அரசியல் ஊடகம் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம் விவாதம்

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்படி செய்யப்படுகின்றன?

தளவாய் சுந்தரம்

தளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்

எனக்குத் தெரிந்து நேற்று மாலையில் இருந்து எட்டு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. எட்டும் தமிழகத்துக்கு வெளியேயுள்ள ஊடகங்கள் செய்தவை. எப்படி இந்த சர்வேகள் எடுக்கப்பட்டன என்பது குறித்த விபரங்கள் எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் எதுவும் சொன்னதாகவும் தெரியவில்லை.

பொதுவாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்றால், சில இடங்களில் வாக்குச்சாவடிக்கு வெளியே நின்று, வாக்களித்து வருபவர்களிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டு, அதன்படி கணிக்கப்படுகிறது என்பதுதான் என் புரிதல். உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் என்றே கருதுகிறேன்.

ஆனால், இப்படி 232 (234?) தொகுதிகளில் ஒரே நாளில் சர்வே நடத்த வேண்டுமென்றால், ஒரு தொகுதிக்கு குறைந்தது 100 தரவுகள் என்றாலும்கூட, எத்தனை பேர் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இந்நிலையில், தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் எல்லாம் நிருபர்களை வைத்திருக்கும் லோக்கல் மீடியாக்கள்கூட, ‘எக்ஸிட் போல்’ நடத்தாத போது, மாநிலத்துக்கு ஒன்றோ இரண்டோ நிருபரை மட்டுமே வைத்திருக்கும் ஆங்கில ஊடகங்கள் எப்படி சர்வே நடத்துக்கின்றன என்பது, நேற்று மாலையில் இருந்து எனக்கு பதில் கிடைக்காத கேள்வியாக இருக்கிறது.

சரியாக எவ்வளவு ஓட்டு பதிவாகியுள்ளது என்பதைச் சொல்வதற்கு நாளைக் காலை வரை ஆகும் என்று ராஜேஷ் லக்கானி சொல்லிக்கொண்டிருக்கும் போதே, எக்ஸிட் போல் முடிவுகள் வரத் தொடங்கிவிட்டன என்பது இன்னும் ஆச்சர்யம்.

2011இல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவு ஒன்று, ஒரு நண்பர் மூலம் அப்போது எனக்குக் கிடைத்தது. அது ஞாபகம் வர, மின்னஞ்சலில் தேடி எடுத்து, இப்போது பார்த்தேன். அது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதை புரிந்துகொள்ள உதவியது. (ஆனால், இப்படித்தான் தற்போது வெளியாகியுள்ள சர்வேகள் செய்யப்பட்டுள்ளனவா எனத் தெரியவில்லை)

அந்த ‘கருத்துக் கணிப்பு முடிவு’ ஃபைலை இத்துடன் இணைத்துள்ளேன். பதிவான வாக்குகள், அமைந்துள்ள கூட்டணிகள் பலம் ஆகியவற்றைக் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தி. மு.க அணிக்கு 127 இடங்களும் அ. தி.மு.க அணிக்கு 107 இடங்களும் கிடைக்குமெனவும் ஒவ்வொரு தொகுதியிலும் யார் யார் வெற்றி பெறுவார்கள் எனவும் வாக்கு வித்தியாசத்தோடு இந்த ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.

நேரமிருப்பவர்கள் டவுன் லோட் செய்து பார்க்கலாம். இதிலிருந்து நான் புரிந்துகொள்வதெல்லாம், கணிப்புகள் தவறாவதும் சரியாவதும், சர்வே செய்தவர்கள் திறமை சம்பந்தப்பட்ட விஷயமில்லை. எல்லாமே சாத்தியப்பாடுகள் சம்பந்தப்பட்டதுதான் என நினைக்கிறேன்.

பொதுவாக ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ ஓர் அலை இருந்தால் கணிப்புகள் கிட்டத்தட்ட சரியாக வாய்ப்புகள் உள்ளது என்று சொல்லப்படுகிறது. ஆனால், களத்துக்கு சென்றால்தானே அப்படியிருக்கும் அலையை உணர முடியும். அலுவலகத்துக்குள், மேசையில், பழைய தரவுகள் வைத்து, கணிப்புகளை உருவாக்குபவர்களால் எப்படி அலைகளை உணர முடியும்? இதனுடன் இணைக்கப்பட்ட சர்வே பொய்த்துப்போனதுக்கு இதுதான் காரணம் என நினைக்கிறேன்.

கணித புலிகள் யாராவது இது குறித்து எழுதியிருந்தாலோ எழுதினாலோ படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

தளவாய் சுந்தரம், ஊடகவியலாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.