இந்தியா இந்துத்துவம் மத அரசியல் மோடி அரசு

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து பிரக்யா சிங் எப்படி விடுக்கப்பட்டார்?

மலேகான் குண்டுவெடிப்பு!

கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது இரட்டை வெடி குண்டு தாக்குதல் நடத் தப்பட்டது. அதேபோல குஜராத் மாநிலம் மடோசா என்ற இடத்தில் அதே நாளில் ஒரு குண்டு வெடித்தது. மாலேகான் சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 80 பேர் காயமடைந்தனர். குஜராத்தில் நடந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்துத்துவ அமைப்புகளுக்குத் தொடர்பு:

2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் அபினவ் பாரத் என்ற இந்து மதவாத அமைப்புக்கு தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த அமைப்புக்கு மூளையாக பெண் சாமியாரிணி பிரக்யா உள்ளிட்டோர் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

பலவீனமான வழக்கு:

மகாராஷ்டிர மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்த ஹேமந்த் கார்கரே இந்த உண்மைகளை வெளிக் கொண்டு வந்தார். ஆனால், மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். அப்போது முதலே இவ்வழக்கின் விசாரணை திசைமாறியது. 2011-ல் தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அவர்கள் தலைமறைவாக இருந்த முதாலிக், லோகேஷ் சர்மா ஆகியோரை கைது செய்தாலும், சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினர்.

“பிரக்யாவுக்கு எதிரான சாட்சியங்கள் வலுவற்றவை”!

இவ்வழக்கு தொடர்பான விசாரணையை முடித்த, மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமை, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளியன்று தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில்தான்,  சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், சிவ நாராயண் கல்சங்கரா, சியாம் பவர்லால் சாகு, பிரவீண் தக்கல்கி, லோகேஷ் சர்மா, டான் சிங் சவுத்ரி ஆகிய 6 பேர் குண்டுவெடிப்புக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

குண்டுவெடிப்பில் பயன்படுத்தப் பட்ட மோட்டார் சைக்கிள், பிரக்யாவுடையது என்று மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் இந்த வாதம் பலவீனமாக இருப்பதாகவும், இந்த பைக்கை பிரக்யா பயன்படுத்தியதே இல்லை; மாறாக ராமச்சந்திர கலசங்கரா என்பவர்தான் பயன்படுத்தி வந்தார்; அவர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார் என்று கூறப்பட்டு உள்ளது.அதேபோல் பிரக்யாவுடன் கைது செய்யப்பட்ட கர்னல் புரோகித் மீதான குற்றச்சாட்டையும் கைவிடுவதாக புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. ஆகையால் பிரக்யா, கர்னல் புரோகித் ஆகியோர் இவ்வழக்கில் இருந்து விடுதலை ஆவது உறுதியாகி உள்ளது.

நன்றி: தீக்கதிர்

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.