சமூக ஊடகம் சர்ச்சை

“தீய்ஞ்சு போன மூஞ்சி” : சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் குறித்த விமர்சனத்துக்கு நிறவெறியுடன் எதிர்வினை

அண்மையில் கைது செய்யப்பட்ட சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷை விடுதலை செய்யக்கோரியும் அவரை சிறையில் அடித்த காவல்துறையினரைக் கண்டித்தும் சமூக வலைத்தளங்களில் மக்கள் ஆதரவாக எழுதிவருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: யார் இந்த பியூஸ் மனுஷ்?

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிருபா முனுசாமி, தன்னுடைய முகநூலில் பியூஸ் மனுஷ் குறித்து கீழ்கண்ட பதிவை பகிர்ந்திருந்தார்:

பியூஷ் குறித்து சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் தொடர்ந்து எழுதிவருவதை அமைதியாகவே கவனித்து கொண்டிருந்தேன். ஆனால், நண்பர் ஒருவர் இன்று வான்காரி மாத்தாய் எனும் மிகப்பெரும் சூழலிய போராளியோடு ஒப்பிட்டு எழுதியதை பார்த்து என் மௌனத்தை உடைக்க கடமைப்பட்டிருக்கேன்.

இன்று பியூஷ் மானுஷ் என்று பெயர் கொண்டுள்ளவரின் பழைய பெயர் பியூஸ் சேத்தியா! சேத்தியா என்றால் என்னவென்று யாரும் குழம்ப வேண்டாம், அது நீங்கள் யூகித்ததுப் போல அவரின் ஜாதி பெயர் தான். அவர் பெயர் மாற்றியதில் தவறில்லை. ஆனால், அந்த முற்போக்கு சிந்தனை ஆனந்த விகடனில் விளம்பரப்படுத்தப்பட்டதை தான் நான் கேள்வியெழுப்புகிறேன்.

என் சொந்த ஊரான சேலத்தில் வசிப்பவர் தான் அவரும். அத்தோடு, நான் சட்டக் கல்லூரியில் படிக்கும் போது அவர் அலுவலகத்தில் சில மாதங்கள் பணிபுரிந்திருக்கிறேன்.

அவரை ஏதோ இந்த பூவுலகை காக்க வந்த பரமாத்மா போன்ற அளவில் பெரிதாக கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் அப்படி என்ன செய்தார்? ஆமாம், சேலம் மூக்கன்னேரி என்னும் ஏரியை சீரமைத்ததாக பலரும் பாராட்டுகின்றனர். ஆனால், அதை அவர் மட்டும் செய்தாரா? பல நபர்களின் உழைப்பு பலனை, அவர் ஒருவர் மட்டும் அபகரித்துக் கொண்டார்.

மூங்கில் வீடுகள் செய்து வெள்ளத்தில் வீடிழந்தவர்களுக்கு அனுப்பி வைத்தார். சரி, அவருக்கு எங்கிருந்து அவ்வளவு மூங்கிலும் கிடைத்தது. நான் அறிந்து, என் கல்லூரிக் காலம் முதலே அவர் மூங்கில், மண்புழு வியாபாரம் செய்து வந்தார். அப்போதும் கூட, அவருக்கு மூங்கில்கள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.

அதுமட்டுமல்லாது, நான் அவர் அலுவலகத்தில் பணியாற்றிய போதும் சரி, அதற்கு முன்னரும் சரி, ஒரு தகவல் அறியும் மனுவை கூட அவர் பெயரில் அனுப்ப மாட்டார். நான் இருந்தபோது, என் பெயரில் தான் அனுப்ப வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவார். காரில் வந்துப்போகும் சுகவாசி, நான் வேலைப் பார்த்தக் காலத்திற்கு ஊதியமும் தரவில்லை.

ஏதேனும் போராட்டம் இருப்பின், கலந்துகொண்டு கைது என்று வரும்போது காணாமல் போய்விடுவார். இதுஎதுவும் அறியாது, அப்பாவியாக நானும் என் பெயரில் பலவற்றை எழுதி அனுப்ப, அவருடன் தொடர்பில் இருந்தவர்களும், என்னை அங்கே வேலைக்கு சேர்த்துவிட்டவரும் அதன் விளைவுகளை விவரித்து என்னை எச்சரித்தனர்.

இவையனைத்திற்கும் மேல், அவரிடம் வேலை பார்த்த அனைத்து பெண்களுக்கும், நான் உட்பட அவரின் நடத்தையின் மீது கண்டிப்பாக புகார் உண்டு. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், ஆந்தை மட்டும்தான் சாகும் வரையிலும் ஒரு ஆணோடு உறவு கொள்ளும், நாமெல்லாம் ஆந்தைகள் இல்லை என எனக்கு நாசுக்காக ஒரு கதை சொன்னார். அந்த கதை எதற்காக சொன்னார் என்பதை நான் விளக்கத் தேவையில்லை. இதற்குமேல், நான் எதுவும் கூறவும் விரும்பவில்லை.

அவர் இப்போது கைது செய்யப்பட்டதும் கூட, இத்தனை காலமும் அடுத்தவர்களை மாட்டவிட்டு தப்பித்ததன் வினை என்றே கருதுகிறேன்.

ஒருவர் எப்படி ஜாதி ஒழிப்பு, மத ஒழிப்பு பேசிக் கொண்டு வீட்டில் எத்தனை கொடூரமான ஆணாக இருந்தாலும் அது அவரின் தனி விஷயம் என்பது போல அந்நபரின் ஆணாதிக்கம் இயல்பாக கடந்து செல்லப்படுகிறதோ, அதேபோல தான் இச்சம்பவத்திலும் நடக்கிறது.

சூழலியலாளர் என்ற போர்வையில் ஒருவர் இயற்கையையும், பலரின் உழைப்பையும் சுரண்டலாம், ஆணாதிக்கத்தோடு பணிக்கு வரும் பெண்களிடம் எத்தனை மோசமாகவும் நடந்து கொள்ளலாம், ஏன் ஜாதிவெறியோடு கூட இருக்கலாம்.

ஏனெனில், இவை எதுவும் அறியாத ஒரு கூட்டம் சூழலியலாளர் என்ற ஒரே காரணத்திற்காக அந்நபரை வான்காரி மாத்தாயை விட பெரிய போராளி என பட்டம் சூட்டிக் கொண்டாடும்.

பியூஷை சூழலியலாளர் எனக் கொண்டாடும் அனைவருக்கும் என் கேள்வி இதுதான்: இயற்கையை சுரண்டி தன்னை வளர்த்துக்கொள்வதற்கு பெயர் பூவுலகின் மீதான நேசமா?

இந்தப் பதிவுக்கு பலர் ஆதரவும் எதிர்ப்பும் அவருடைய பதிவிலேயே தெரிவித்துள்ளனர். பியூஸ் மனுஷை ஆதரிப்பவர்கள் எதிர்கருத்தால் பேசிக்கொண்டிருக்கும் போது, ஹரிபிரசாத் என்பவர் நிறவெறி தொனியில் மிகவும் கீழ்த்தரமான பின்னூட்டம் ஒன்றை இட்டிருக்கிறார். அதைக் கீழே தந்திருக்கிறோம்.

தீஞ்சி போன மூஞ்சி. பியூஷ் உனக்கு பாலியல் கொடுமை கொடுத்தவுடனேயே நீ அவருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கலாமே . ஒரு லாயரான உனக்கு அதை கூட மற்றவர் சொல்லி கொடுக்க வேண்டுமா. பியூஷின் ஜாதி ஹேத்தியா என்று நீ எதற்கு? அவரின் ஜாதி பெயரை குறிப்பிட வேண்டும். பியூஷ் சேலத்தில் உள்ள நீர்நிலைகளை சுத்தப்படுத்தியது எல்லாம் தனியாக செய்யவில்லை, பலர் செய்தார்கள் என்று சொல்கிறாய். உண்மை தான். ஆனால் சேலத்திலேயே பிறந்து, வளர்ந்த அந்த மண்ணிற்கு என்று எதுவுமே செய்யயாமல் தண்டமாகவே அழியும் பலருக்கு மத்தியில் ராஜஸ்தானில் பிறந்த இவர் இந்த அளவு ஏன்? தமிழகத்திற்கு செய்து இருக்கிறார். நீ இந்த மண்ணிற்கு என்று செய்து கிழித்தது என்ன?

சென்னை, கடலூர் வெள்ளத்தின் பொழுது இவர் பல நூறு மூங்கில் படகுகளை தான் உருவாக்கிய மூங்கில் காட்டின்னில் இருந்து இலவசமாக செய்து கொடுத்ததை இவர் மூங்கில் வியாபாரம் செய்பவர் என்று கொச்சையாக சொன்னாய். பாலைவனம் போல் இருந்த தர்மபுரி பகுதியில் பசுமையான 100 ஏக்கர் காட்டை இவர் உருவாக்கியது மூங்கில் வியாபாரம் செய்யவா?. உன் அறிவை கண்டு நான் வியக்கிறேன். சென்னை தாம்பரம் அருகே என் நண்பர்கள் குழு பியூஸ் போன்றே ஒரு காட்டை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். அதற்கு ஐடியா கொடுத்த என் சகோதரி தேவிகா அழகான முகம் உள்ள. தீஞ்சி போன மூஞ்சி புரிகிறதா. அழகான முகம் உள்ள பெண். பியூஸ் ஒரு ஜென்டில் மேன் என்றே சகோதரி தேவிகா என்னிடம் சொல்லியுள்ளார்

அவருக்கு ஆதரவு பெருகி வரும் நேரத்தில். தமிழக அரசாங்கதிற்கு நெருக்கடி வரும் நேரத்தில் நீ இவ்வாறு சொல்வது பச்சை பொய் என்பது மூளை உள்ள அனைவருக்கும் தெரியும். நீ இந்த பிழைப்பு பிழைப்பதற்கு ஹை கோர்ட் வாசலில் பிச்சை எடுக்கலாம்.

பொதுவாக பெண்கள் ஏதேனும் குற்றச்சாட்டைச் சொன்னால், அதற்கு எதிர்வினை என்பது அந்தப் பெண்ணையே கலங்கப்படுத்துவதாகவே இருக்கும். ‘இப்போது ஏன் சொல்ல வேண்டும்; நீ என்ன ஒழுங்கா; தீய்ஞ்சு போன மூஞ்சி” இன்னும் வார்த்தைகளை சேர்த்துக் கொள்ளலாம்.  இப்படியே தான் சமூகம் பெண்களின் பிரச்சினைகளை அணுகிக் கொண்டிருக்கிறது. வன்மமாக பின்னூட்டம் இட்ட ஹரிபிரசாத், தனது முகநூலில் கிருபா முனுசாமியின் படத்தைப் போட்டு மீண்டும் ‘தீய்ஞ்சு போன மூஞ்சி’ என எழுதுகிறார். அதற்கு பலர் நிற, சாதி வெறியுடன் பின்னூட்டமிடுகிறார்கள். முகநூல் புகாருக்குப் பிறகு இந்தப் பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.