இந்தியா இந்துத்துவம் மத அரசியல்

மாட்டிறைச்சி விற்றதாகக் கூறி இஸ்லாமியப் பெண்களை போலீஸ் முன்னிலையில் அடித்து, உதைத்த ‘பசு ரட்சகர்கள்’!

காவலர்கள் முன்னிலையில் இரண்டு இஸ்லாமியப் பெண்களை ‘பசு ரட்சகர்கள்’ என்று கூறிக்கொள்ளும் கூட்டத்தினர் அடித்து, உதைத்தனர். இந்தச் சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலத்தின் மந்த்சர் ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது. செய்தி ஊடகங்களின் பதிவின்படி,  ‘அதிக அளவிலான’ மாட்டிறைச்சியை ரயில் விற்பனைக்குக் கொண்டு சென்ற இரண்டு இஸ்லாமியப் பெண்களை கைது செய்ய காவல்துறை ரயில் நிலையம் வந்தது. இந்தத் தகவல் அறிந்து வந்த, ஹிந்து தள் என்ற அமைப்பினர், இந்தப் பெண்களை காவல்துறையினர் முன்னிலையில் ‘கௌ மாதா கீ ஜெ’ என சொல்லிக்கொண்டே அடித்து, உதைத்தனர்.

இதை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களிலும் பரவ விட்டுள்ளனர். அரை மணி நேரம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். காவல்துறை இந்தத் தாக்குதலை தடுத்த நிறுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தப் பெண்களிடம் கைப்பற்றிய 30 கிலோ இறைச்சியை சோதித்து பார்த்ததில் அது எருமை மாட்டின் இறைச்சி என தெரியவந்துள்ளது. ஆனாலும் இவர்கள் மீது காவல்துறை அனுமதி இல்லாமல் இறைச்சி விற்றதாக குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது. அவர்களைத் தாக்கியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: