அரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சமூகம் செய்திகள் தமிழகம் தலித் அரசியல் தலித் ஆவணம் திராவிட அரசியல் தீண்டாமை வீடியோ

#வீடியோ:புதுக்கோட்டையில் சாதி கலவர சூழல்: பின்னணியில் அமைச்சர் விஜயபாஸ்கர்?

புதுக்கோட்டை தொகுதியில் மக்கள் பணிகளால் செல்வாக்குமிக்கவராக அறியப்பட்டவர் சொக்கலிங்கம். அந்தப் பகுதியில் தனிப்பட்ட முறையில் செல்வாக்குடன் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரை அதிமுக அழைத்து கட்சியில் சேர்த்தது.  சட்டப் பேரவைத் தேர்தலில் அவருக்கு சீட்டு கிடைக்கலாம் என பேச்சு எழுந்தது. ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கரின் தலையீட்டால் சீட்டு கிடைக்கவில்லை. இந்நிலையில் சொக்கலிங்கம் புதுக்கோட்டை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவது என களமிறங்கினார்.

சொக்கலிங்கம் செல்வாக்கு காரணமாக அதிமுக தோல்வியடையலாம் என்கிற அச்சத்தில் திங்கள்கிழமை திருவிழாவுக்குச் சென்றிருந்த சொக்கலிங்கத்தையும் அவருடைய மனைவியையும் அதிமுகவினர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் உள்ளனர்.

13141057_1149103921786951_656453845_n

சொக்கலிங்கம் முத்தரையர் சாதியைச் சார்ந்தவர் என்பதைச்சுட்டிக் காட்டி தாக்குதலின்போது ‘எங்க முன்னாடி நிக்கக் கூடா தகுதி இல்லாதவங்க, எங்க எதிர்த்து தேர்தல்ல நிப்பீங்களா?’ என்று கூறியுள்ளனர். இந்நிலையில் விஜயபாஸ்கர் தான் சார்ந்த கள்ளர் சாதியினரை, முத்தரையர்களுக்கு எதிராக தூண்டிவிடுவதாகவும் இதனால் புதுக்கோட்டை பகுதியில் செவ்வாய்கிழமை காலை முதல் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கிராமங்களில் சாலைமறியல், பதற்றமான சாதிக் கலவரம் ஏற்படும் சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.