கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகே பிளாச்சிமடாவில் நிலத்தடி நீரை உறிஞ்சி, நீரை மாசுபடுத்திய கோககோலா நிறுவனத்தின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2005-ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்தின் விளைவாக இந்த நிறுவனம் மூடப்பட்டாலும், இன்னனும் இந்த பகுதிகளில் நீர் குடிக்க பயனற்றதாகவே இருக்கிறது.

இரவலா என்ற ஆதி திராவிடர் பிரிவைச் சேர்ந்த மக்கள் இந்தப் பகுதியில் அதிகம் வசித்து வருகின்றனர். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வன்கொடுமை சட்டத்தின் படி அவர்களின் நீராதாரத்தை மாசுபடுத்துவம் குற்றமாகும். அந்த வகையில் காட்மியம், லெட், ஆர்செனிக் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும் மாசுக்களை நீராதாரங்களில் கலந்த குற்றத்துக்காக கடந்த வெள்ளிக்கிழமை கோககோலா நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Mathi Vanan

கேரளாவின் பாலக்காட்டில் உள்ள பிளாச்சிமடாவில் இயங்கிவந்த கோக் கம்பெனி அப்பகுதியின் நீரை அதீதமாக உறிஞ்சியதுடன் மாசுபடுத்தவும் செய்தது. மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக 2005ல் அத்தொழிற்சாலை மூடப்பட்டது. பின்னர், சிக்கலான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தன.

அட்டவணைச் சாதியினர் தேசிய ஆணையம் கொடுத்த நெருக்கடியின் காரணமாக, கேரளாவின் உள்துறை கோக் கம்பெனி மீது வன்கொடுமைச் சட்டப் பிரிவின் கீழ் (SC & ST Prevention of Atrocities Act- 1989, Section 3.13) வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுபோன்ற வழக்கு ஒரு தொழில்நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்படுவது இதுதான் நாட்டில் முதல் முறையாகும்.

சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினர்களின் நீராதாரத்தை மாசுபடுத்துவது அவர்களின் வாழ்க்கையை அழிப்பதாகும். மேற்படி சட்டம் இதற்கான வாய்ப்பை அளித்திருந்போதும், அது பயன்படுத்தப்படுவதில்லை. இந்த வழக்குப் பதிவு மேலும் பல வழக்குகளுக்கான கதவைத் திறந்துவிடும்.

தலித் மக்கள் வாழும் பகுதிகளுக்கு சாக்கடையைத் திருப்புவதும், அவர்களின் இருப்பிடத்தில் நகர்புர குப்பைகளைக் கொட்டுவதும்/ எரிப்பதும், அவர்களின் நீராதாரங்களைக் குடிமைக் கழிவுகளால் மாசுபடுத்துவதும் நாடெங்கும் தொடர்கிறது.

பிரபுத்துவ சாதிக் கட்டமைப்பின் மீது நிற்கும் முதலாளியச் சுரண்டலை வீழ்த்துவதற்கும், தலித் மக்களின் போராட்டப் பாதையை முன்னெடுக்கவும் மேலும் பாடுபடுவோம்.