அரசியல் இந்திய பொருளாதாரம் இந்தியா

இந்திய வறுமையின் வரைபடம்…

சு. இரவிக்குமார்

ravikumar srirasa
சு. இரவிக்குமார்
இது 2010 ல் இந்தியாவில் நிலவிய வறுமையின் வரைபடம். பீகார், சத்தீஷ்கர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள். மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஒரிஸ்ஸா, ஜார்க்கண்ட், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் 35 -40 சதவீத மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள். மேற்கு வங்கம், அருணாசலப் பிரதேசத்தில் 25-35 சதம் மக்கள் வறுமையின் பிடியில் இருக்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்ரா, கர்னாடகா, மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், உத்தரகண்ட், மேகாலயா, நாகலாந்து, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் 15-25 சதம் அதாவது கால்வாசி வறுமையின் பிடியில் இருக்கிறார்களாம். ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல், பூடான், கோவா, கேரளா, புதுச்சேரி, டெல்லி, டாமன், டையூ ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்தான் வறுமையின் பிடி சற்றுத் தளர்ந்து 15 சதத்துக்குள் கீழ் உள்ளது. 2010 ல் வரையப்பட்ட இந்தச் சித்திரத்தில் அத்தனை பெரிய மாறுதல்கள் இந்த ஆறு ஆண்டுகளில் ஏற்பட்டிருக்காது. அதைவிட மோசமாகவேண்டுமானால் மாறியிருக்க வாய்ப்புள்ளது.

மேலும் இந்த வறுமையின் சித்திரமென்பது, அரசாங்கம் வகுத்துள்ள வறுமைக்கோடு வரையறையின் படியே தயாரிக்கப்பட்டிருக்கும். அதாவது உச்சநீதிமன்றத்தில் திட்டக்குழு சொல்லியது நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.32ம் கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ 26 ம் சம்பாதிக்கிறவர்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் போய்விடுவார்கள்.

அந்த வகையில் பார்த்தால் இந்த சித்தரிக்ப்பட்ட வறுமையின் சித்திரம் எத்தனை போலியானது என்று தெரிந்து விடும். நிச்சயம் இதைவிட இரண்டு மடங்குக்கும் மேலேயே வறுமைக் கோட்டின் உண்மையான சித்திரம் சென்று விடும். ஒருநாளைக்கு ரூ.26 இல் வாழ்வதற்கு கிராமப்புற மக்களும், ரூ.32ல் வாழ்வதற்கு நகர்ப்புற மக்களும் அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களால் வரையறை செய்யப்பட்டுள்ளார்கள்.

இத்தகைய வறுமையின் பொருள் என்னவென்றால், இந்திய மக்கள் எவ்வாறு ஒட்டச் சுரண்டப்பட்டு, செல்வம் இருநூறு முந்நூறு பணக்காரர்களிடம் குவிக்கப்படுவதற்கான சமூக ஏற்பாடு இது என்பதே.

அதிலும் இந்தியாவின் மேல்வலது கால்ப்பகுதியில் வறுமையின் ஆட்டம் மிக மோசமாக உள்ளது. இந்தி படித்தால் இந்தியாவெங்கும் வேலைக்குப் போய்ப் பிழைக்கலாம் என்று கதைவிடுபவர்கள் இத்தகைய சித்திரத்தை மறைத்தே கதைவிடுகிறார்கள். பீகாரிகள் உள்ளிட்ட வட மற்றும் வட்கிழக்கு மாநிலத்தவர் ஏன் கும்பல் கும்பலாக குடும்பம் குடும்பமாக ரயிலேறி, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னகப் பகுதிகளில் புதியவகைக் கொத்தடிமைகளாக மாறுகிறார்கள் என்பதற்கான காரணம் அங்கு நிலவும் அதீதமான வறுமைதான்.

இத்தகைய தேசத்தின் பிரதமர்தான் இத்தகைய ஏழை மக்களிடம் கசக்கிப் பிழிந்த வரிப்பணத்தில், ரூ.2000 கோடிக்குத் தமது பயணத்திற்காக 2000 பேருக்கான உணவு மற்றும் நவீன வசதிகளோடு விமானம் வாங்கப் போகிறார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாரத் மாதா கீ ஜெ!

சு. இரவிக்குமார், எழுத்தாளர். ஸ்ரீரசா என்ற பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: