ஆவடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் மஃபா பாண்டியராஜன் மீது பணப்பட்டுவாடா செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவருடைய படம் போட்ட கவர்களில் 500 ரூபாய் நோட்டுக்களை வைத்து அதிமுகவினர் புதன்கிழமை இரவு பணப்பட்டுவாடா செய்ததாக வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.
