சமூக நீதி சமூகம் சாதி அரசியல் தலித் ஆவணம்

முதுகுளத்தூரில் தொடரும் சாதி வன்மம்!

திவ்ய பாரதி

கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதுகுளத்தூர் அருகே உள்ள கடலாடி என்கிற ஊரில் ஊராட்சி மன்ற பொது கழிப்பறை செப்டிக் டேங்கை சுத்தம் செய்கையில் பாலமுருகன் என்கிற தொழிலாளி விசவாயு தாக்கி உயிரிழந்தார். அது குறித்து கடலாடி காவல் நிலையம் உரிய பிரிவுகளின் கீழ் FIR பதியவில்லை . இது தொடர்பாக இறந்து போனவரின் மனைவியுடன் கடந்த இரண்டு நாட்களாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம், sp அலுவலகம், முதுகுளத்தூர் dsp அலுவலகம் என்று முறையிட்டு வந்தோம். அதை ஒட்டி இன்று முதுகுளத்தூர் dsp fir இல் உரிய பிரிவுகளின் கீழ் பதிவதாக உறுதி அளித்தார். (அப்படி பதியப்பட்டால் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் fir இல் சேர்க்கப்படும்.)

நான் மதுரை வந்து விட்டேன். அந்த குடும்பத்தினர்(சக்கிலிய சமூகத்தை சேர்ந்தவர்கள்) தேவர் சாதி ஆதிக்கம் மிக்க அந்த ஊரில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு, தேவர் சமூகத்தை சேர்ந்த 10 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்று அவரின் மனைவியை கடுமையாக மிரட்டி சென்றுள்ளனர். நாளை காலை காவல் நிலையம் வந்து அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்று விடும் படியும் இல்லையேல் இந்த ஊரில் வாழ விட மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளனர்.

மலக்குழிக்குள்ள தள்ளி ஒரு உசுர வாங்கிபுட்டு இப்ப அந்த குடும்பத்தையும் ஒண்ணுமில்லாம ஆக்க சாதி வெறி கும்பல் கிளம்பிருச்சு…

திவ்ய பாரதி, வழக்கறிஞர்; சமூக செயல்பாட்டாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.