இந்தியா இந்துத்துவம் சர்ச்சை செய்திகள் மத அரசியல்

2017 ஆண்டு உத்தரபிரதேச தேர்தலுக்காக ‘முசாஃபர் நகர்’ போன்ற வன்முறை தாத்ரியில் திட்டமிடப்படுகிறதா?

NATASHA SINGH

கதை சற்றே வேறுபட்டாலும் இரண்டுக்குமான திரைக்கதை ஒன்றே. ஆனால் கதை நிகழ்விடம் டெல்லிக்கு அருகாமையில் இருக்கும் மேற்கு உத்தர பிரதேசம். ஆண்டு முந்தையது 2013-2014, பிந்தையது 2016-2017. ஆர் எஸ் எஸ் தொடர்புடைய அமைப்புகள், தாத்ரியில் ஒரு அப்பாவி மனிதரின் வீட்டில் நுழைந்து அவரை அடித்துக் கொண்ட சம்பவத்திலிருந்து விலகவில்லை.

மாநில அரசின் அறிவுறுத்தலையும் மீறி தாத்ரியில் மகாபஞ்சாயத் கூடியிருக்கிறது.  மாட்டிறைச்சி உண்டார்கள் எனக்கூறி முகமது அக்லக் குடும்பம் குறித்து, வெறுப்பைத் துண்டும் பேச்சு அப்போது பேசப்பட்டன. 20 நாட்களுக்கும் முகமது அக்லக்கின் உறவினர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும், அக்லக் கொலைக்காக கைது செய்யப்பட்ட 17 பேர் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அரசுக்குக் கெடு விதித்திருக்கிறது மகா பஞ்சாயத். ஒரே இரவில் அங்கே பதட்டமான சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது, வழக்கம்போல முதலமைச்சர் யாருக்கும் சங்கடம் வரக்கூடாது என அமைதியாக இருக்கிறார்.

இந்தப் பிராந்தியத்தை ஆர் எஸ் எஸ் அமைப்புகள்  பிளவுபடுத்தவும் வகுப்புவாதத்தை கையெடுக்கவும் பயன்படுத்திய லவ் ஜிகாத் என்பதற்குப் பதிலாக இப்போது மாட்டிறைச்சி பயன்படுத்தப்படுகிறது. ஆனால், செயல்திட்டம் ஒரேமாதிரியானதே. அக்லக்கின் குடும்பம் மாட்டிறைச்சி உண்டது என கோயிலிலிருந்து வந்த யாரோ ஒரு பெயர் தெரியாத இளைஞனின் அறிவிப்பை வைத்து, ஒரு கும்பல்  அவர் வீட்டுக்குக்குள் பாய்ந்து அவரை அடித்துக் கொல்கிறது; அவருடைய மகன் கடுமையாக தாக்கப்பட்டு மாதக் கணக்கில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வைக்கப்படுகிறார். பயந்துபோன குடும்பத்திலிருக்கும் மற்ற உறுப்பினர்கள், தங்களுடைய பாதுகாப்புக்காக அரசிடன் உதவி கேட்கிறார்கள்.

 

உள்நாட்டிலும் வெளிநாட்டிலிருந்தும் இருந்து கிளம்பிய எதிர்ப்புகள் தற்காலிகமாக விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் தாத்ரிக்குள் (குறைந்தபட்சம் வெளிப்படையாகவாவது. ) நுழைய தடை ஏற்படுத்தப்படுகிறது. தடவியல் அறிக்கை கைப்பற்றப்பட்ட இறைச்சி, ஆட்டிறைச்சிதான் என்று கூறின. நீதிக்கான சாத்தியமில்லாதபோதும் அந்தக் குடும்பத்துக்கு  தற்காலிகமாக இந்த விவகாரம் தணிந்ததாகத் தோன்றியது.

விஸ்வ ஹிந்து பரிஷத்தும் முசாஃபர் நகர் சம்பவத்தின்போது தோன்றிய இன்னும் சில அமைப்புகளும் ஊடகங்களின் கண்களில் படாமல் தாத்ரியில் முகாமிட்டிருந்தன, வகுப்புவாத சம்பவங்களை கையாள்வதற்கு திராணியற்ற சமாஜ்வாதி அரசால் இதைத் தடுக்க முடியவில்லை. முசாஃபர் நகர் கலவரத்தின்போது அங்கே வருகைத் தந்த முலாயம் சிங் யாதவ், அதிகாரத்தில் இருக்கிறவர்கள் ஒத்துழைக்க மறுப்பதால், இந்த சூழலை கையாள முடியாமல் தனது மகன் தவிப்பதாகத் தெரிவித்தார்.

முசாஃபர் நகரில் பரப்பட்ட வகுப்புவாத விஷம், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு உத்தரபிரதேசத்தின் எல்லாத் தொகுதிகளிலும் வெற்றியை அள்ளிக் குவித்தது. சட்டப் பேரவைத் தேர்தலுக்காக பாஜக தாத்ரியின் மூலம் பிளவுபடுத்தும் சூழ்ச்சியில் இறங்கியிருப்பதாக சமாஜ்வாதி கட்சியிலிருந்து காங்கிரஸ் வரை அனைத்து கட்சிகளும் சொல்கின்றன.

தாத்ரிக்கும் முசாஃபர் நகர் சம்பவத்துக்கும் ஏராளமான ஒற்றுமைகள்  உள்ளன.

  1. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் முசாஃபர் நகரும் அதை ஒட்டியுள்ள கிராமங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. ஜாட் இனத்தவரும் முஸ்லீம்களும் அதுவரை ஒற்றுமையாக வாழ்ந்தும் பணியாற்றியும் வந்த கிராமங்களில் ‘லவ் ஜிகாத்’ பரப்புரை மூலம் விஷத்தை திட்டமிட்டுத் தூவினார்கள். பெண்களை கேலி செய்த இரண்டு இளைஞர்களைக் கொன்றதாக ஜோடிக்கப்பட்ட பொய்யான விடியோவைக் காட்டி பஞ்சாயத்துகளையும் மகா பஞ்சாயத்துகளையும் கூட்டினார்கள். அந்த விடியோக்கள் பாஜக தலைவரால் பரப்பட்டது என பின்னால் கண்டறியப்பட்டது. தாத்ரியில் மாட்டிறைச்சிக்கு எதிரான பரப்பப்பட்டது. ஒரு கொலைக்கார தாக்குதல், மாநிலத்தை மட்டுமல்ல, நாட்டையே அச்சம் கொள்ள வைத்தது. வடக்கு உத்தரபிரதேசத்தில் சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழ்வதாக உள்ளூர் தலைவர் ஒத்துக்கொள்கிறார்கள்.

  2. முசாஃபர் நகரிலும் தாத்ரியிலும் தாக்குதலுக்கு உள்ளானவர்கள், தங்களுக்கு நன்கு பரிட்சையானவர்களாலே தாக்கப்பட்டிருக்கிறார்கள். முசாபர் நகரில் அறிமுகப்படுத்தப்பட்ட வகுப்புவாத வன்முறையின் பாதை, தாத்ரியிலும் பின்பற்றப்பட்டிருக்கிறது.

  3. இன்னொரு குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால் முசாபர் நகர் வன்முறை நகரத்திலிருந்து கிராமங்களுக்குப் பரவியது. தாத்ரியில் கிராமத்திலிருந்து தொடங்கியது. இரண்டு பகுதிகளும் டெல்லிக்கு அருகில் வருபவை, கிரேட்டர் நொய்டாவுக்கு அடுத்து இருக்கிறது தாத்ரி.

  4. முசாஃபர் நகர் வன்முறை உ.பியில் புதிய முறையை உருவாக்கியது. இந்த வன்முறை சம்பவங்களில் கொல்லப்பட்டவர்கள் குறைவு; ஆனால் அதிக அளவில் அச்சத்துடன் முஸ்லீம்கள் இடம் பெயர்ந்தனர். கிராமங்கள் வெறிச்சோடிப் போயின. இதேபோன்ற பயத்தை தாத்ரியிலும் காணமுடிகிறது. இங்கே வசிக்கும் குடும்பங்கள் இந்த இடத்திலிருந்து அமைதியான இடத்தை நோக்கிப் போய்விடாலாமா என பார்த்திருக்கிறார்கள்.

  5. மாவட்ட அதிகாரிகளின் ஆதரவில் முசாஃபர் நகரில் நடந்த பஞ்சாயத்து, மகா பஞ்சாயத்துகளில் வன்முறையைத் தூண்டும் வெறுப்பு பேச்சுகள் பேசப்பட்டன. தாத்ரியிலும் அதே போன்ற மகாபஞ்சாயத்து நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த முறை மாவட்ட அதிகாரிகளின் எதிர்ப்பும் 144 தடை உத்தரவும் அங்கே பிறப்பிக்கப்பட்டிருந்தது.

  6. முசாஃபர் நகர், தாத்ரி சம்பவங்களின் போது அகிலேஷ் யாதவின் அரசு கைக் கட்டி எல்லாவற்றையும் செய்வதறியாது பார்த்துக்கொண்டிருந்தது. அல்லது காங்கிரஸ் சொன்னதுபோல உடந்தையாக இருந்தது என்றும் சொல்லலாம்.

சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அங்கிருக்கும் மக்களிடையே வகுப்புவாத பிளவை உண்டாக்கவே தாத்ரியில் ஒரு குழப்பமான சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இதுவரை பொருட்படுத்தி சொல்லக்கூடிய எவ்வித எதிர்வினையும் காங்கிரஸ், பகுஜன் சமாஜ்வாதி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எவரிடமிருந்து வரவில்லை.

நன்றி: சிட்டிசன் டாட் காம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: