கல்வி சமூகம் தலித் ஆவணம்

”அங்கு போகாதே! அது அவர்களின் இடம்!” பாண்டிச்சேரி பல்கலையில் தலித் ஒடுக்குமுறையின் நேரடி அனுபவப் பகிர்வு

அருணா ஸ்ரீ

இது தில்லி பெண்ணைப் பற்றியோ கேரளப் பெண்ணைப் பற்றியோ அல்ல. பொதுவெளியில் களையெடுக்க வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சனை. அதிலும் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் கவனிக்க வேண்டிய விசயம்.

இன்று எங்கு பார்த்தாலும் தலித் மக்களின் வாழ்வு சார்ந்த பிரச்சனைகளையும் சவால்களையும் முன்னெடுத்து வலைத்தளங்களில் வாதிடுகிறோம். உயிர்களின் மதிப்பு கூட ஜாதி அடிப்படையில் தான் மதிப்பிடப்படுகிறது.
எங்கும் தலைவிரித்தாடும் இந்த பேயானது , கல்வி மையங்களிலும் ஆடும் ஆட்டம் ஆரம்பக் கட்டத்திலே தடுக்க வேண்டிய ஒன்று..

* சுருக்கமாக விவரிக்கிறேன்*
புதுவை பல்கலைக்கழத்தில் , ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்புக்கான பாடத்திட்டத்தில் ( course structure of 5 year integrated M .Sc) இந்த வருடம் ஒரு சிறிய புகுத்தல் . 5 வருடத்திற்குள் ஆங்கிலம் தவிர்த்து ஏதேனும் ஒரு மொழியைக் கட்டாயப் பாடமாக தேர்வு செய்து முடித்திருத்தல் வேண்டும் ( it is mandatory to finish any language course excluding english within 5 years ). எனக்கு தெரிந்த junior பெண் ஒருத்தி இது பற்றி ஆலோசனைப் பெற தன்னுடைய துறையில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரை நாடி இருக்கிறாள்.( அந்த ஆசிரியர் இந்த பெண்ணுடைய வீட்டிற்கு எதிர்வீட்டுகாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது).
“நானும் என் வகுப்பு தோழர்களும் தமிழ் துறையில் ஏதேனும் ஒரு பாடம் தேர்வு செய்யலாம் என நினைக்கிறோம் . சரியாக வருமா ?” என்று கேட்டு இருக்கிறாள்.

*அதற்கு அந்த ஆசிரியர் , ” தமிழ் துறையில் எல்லாரும் sc /st பசங்க தான் பொண்ணே இருப்பா . அங்கலாம் போகக் கூடாது. ஹிந்தி மாதிரி எதாது எடுத்துக்கோ ” என்று சிறப்பான அறிவுரை கொடுத்திருக்கிறார். இந்த பெண் எதுவும் பேசாமல் வந்துவிட்டாள் . என்னிடம் இது பற்றி சொல்லி வருத்தப்பட்டாள் .

இதே ஆசிரியர் நான் .பி. எஸ்ஸியில் இருக்கும்போது , நானும் என் இசுலாமியத் தோழியும் கையெழுத்து வாங்க சென்ற பொது, என்ன பொண்ணே சாப்பிட்ட என்று கேட்க, என் தோழி, ‘ சாம்பார் சாதம், பீப், முட்டை மேடம் ‘ என்று வெகுளியாய் சொல்லி வைத்தாள். உடனே அவர் முகம் போன போக்கு!! எங்களை மேசைக்கு அருகில் கூப்பிட்டு , அதில் இருந்த காமதேனு படத்தைக் காட்டி , ‘ இது சாமி புரியுதா? இல்லையா? இனிமே என் ரூம் பக்கம் வராதே .. போ போ ” என்று விரட்டாத குறை தான்.

அன்று என் தோழி கலங்கியபோது கூட புரியவில்லை எனக்கு !!

வகுப்பறையில் மற்ற மாநில மாணவர்கள் கிசுகிசுத்த போதும் , எரிச்சலுடன் , ” எல்லாம் quota வில் வந்துவிட்டு சூழ்நிலையை கெடுக்கறீங்க ‘ என்று ஆங்கிலத்தில் திட்டுகிறார் orrisa கார வாத்தியார் இன்னொருவர். அவரும் ‘எஸ் டி ‘ சமூகதைச் சார்ந்தவர் தான். ஏணியை எட்டி உதைக்கும் வகையறா .
# என்ன மசுரு தண்டா உங்க பிரச்சன ?
பொதுவான ஒரு கேள்வி தான். fc /obc /mbc க்கு மட்டும் தான் பல்கலைக்கழகம் என்று ஒரு போர்டு தொங்க விடு முடியுமா உங்களால் ? என்ன திமிர் இருக்கவேண்டும் உங்கள் உடம்பில் ? தமிழ் துறையில் உள்ள obc mbc பிள்ளைகள வெளியில் துரத்தி விட்டு விரல் விட்டு எண்ணுங்கள் எத்தனை sc /st பிள்ளைகள் என்று.

இதற்கு கோபப்படுகிறேனே , அப்போ எனக்கும் ஜாதி வெறி தானே என்று உங்கள் அறிவு உங்களைக் கேட்கலாம். ஆமாம் . எனக்கு ஜாதி வெறி தான். ஏன் தெரியுமா ?

* விடுதியில் அறைத் தோழர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பார்க்க வருவார்கள். வந்த ஒரு மணி நேரத்தில் என் படுக்கையில் உட்கார்ந்துகொண்டு ‘ நீங்க என்ன மா ? ‘ என்று கேட்பார்கள். அடுத்த சில நிமிடங்களில் மெதுவாக எழுந்து தன் பிள்ளையின் படுக்கைக்கு தாவி விடுவார்கள். நடவடிக்கை மாறிவிடும். எங்க வீட்லலாம் /இதுலலாம் என்று தோரணை மாறும். நான் கொடுக்கும் ஊறுகாயைத் தொட்டுக்கொள்ள மாட்டர்கள். போகும்போது , ‘பொருள்லாம் பத்திரம். சேர்க்கை முக்கியம் பாப்பா ‘என்று தன் பிள்ளையிடம் சொல்லிவிட்டு போவார்கள். # வலிக்கும் எனக்கு

* scholarship க்கு sign வாங்க நிற்கும்போது , ‘என்னமா? sc scholarship ஆ ? சரி wait பண்ணு ‘ என்று சொல்லிவிட்டு , தன் வேலையை பார்த்துகொண்டே இருப்பார்கள் . நம்ப மாட்டீர்கள் , தொடர்ந்து 3 நாட்கள் காத்திருந்து , பொறுமை இழந்து உள்ளே போனால் , ‘ என்னமா ? sign ஆ .. குடு குடு. சரி , sc ஆ நீ ? பாத்தா தெரிலையே ‘ என்று மேலயும் கீழுமா ஊடுருவிய போது , ‪#‎எனக்கு‬ வலித்தது .

* விடுதியில் இரண்டாம் ஆண்டு : வாரத்திற்கு ஒருவர் என 3 பேரும் மாற்றி மாற்றி முறை வைத்து அறையை சுத்தம் செய்யும் வழக்கம் அங்கே. ஆனால் ஒவ்வொரு வாரமும் , மற்ற இருவரும் என்னை நடத்திய விதம் , மேலிடம் வரை சென்றால் கூட விஷயம் நமுத்து போய்விடும் என்று வாய் மூடி , அறையை சுத்தம் செய்யப் பழகினேன். இப்போது இருக்கும் மனத்தைரியம் அப்போது இல்லை. ‪#‎வலித்தது‬ எனக்கு .

* உடன் பழகி நேசித்தவன் , பெரும் சண்டையில் , ” உன் ஜாதி கார பொண்ணுங்கள எவனாது கல்யாணம் பண்ணிக்க லவ் பண்ணுவானா ? ஒரேடியா பண்ற ….” என்று ஒருவளிடம் நீட்டி முழக்கியபோது # எனக்கு வலித்தது.

* நாம் கொடுக்கும் பதார்த்தங்களை ‘ இல்லைங்க வேணா . வேற ஆளுங்க சமைக்கறத வாங்குறது இல்ல ‘ னு சொல்லும்போது கூனி குறுகி போகையில் , #எனக்கு வலித்தது.

இதெல்லாம் இந்த நாகரிக நகரத்தில் தான். சொல்ல முடியாத சில அவமானங்களை நான் குறிப்பிடவில்லை. கிராம புறங்களில் மட்டுமே நடப்பதாக நினைத்துக் கொண்டு நமக்கு நாமே மூடி அணிந்துக் கொண்டு அம்மணமாய்த் திரிகிறோம்.
Reservation வேண்டாம் என கொதிக்கும் ரத்தங்களுக்கு ஒரே ஒரு கேள்வி . நான் / நாங்கள் பட்ட/ படும் அவமானங்களை ஒரு நாள் நீங்கள் அனுபவித்திருந்தால் , சத்தியமாக உயிர் வாழ மாட்டீர்கள். ஒரு சமூகமே மலம் தின்று தன் பிள்ளைகளை மேலே தூக்கி விட்டிருக்கிறது. அரைக்கண்ணில் உங்கள் மலங்களை நீங்களே பார்க்கும் ஆட்கள் நீங்கள் . அதை அள்ளி வாயில் வைத்து தின்னும்படி உதைக்கப்பட்டவனின் வலி உங்களுக்குத் தெரியாது. உங்கள் மனைவியை / தாயை ஊரே சேர்ந்து தோலுரிக்கும் போது அதை துடி துடிக்கப் பார்த்து சாகும் வலி உங்களுக்குத் தெரியாது.
எங்கள் மேல் ஜாதி வாடை அடிப்பது தவறென்றால் , உங்கள் மேல் காம வாடையும் காவி வாடையும் கொலை வாடையும் வெறி வாடையும் அடிப்பது பெரும் தவறுதான்.

# சரி. பல்கலைக்கழக விஷயத்தில் என்ன செய்யப் போகிறோம்?

8 கருத்துக்கள்

 1. இந்து மதத்தில் பல மகான்கள் பிறந்தனர், பிறக்கின்றனர். அனைவரும், ஏன் கிருஷ்ணரும், அனைத்து உயிர்களும் சமம் என்று கூறினர். பாரதியார் போன்றோரும் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று கூறினார். அனைவரும் மதிப்பெண் க்கு மட்டுமே படித்தனர். நடைமுறையில் அதை செயல்படுத்தவில்லை.
  என்று திருந்துமோ இந்த சமுகம்.
  என்னுடைய அறிவுரை: நீங்கள் இதை பற்றி கவலை கொள்ளாமல் நன்றாக படித்து அவர்களுக்கு முன்னால் நன்றாக வாழ்ந்து காட்டுங்கள்.

  Like

 2. I too know much about your university, but, you have simply exaggerated a small issue, blown into infinite proportions with your willful imagination.

  All have been moving friendly together for many occasions, festivals and other gatherings, but, when SC and ST or for that manner any group wants to dominate or goes on harping that “we want everything as we are so and so”, then, naturally, the ther groups too assert such similar rights.

  As now students have been drawn circles around them, yet, they overlap, it is better to bring the centres together, s that the circles converge, instead go away.

  Like

  1. there is no point of exaggeration Mr. Vedaprakash. I don’t why people cant digest if something is highlighted. I have no profit in exaggerating things. ok fine, let me tell you that, leave my experiences. is the statement given by the faculty correct ? are only sc/st people study in tamil department?
   the current issue and my reaction over it is, the complete aggregation of many things happened around..

   you say that, if sc/st people go for groupism then naturally the opposite side people would do the same. yes! I agree.. but the beauty is, we don’t raise voice for anything.. that’s the only reason where our voices are not heard.

   you said u now much about this university. everything keeps on changing mister.. most of the smiles given hv changed into cruel wicked laughters. don’t give frame of picture to view something. I am actually inside the frame. I knw where am I travelling.. even your so called student society spits out venom when these types of castism or regionalism comes.. that’s an inevitable bitter part..

   Like

 3. பல்கலைக்கழகங்களில் SC,ST மாணவ மாணவியர் மீதான ஒடுக்குமுறைகளும் அடக்குமுறைகளும்
  புறக்கணிப்புகளும் மிகுந்த வருத்தத்திற்கும் கண்டனத்திற் குரியது.எதற்குக் கல்வி.சாதிகளைப் பேணவா ???

  Like

 4. இந்த பலகலைகழகத்தில் நானும் படித்தவன்தான். இதில் கடைசியில் உள்ள வார்த்தையை சொல்ல ஆதிக்க ஜாதி பறையர்களுக்கு பள்ளர்களுக்கு உரிமை இல்லை. காரணம். அங்கு படிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களில் 100க்கு 99 சதவீதம் பேர் அனைவரும் ஆதிக்க ஜாதியை சேர்ந்த பறையர்களும் பள்ளர்கலுமே ஆவர். அங்கு தப்பி தவறி அதே மலமள்ளும் சக்கிலியன் நுழைந்து விட்டால் அவனை சாதரணமாக விட்டுவைக்க மாட்டார்கள் மிரட்டி ஜாதியை சொல்லி திட்டி. கடும் பாணியில் அவனை வேலை செய்ய வைத்து. மேலும் சக்கிலியர்கள ஏதோ ஆதிக்க ஜாதி பறையர்களுக்கும் பள்ளர்களுக்கும் அடிபணிந்து தினக்கூலியை விட மிக மோசமாக நடத்தும் பறையர்கள் அங்குதான் இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு என்பது அணைத்து சமூக மக்களுக்குமே தவிர, அதே தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு மட்டும் ஆதிக்க பறையர்களுக்கும் பள்ளர்களுக்கும் மட்டுமே சேர்வதின் முக்கிய நோக்கம்? வருகின்ற பெறுகின்ற மாணாக்கர்களில், தாழ்த்தப்பட்டோரை தேர்வு செய்யும் இடத்தில் ஆதிக்க பறையர்களும் பள்ளர்களும் மட்டுமே இருப்பதால் தன்னுடைய ஜாதியை சேர்ந்தவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து சக்கிலியர்களை குறை காட்டி, மதிப்பெண் குறைவு என்று வேண்டுமென்றே மட்டம் தட்டுவது, நன்றாக உற்று பார்த்தால் அதற்கு பின் தெரியவரும் அங்கு சக்கிலிய மாணவர் எடுத்த மதிப்பெண்ணை விட மிக குறைவான மதிப்பெண்ணை பெற்று மிக சுலபமாக தேர்வாகும் தகுதியை பெற்ற ஆதிக்க ஜாதி பறையர்களும் பள்ளர்களும். ஜாதிவெறி ஜாதி இந்துக்களிடம் மட்டுமல்ல, ஜாதி வெறி பறையர்களித்திலும் உள்ளது என்பதற்கு மேலும் பல எடுத்துகாட்டுகள் உண்டு. அதனை வெளிக்கொண்டுவர சரியான ஆட்கள் இல்லை. காரணம் ஜாதி வெறியர்கள்

  Like

 5. I also studied here, I know very well rather than others……. Caste discrimination are there in each and every higher educational institutions………….PU is not an exception for that. out of 100% Scheduled Caste students 99% of them belongs to dominant dalits parayars and pallars in Pondicherry University or else entire higher institutions of Tamil Nadu and Pondicherry. More than the brahmins those dominant dalit-parayars pallars will be play on the marginalised dalit arunthathiyars life, unfortunately if anyone arunthathiyar joined………. This is terrible life…. Everybody that, more than caste hindus, these dominant dalits parayars pallars are doing the atrocities, caste discrimination on the oppressed people of arunthathiyars. especially rape, murder, honour killings against inter-caste marriage, rowdyism etc… One side we want fight against caste hindus. anaother side, we must want fight against dominant dalits, which is called as modern brahmins

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: