அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டா நகரத்தில் ஓரினச் சேர்க்கையாளர் விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
“தீவிர’ கருத்துகளில் நம்பிக்கையுடையவரின் நடவடிக்கையாகத்தான் இதைப் பார்க்கிறோம். மேற்கொண்டு விசாரித்து வருகிறோம்” என்று தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறை தெரிவித்துள்ளது.