மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சில நாட்களுக்கு முன் கணபதி என்பவர், தனது மகன் 18 வயது மகன் ராஜேந்திர பிரசாத்தை ஆம்புலன்ஸ் மூலம் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக  அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

300 ரூபாய் கொடுத்தால்தான் ஸ்டெரச்சரை தள்ளுவேன்  என்று அடம்பிடித்த ஊழியர், உள்நோயாளிகளுக்கான அனுமதிச் சீட்டை வாங்கி வந்தால் தான் சிகிச்சை அளிப்பேன் என்று அலட்சியம் காட்டிய மருத்துவர் உள்ளிட்டோரின் இரக்கமற்ற செயல்களால் அந்த இளைஞர் உயிரிழந்தார்.

இதனிடையே டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் சென்னை பதிப்பில் வெளியாகியுள்ள செய்தியின்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், எந்தெந்த வேலைகளுக்கு எவ்வளவு எவ்வளவு லஞ்சம வாங்கப்படுகிறது என்பதை பற்றிய “அதிகார பூர்வமற்ற பட்டியல்”  வெளியாகியுள்ளது. அதனை இங்கே தமிழ்படுத்தி வழங்கியுள்ளோம்.

*வீல் சேர் / ஸ்ட்ரெச்சர் தள்ளுவதற்கு – ஐம்பது ரூபாய்

*கர்ப்பிணி பெண்களை குளிக்க வைக்க / எனீமா அளிக்க / ஷேவ் செய்ய – நூறு ரூபாய்

*பிறந்த குழந்தையை குளிப்பாட்ட – ஐநூறு ரூபாய்

*அறுவை சிகிச்சைக்கு முன்பான ஸ்கேன்– இருநூறு ரூபாய்

*பிணத்தை வார்டிலிருந்து, மார்ச்சுவரிக்கு எடுத்து செல்ல – ஐநூறு ரூபாய்

*பிணத்தை சுத்தம் செய்ய – ஆயிரம் ரூபாய்

*பிணத்தை உறவினர்களிடம் அளிக்க- முன்னூறு ரூபாய்

13_06_2016_004_043_011.jpg