ற ஒன்று இருந்தது தெரியும்?

கேள்வி 4: சட்டையே இல்லாமல் 6 பேக்கில் படம் பிடித்து ஆண்கள் போடும் போது அதைக் கண்டுக் கொள்ளாத தமிழ் காலாச்சார பாதுகாவலர்கள், ஏன் பெண்களிடம் மட்டுமே கலாச்சாரத்தை வலியுறுத்துகிறீர்கள்?

கேள்வி 5: அப்படி பெண் உடையில் தான் உங்கள் தமிழ் கலாசாரம் இருக்கிறதென்றால், தமிழ்த் திரைப்படங்களில் பெண்களை ஆபாச பொருளாக பயன்படுத்துவதைக் கண்டித்து அப்படியான தமிழ்த் திரைப்படங்களையே பார்ப்பதில்லை என இதுவரையில் நீங்கள் எவரும் வீட்டில் இருக்கவில்லையே, ஏன்?

கேள்வி 6: ‘சில்க்’ ஸ்மிதா போன்ற குணசித்திர நடிகையை வெறும் கவர்ச்சி பொருளாக மட்டுமே பயன்படுத்தி அவரை மரணம் வரையில் தள்ளும் நிமிடம் வரைக்கும், இந்த தமிழ் கலாசார பாதுகாவலர்கள் வாய் திறக்காமல் ரசித்தீர்களே, இதுதான் உங்கள் யோக்கிதையா?

கேள்வி 7: இந்த வயதிலும், தன் மகளைவிட சிறிய பெண்ணோடு திரைப்படங்களில் காதல் செய்யும் ரஜினிகாந்த்-ஐ கண்டித்து, தமிழ் கலாசார பாதுகாவலர்களான உங்களில் எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தில் இறங்குநீர்கள்?

நான் எனக்கு வசதியான உடை அணிந்து நிற்பதையே பொறுத்துக்கொள்ள முடியவில்லை, இதில் நான் துனியில்லாமால் இருந்தால் கூட இவர்கள் யாரும் கேட்க மாட்டாங்களாம். அத்தனை நாகரிகம் தெரிந்தவர்களாக இருந்தால் இப்படியான பின்னூட்டம் இட முடியுமா என்ன?

படித்தவர் என்பதற்கான நாகரிகம் இல்லாமல், படிப்பின் வாசனையே தெரியாதோ என்பது போன்ற பின்னூட்டத்தை இட்டிருக்கும் இந்நபர் படித்து கிழிப்பதைப் பற்றியும், என் தொழிலைப் பற்றியும் பேசி இருப்பது இவர்களின் தமிழ் கலாசார கற்பிதம் என்பது பெண் அடிமைத்தனமே அன்றி வேறொன்றுமில்லை என்பதையே அப்பட்டமாக காட்டுகிறது.

“மன்னிச்சிடுங்க மேடம்” சொல்லு!

அத்தனை அத்துமீறல்களையும் செய்துவிட்டு மன்னித்துவிடுங்கள் என்பது முகநூலர்களின் வழக்கம்.

advice 3

கிருபாவின் பதில்: இப்போ எங்கிருந்து வந்தது “மேடம்”? இதுல சம்பந்தமே இல்லாம ஒரு பதிவுல காலை வணக்கம் வேற. பக்கபலமாக உடன் நின்ற அத்தனை தோழமைகளுக்கும் நன்றி!

Advertisements

One comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.