அரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம் திராவிட அரசியல்

“அண்ணாவையும் பெரியாரையும்கூட கைது செய்திருப்பார்கள்”!

இராஜபாளையம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஏ.குருசாமியை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி பேசினார். அதிலிருந்து…

“1965 முதல் 1967 வரை சென்னையில் உள்ள கல்லூரியில் நான் மாணவராக படித்த போது, அண்ணா, நெடுஞ்செழியன், கலைஞர் ஆகியோர் பேசுகிறார்கள் என்றால் அவர்களின் பேச்சைக் கேட்க மிகப் பெரிய கூட்டம் கூடும். ஆனால், தற்போது ஜெயலலிதாவும், கலைஞரும் வரும் கூட்டத்திற்கு ரூ.200 முதல் 300 வரை கொடுத்து ஆட்களை வரவழைக்கின்றனர். அதிலும் கூட பெண்கள் என்றால் ரூ.200, ஆண்களுக்கு ரூ.300 என்ற பாகுபாட்டுடன் திரட்டுகின்றனர். மத்திய காங்கிரசை எதிர்த்த போராட்டம், சாதிக்கு, மூட நம்பிக்கைக்கு எதிரான போராட்டம், சமூக நீதி, சமத்துவம் என மக்கள் மத்தியில் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கினர். இதனால் திராவிட இயக்கம் வளர்ந்தது. பின்பு, இரு கட்சிகளாக ஆனது. பின்பு, காங்கிரஸ் எதிர்ப்பை கைவிட்டனர். சமூக நீதியையும் கைவிட்டு, ஊழலில் திளைத்தனர் திமுக, அதிமுக தலைவர்கள். மாநில உரிமைகளுக்காக மத்திய அரசை எதிர்த்து போராடுவதை கைவிட்டு, பதவிக்காக லஞ்சத்தில் திளைக்கத் துவங்கினர்.

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுடன் கைகோர்த்தனர். இதனால், தற்போது சிபிஐ விசாரணையில் சிக்கியுள்ளனர். சாகித்ய அகாடமி விருது பெற்ற பெருமாள் முருகன் மூட நம்பிக்கைக்கு எதிராக புத்தகம் எழுதினார். அவர் மீது ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கூட்டம் தாக்குதலில் ஈடுபட்டது. திமுக, அதிமுகவும் அவருக்கு ஆதராவாக இல்லை. இதுவா தமிழகப் பண்பாடு? அவரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியது ஜெயலலிதாவின் காவல்துறை? பெரியாரும், அண்ணாவும் சாதிக்கும், மூட நம்பிக்கைக்கும் எதிராக ஏராளமான புத்தகங்களை எழுதினர். தற்போது, இருவரும் உயிரோடு இருந்தால், அவர்களையும் ஜெயலலிதாவின் காவல்துறையினர் ஜெயிலுக்கு அனுப்பியிருப்பார்கள்.

தமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக சங்கர் படுகொலை செய்யப்பட்டார். தற்போது அவர் மனைவிகௌசல்யா தற்கொலைக்கு முயன்றுள்ளார். தமிழக அரசு அவருக்கு உரிய நிவாரணம் கொடுக்கவில்லை. அவருக்கு ஆதரவாக செங்கொடி இயக்கமும், மாதர் சங்கமும், எல்.ஐ.சி ஊழியர்களும் 6 கட்சித் தலைவர்களும் உள்ளனர். இந்த ஆறு கட்சி கூட்டணி வெற்றி பெற்றால் சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும். இராஜபாளையம் பகுதியில் பஞ்சாலை, விசைத்தறி மற்றும் கைத்தறி தொழில் உள்ளன. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டபடியான பாதுகாப்பு இல்லை. வார விடுமுறை, மருத்துவ செலவு மறுக்கப்படுகிறது. கிராமப்புற பெண்கள், தங்களது திருமண செலவுக்கு பணம் சேர்க்க வேண்டும் என்பதற்காக பஞ்சாலைகளில் வேலை செய்கின்றனர். சிறிது காலத்தில் அவர்களது நுரையீரல்களில் பஞ்சு புகுந்து காச நோய் ஏற்பட்டு, உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இதனால், திருமணமும் செய்ய முடியாமல், வேலைக்கும் போக முடியாமல், எதிர்காலமே கேள்விக் குறியான நிலையில் உள்ளனர். அவர்களை பாதுகாக்க ஜெயலலிதா அரசு எதுவும் செய்யவில்லை. தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணி வெற்றி பெற்றால், தொழிலாளர்களுக்கான உரிமை, மருத்துவ செலவு, விடுமுறை, பாதுகாப்பு ஆகியவற்றை வழங்கும். தமிழக விவசாயிகளைப் பாதுகாக்க நெல்லுக்கு கட்டுப்படியான விலை வழங்கப்படும்.

வேட்பாளர் அ. குருசாமி தோழமைக் கட்சியினருடன்
வேட்பாளர் ஏ. குருசாமி தோழமைக் கட்சியினருடன்

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரபரணி ஆறு இராஜபாளையத்தின் அருகிலேயே வற்றாத ஜீவ நதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. பின்பு, ஏன் இங்கு குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. 50 ஆண்டுகளாக இரு கட்சி ஆட்சியில் தண்ணீர் இல்லை. வேலை இல்லை. தொழிற்சாலைகள் இல்லை. அவர்களின் கொடூர பசியால், கிரானைட் கொள்ளை பணம், மணல் கொள்ளை பணம், மது விற்ற பணம் ஆகியவற்றால் வயிறு நிரம்பியுள்ளது. ஆனால், சாதாரண ஏழை மக்களின் வயிறு காய்ந்த நிலையில் உள்ளது. அவர்களின் வயிறு நிரம்ப வேண்டுமெனில் இரு கட்சியினரையும் தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும். திமுக, அதிமுக இரு கட்சியினரும் லஞ்சப் பேர் வழியாக உள்ளனர். இவர்களிடமிருந்து தமிழகத்தை மீட்க நம்மிடம் உள்ள ஆயுதமான வாக்கை, விலை பேசமால் சரியாக பயன்படுத்த வேண்டும். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த கருணாநிதி, அதேபோல் 2 மாதத்திற்கு முன்பு வரை கொடநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதா ஆகியோர், தேர்தல் வந்ததால் மக்களை சந்தித்து வாக்கு கேட்க வந்துள்ளனர். ஆனால், 6 கட்சி கூட்டணி தலைவர்கள் அப்படியல்ல. எப்போதும் மக்களுக்காகவே பாடுபடுபவர்கள்”.

நன்றி: தீக்கதிர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.