அரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சமூகம் தமிழகம் திராவிட அரசியல்

காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவனை தோற்கடிக்க காங்கிரஸ் வேட்பாளர் பாமகவுடன் ரகசிய பேரம்!

வி.சி.க தலைவர் தொல்.திருமாவின் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் எதிர்த்து போட்டியிடும் மணிரத்னம் என்பவரை பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். காங்கிரஸ், பாமக என மாறி மாறி வருபவர். இப்போது காங்கிரஸ் சார்பில் திருமாவளவனை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இப்போது அவர் பா.ம.க வின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து தனக்கு வாக்களிக்க பேரம் பேசி வருவதாகக் கேள்வி.

அரசியலில் தேர்தல் நேரத்தில் உருவாகும் கூட்டணிகள் இடையே வெளியில் சொல்லப்படாத சில ஒப்பந்தங்கள், நிர்பந்தங்கள் இருக்கும். இந்த திரைமறைவு பின்னணி வேலைகள் வாக்களிப்பின் போதும் விட்டுக்கொடுத்தல், பெறுதல் என வெளியில் தெரியாத உடன்பாடுகள் ஒப்பந்தங்கள் நிகழும். அப்படித்தான் புவனகிரி தொகுதியில் நடைபெறுவதாக கேள்வி. அதிமுக, திமுக, பாமக மூன்று கட்சி வேட்பாளர்களும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மொத்த வாக்குகளும் மூன்றாகப் பிரியும். இதில் விசிக வேட்பாளர் சிந்தனை அவர்கள் வெற்றி வாய்ப்புள்ளது என கணக்கிட்டுள்ளனர். இதனைத் தடுக்க (அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் மீது கடும் அதிருப்தி உள்ளதால்) இத்தொகுதியில் உள்ள பா.ம.க வினர் அனைவரும் தி.மு.க விற்கு மாற்றி வாக்களிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது திமுகவினரே வேண்டுமென்று கிளப்பிவிடுகின்ற தகவல் என்றும் ஒரு கருத்து உள்ளது.

தகவல்: Murugappan Ramasamy

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.