மதுரையில் நடந்த திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, பிரதமர் மோடியை புகழ்ந்தார்.
“கரூரில் அன்புநாதன் போன்றவர்கள் அமைச்சர்களின் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு கோடி கோடியாக கொள்ளை அடிக்கின்றனர். இவர்கள் மீது நிர்வாகத் திறமை மிக்க, எதையும் துணிச்சலுடன் செய்யும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து எங்களை அமைதியாக ஜனநாயகக் கடமை ஆற்ற வழி ஏற்படுத்தி தர வேண்டும். மாற்றப்பட்ட அதிகாரிகளை மீண்டும் அதே இடத்தில் நியமிக்கும்படி தேர்தல் ஆணையத்தை தம்பிதுரை மிரட்டுகிறார். இந்த தேர்தலில் நாணயம், நேர்மை நிலைநாட்டப்பட வேண்டும். அது தேர்தல் ஆணையத்திலேயே யாராக இருந்தாலும் அதை தைரியமாக பிரதமர் மோடி செய்ய வேண்டும். மோடி துணிச்சலானவர். கண்ணியமானவர், நியாயமானவர், நிர்வாகத்தில் தவறுக்கு இடமளிக்காமல் கறாரானவர்; பழைய நண்பர் மோடி இதை செய்வார் என நம்புகிறோம்” கருணாநிதி மோடியை புகழ்ந்தார்.