இலக்கியம் சினிமா புத்தக அறிமுகம் பொழுதுபோக்கு

சம்பளம்தான் தரலை; புத்தக வெளியீட்டுக்குக் கூட அழைக்கக்கூடாதா ?!: மிஷ்கினின் உதவி இயக்குநர் கேட்கிறார் 

மிஷ்கினின் இயக்கத்தில் வெளியான நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், யுத்தம் செய், பிசாசு ஆகிய படங்களின் திரைக்கதை புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. பேசாமொழி பதிப்பகத்தின் இந்த புத்தகங்கள் மதுரையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டன. இந்நிலையில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் பணியாற்றிய  Sri Ganesh தன்னுடைய முகநூலில் தனது கருத்தொன்றை இட்டிருக்கிறார். அதில்,

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்களின் உழைப்பு மிகப்பெரியது. அந்த படத்தின் கதை ஆரம்பத்திலிருந்து, Pre production, பல பொருளாதார நெருக்கடிகளில் நடந்த படப்பிடிப்பு, எல்லாவற்றிலும் உதவி இயக்குநர்கள் இரவு பகலாக உழைத்தோம். நரேஷ், பாலாஜி, சீனிவாசன் மூவரும் கதை விவாதத்தில் நிறைய பங்கெடுத்தனர். நரேஷ் வேலைப்பளுவால் ஆஸ்பத்திரியில் 1 வாரம் கிடந்தார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைக்கதையை மிஷ்னின் எழுத, முழுக்க தமிழில் தட்டச்சு செய்தது நான்.

படம் ரிலீஸுக்கு பின் நடந்த வெற்றி விழாக்கள் துவங்கி இந்த திரைக்கதை புத்தக வெளியீட்டு விழா வரை எங்கள் யாருக்குமே அழைப்பு இல்லை (சம்பளம் தரவில்லை என்பது தனிக்கதை). கமர்ஷியல் சினிமா என்றாலும் மாற்று சினிமா என்றாலும் வண்ண விளக்குகளுக்கு பின் சினிமாவில் உதவி இயக்குநர்கள் போன்ற உதிரி தொழிலாளர்களின் நிலை இது தான். 🙂

மற்றபடி, இதை பேசாமொழி பதிப்பகம் மூலம் வெளியிடும் அருண் அண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: