இலக்கியம் புத்தக அறிமுகம்

“மிகையுணர்ச்சியில் திளைக்கும் குமர குருபரனின் மரணம்”: லக்‌ஷ்மி மணிவண்ணனின் சர்ச்சை பதிவு

இயல் விருது பெற்ற குமரகுருபரனின் மரணத்தை மிகையுணர்ச்சியில் காட்டுவதாக லக்‌ஷ்மி மணிவண்ணன் எழுதிய முகநூல் பதிவு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. லக்‌ஷ்மி மணிவண்ணன் எழுதியது:

குமர குருபரனை நான் ஒரு கவிஞராகக் கருதவில்லை.அதற்கு அவர் கவிதைகள் இடம் தருபவையும் அல்ல.இதனை அவரிடமும் தெரிவித்திருக்கிறேன்.

அவரைப் பற்றிய பிற நண்பர்களின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவரது தொகுப்புகளை மிகுந்த எதிர்பார்ப்புடன் படித்தேன்.அவரது குணாதிசயங்கள் எனக்கு கவர்ச்சியை ஏற்படுத்துபவையாக இருந்ததை ஒட்டியே அவர் கவிதைகள் பற்றி எழுத வேண்டும் எனவும் எண்ணியிருந்தேன்.அவர் என்மீது மிகுந்த மதிப்பு கொண்டவராகவும் இருந்தார்.எனக்கு அவருடைய எழுத்துக்கள் பொருட்படுத்தும் தன்மையில் கூட இல்லை என்பதை அறிந்த பின்னரும் மதிப்பு கொண்டிருந்தார்.படித்த பின்னர் அவற்றைப் பற்றி எழுதும் திட்டத்தையே கைவிட்டேன்.

அவர் ரசனை உணர்ச்சி கொண்டவர்தான்.திரையிசைப் பாடல்களில் தேர்ந்த லயிப்பு அவருக்கு இருந்தது.பாடல்களை தேர்ந்து கேட்கும் தன்மைக்காக ,அந்த பாடல்கள் எனக்கும் இசைவானவையாக இருந்ததை முன்வைத்து அவர் முகனூலில் செயலிழந்து போகின்ற தருணங்களிலும் கூட பாடல்களை போட வருமாறு கேட்டிருக்கிறேன்.அதனை அனுசரித்து அவர் பாடல்கள் பலவற்றை பகிர்ந்திருக்கிறார் .பல ஊக்கமூட்டும் செயல்களை அவர் செய்திருக்கிறார். ராஜ மார்த்தாண்டன் விருதை அவர் மறுத்ததை பாராட்டியிருக்கிறேன்.அது பற்றி எழுதவும் செய்தேன்.அதுவும் கூடத்தான் எனக்கு அவர் கவிதைகளை படிக்கும் ஆர்வத்தைத் தந்தது.

அவரது எழுத்துக்கள் துணுக்குத் தன்மை கொண்ட சுய புலம்பல்களை அடிப்படையாகக் கொண்டவை.துணுக்கும் சுயபுலம்பல்களும் எப்போது கவிதையாகிறது என்பதை அறியும் பிராசையையும் அவர் கொண்டிருக்கவில்லை.அதனை அவ்வாறே கிளர்த்தலாம் என்பதே அவரது இலக்கு. அவரது ருசியுணர்ச்சி,ரசனை எவற்றுடனும் ஒட்டாது அவரது எழுத்துக்கள் தாழக்கிடந்தன.சிலர் ஆரம்பத்தில் இவ்வாறு எழுதினாலும் கூட பின்னாட்களில் மாற்றம் உண்டாகும் ,உண்டாகலாம் என்பது போல தோன்றும்.அந்த எண்ணத்தைக் கூட அவரது தொகுப்புகள் எனக்கு ஏற்படுத்தவில்லை.ஒருபோதும் இவர் கவிஞனாகும் வாய்ப்பே கிடையாது என்கிற எண்ணத்தையே அவரது தொகுப்புகள் எனக்கு உறுதிப்படுத்தின.

அவர் கவிதைகளை புகழக் கேட்கும் போது புகழுபவர்களுக்கு கவிதை இன்னதென தெரியவில்லையோ என்று சந்தேகித்திருக்கிறேன்.நீங்கள் பிறதுறை சார்ந்து மலிவான ரசனை கொண்டவராக இருந்தால் உங்கள் மதிப்பீட்டின் பேரில் ஒருவருக்கு ஏற்படும் சந்தேகம் அது.எனது சந்தேகத்தை விக்ரமாதித்யன் அண்ணாச்சியிடம் சமீபத்தில் ஒருமுறை பகிர்ந்தேன்.குமர குருபரன் மீதான புகழ்ச்சி கவிதைக்காக அன்றி வேறு காரணங்களுக்காக அமைகிறதோ என்றும் தோன்றியிருக்கிறது. அந்த காரணங்கள் எனக்கு அறிமுகமற்றவை தேவையற்றவையும் கூட்.

இவருக்கு இயல் விருது அறிவிப்பைப் பார்த்ததும் இவருக்கு ஏன் அறிவித்திருக்கிறார்கள் என்றே பட்டது.ஒரு விளையாட்டு வீரனை ஒரு மருத்துவன் என்று மாற்றிச் சொல்ல முடியுமா? வீரன் எத்தகைய சாகசங்களை நிகழ்த்தினாலும் கூட ! ஒரு மருத்துவனை ,நடிகன் என்பீர்களா? இயல் விருது பிற தூண்டுதல்களின் அடிப்படையில் இயங்குகிறதோ என்கிற சந்தேகம் இந்த பின்னணியில் ஏற்படுவது இயற்கையே .யாரையோ திருப்தி கொள்ளச் செய்ய சம்பந்தம் இல்லாத வேறு காரியம் நடைபெறுவதைப் போல.

பிரான்சிஸ் கிருபா,ஷங்கர் ராமசுப்ரமணியன்,யவனிகா ஸ்ரீராம்,ஸ்ரீ நேசன் ,கண்டராதித்தன் போன்ற கவிகள் புழங்குகிற ஒரு மொழியில் இவர்களையெல்லாம் தாண்டி குமர குருபரனைப் போன்ற கவியல்லாத ஒருவருக்கு ஒரு பெறுமதி போய் சேருகிறதென்றால் நிச்சயம் அது வேறு புறம்பான நோக்கத்தின் அடிப்படையைக் கொண்டதாகத் தானே இருக்க முடியும்?.இயல் விருதுக்கு இவர் பெயரை தேர்வு செய்தவர்கள் யார் என்பதை இயல்தான் விளக்கவேண்டும்.இல்லை இயல் விருதின் பின்னணியில் நடைபெறும் விஷயங்கள் என்ன?

கவிதைத் தொகுப்பை வெளியிடும் அனைவருமே கவிகள்தான் என்று இந்த தமிழ்ச் சமூகம் கருதுமேயானால் எனக்கு அதில் மறுப்பில்லை.ஆனால் மக்கள்த் தொகையில் பாதியை கவிகளின் எண்ணிக்கையாக கணக்கில் வைக்க வேண்டி வரும்.

குமர குருபரன் குணாதிசயத்தால் என்னையும் கவர்ந்தவர்தான்.நகுலனைப் போன்ற ,விக்ரமாதித்யனைப் போன்ற சேட்டைகளில் அவரும்தான் ஈடுபட்டார்.அதற்காக அவர் விக்ரமாதித்யனும் இல்லை.நகுலனும் இல்லை.”கள்ளு குடித்தவனெல்லாம் கண்ணதாசனும் இல்லை ,தாடி வைத்தவனெல்லாம் தாகூரும் இல்லை என்றொரு சொலவடை உண்டு.அது போலத்தான் இதுவும்.

தாஸ்தேவெஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் மது விடுதியில் அமர்ந்து “நான் தான் இயேசு என்று அறைகூவல் விடுகிற ,பின்னர் குதிரை வண்டி விபத்தில் பலியாகும் கதாபத்திரத்தைப் போன்ற காவியக் கதாபாத்திரம் குருபரன்.காவிய சோகங்களையும் உள்ளடக்கியது குருபரனின் மனவுலகு.அதற்காக கவியென்க வேணாம்.அது மரணத்திற்கும் நன்மை பயக்காது .மரணமடைந்தவருக்கும் ,அவரது ஆன்மாவிற்கும் நன்மை பயக்காது.

அவர் வாழும் காலத்தில் சிலருக்கு நன்மை செய்திருக்கலாம் ஒருவேளைக் கேடுகளும் செய்திருக்கலாம்.எது கருதியும் இல்லாத புகழாரத்தில் அவரைச் சறுக்கவைக்காதீர்கள்.மரணத்தை சரியான ஒரு திக்கில் எதிர்கொள்வதுதான் ஆன்மாவிற்கு அழகு . அனுமதியுங்கள்.நீங்கள் செய்கிற காரியங்களில் நிச்சயமாக அவருக்குப் பங்கில்லை.

மேலும் மிகையுணர்ச்சிகளைத் தாங்கும் வல்லமை மரணத்திற்குக் கிடையாது.

இந்தப் பதிவிற்கு வந்த பின்னூட்டங்கள்:
Sundara Pandian //மரணத்தை சரியான ஒரு திக்கில் எதிர்கொள்வதுதான் ஆன்மாவிற்கு அழகு// அருமை.. உண்மை…

Ammachatram Saravanan நேற்றிலிருந்து கவிஞனின் மரணத்திற்காக அழுதுகொணடிருக்கிறேன். அய்யா மணிவண்ணா இப்டியெல்லாம் உண்மையைப் பேச உம்மால்தான் முடியுமய்யா. ஆனாலும் நான் அழாமலிருக்க முடியாது.

Praveenkumar Leo மணிவண்ணன் என்ற பெயரை பொணந்திண்ணி னு மாற்றிக்கொள்ளுங்க
பொருத்தமா இருக்கும்…

வேலை தேடுபவன் This post not required at this time

கே. என். சிவராமன் காத்திரமான சிறுபத்திரிகை ஆள் போல இருக்கிறதே என்று குமரகுருபரன் குறித்து லஷ்மி மணிவண்ணன் எழுதியிருப்பதை பார்த்ததும் தோன்றலாம். அப்படி நினைப்பவர்கள் ஓர் எட்டு லஷ்மி மணிவண்ணனின் டைம் லைனுக்கு சென்று பாருங்கள். ஜேப்பியாருக்கு அஞ்சலி செலுத்தி அவர் எழுதியிருக்கும் நிலைத்தகவலை நிறுத்தி நிதானமாக படியுங்கள். மறைந்த எழுத்தாளர் விக்கிரமனால் அவரும் விக்கிரமாதித்தனும் ஜேப்பியாருக்கு அறிமுகமாகி இருக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளாக இவர்கள் இருவருக்கும் ஜேப்பியார் பொருளாதார ரீதியாக உதவி வந்தாராம். சிலாகித்து கண்ணீர் மல்க கசிந்து உருகி இருக்கிறார். ‘நல்ல மனிதர்‘ என புகழ்ந்திருக்கிறார். ‘நாங்க எல்லாம் வேற லெவல்…‘ என உதார் விடும் பல சிறுபத்திரிகை இலக்கியவாதிகளின் உண்மையான முகம் இப்படித்தான் பல்லிளிக்கிறது. இவர்கள் எப்பொழுதெல்லாம் அறம் சார்ந்து பேசுகிறார்களோ அப்பொழுதெல்லாம் அது conditions applyதான்.
Annam Sinthu Jeevamuraly காரியக்கிறுக்கும் கபடக்கிறுக்கும் ஓன்று சேர்ந்த இந்துத்துவ போதைக்கலவை அரசியலாக வரிந்து கொண்டிருப்பவர் இந்தாள் ஜெயமோகனையும் போன்று வளர்ந்து வருகிறார்
Suseela Anand இந்த சாதி நீக்கம், இடைநீக்கம், ஊரு விட்டு நீக்கம் னு எல்லாம் பண்றாங்களே அந்த மாதிரி Lakshmi Manivannan ங்கிற இந்த ஆள தள்ளி வைக்க எழுத்துலகம் யோசிக்க கூடாதா? 😦
Sai G Murugan நீயே ஒன்ன கவிஞன்னு போட்டுக்கீறயே, அத்த எத்தால அடிக்க? த்த்தூ சாவு வூட்ல சரக்குக்கு சைடிஸ் கேக்குது. சாவு எல்லாத்துக்கும் வரும். ஒன்க்கும்ம்ம், பிரிபோஸ்ட்மாட்டம் எழ்தீடப்போறாங்கோ,

Karur Kittu வாழ்த்த வக்கில்லை என்றால் வாயை மூடுவது உசிதம். எரிச்சல் அதிகமாக இருந்தால் நவதுவாரத்திலும் மிளகாய்ப்பொடி அப்பிக்கொள்ளுங்கள்.

Krishna Thanushkodi அஞ்சலிக் கட்டுரை என்றாலே பொதுவாக சொறிந்துவிடுவதாக இருக்கவேண்டும் என்று பொதுப்பார்வை இங்குள்ளது.

Sajeeth Amsajeethஉங்கள் விமர்சனத்தை கொண்டு குப்பையில் போடுங்கள். இதெல்லாம் ஒரு விமர்சனமா? நீங்களும் செத்துப்போனால் கூடியிருந்து உமது விமர்சனம் பற்றி விமர்சிப்பதா? உமது மரண ஓலங்களை கேட்பதா? இதுதான் இலக்கியம் கற்றுத்தந்த பண்பாடா? அல்லது குமரகுருபரன் மாதிரி மதுவில் இருந்து எழுதினீரா? கால நிலையின் தன்மையினை கற்றுத்தராத உங்களது எழுத்துக்களை சாக்கடையில் போடும். அவன் உயிருடன் இருக்கும் போது பேசுவதற்கு நாதியில்லை மரணித்ததன் பின்பு நீர் பப்ளிக்சிட்டி ஆவதற்கு விமர்சனமா… போவீரா வாயில் வந்திடப் போகுது… தூ….
முகநூலில் எழுத்தாளர்கள் சிலரின் கண்டனங்கள்:
எத்தன பேர்றா ஒங்களத் தவர எவரும் கவிஞர் இல்லன்னு சொல்வீங்க? தமிழ்நாட்டுல லூசனுங்க கூடிப்போய்ட்டானுங்க. கடிச்சு வச்சுறுவானுங்களோன்னு பயமாக் கெடக்கு
ஒரு முற்றிய வன்மம் பிடித்த மன நோயாளியின் எழுத்து எப்படி இருக்குமென்பதற்கு உதாரணம் கவிஞர் குமரகுருபரனின் மரணம் குறித்து லஷ்மி மணிவண்ணன் எழுதியிருப்பது. வாழ்நாளில் பெரும் பகுதியை நக்கிப் பிழைத்து கடத்தி வரும் ஒருவருக்கு வாழ்வை கொண்டாட்டமாக பார்த்த மனிதன் கசக்கத்தான் செய்வான்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.